இமெயில் மூலம் இணையத்தளம் படிக்கலாம் வாங்க..
சில கம்பெனிகளில் இமெயில் மட்டுமே பயன்படுத்தும் படி கட்டுப்பாடுகளை வைத்து இருப்பார்கள். இதனால் நாம் நமக்கு பிடித்தமான அல்லது நாமக்கு அவசரமாக இணையத்தளங்களை பார்க்க வேண்டும் , படிக்க வேண்டும் என்றால் முடியாமல் தவிப்போம். இந்த பிரச்சினைகளை போக்கி இணையத்தளங்களை இமெயில் மூலம் படிக்கும் வசதியை செய்து தருவதற்கு என்று ஒரு இணையத்தளம் உள்ளது. www.webtomail.co.cc இந்த இணையத்தளத்திற்கு சென்று நாம் படிக்க வேண்டிய இணைத்தளத்தின் முகவரியை சப்ஜெக்டாக டைப் செய்து , நமது இமெயில் முகவரியில் இருந்து www.webtomail.co.cc என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி வைக்க வேண்டும். உதாரணமாகwww.google.com என்ற முகவரியை நாம் பார்க்க வேண்டும் என்றால்www.google.com என்று இந்த முகவரியை இமெயிலின் சப்ஜெக்டாக டைப் செய்து அனுப்ப வேண்டும்.நாம் அனுப்பிய சிறிது நேரத்தில் நாம் அனுப்பிய இணையத்தளத்தின் பக்கங்களை HTML வடிவில் நமது இமெயிலுக்கு அனுப்பி வைப்பார்கள். நாம் அதனை படித்தோ பார்த்தோ தெரிந்து கொள்ளாலாம். என்ன
நண்பர்களே உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமல்லவா...
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home