போட்டோக்களை எடிட் செய்ய மற்றும்மொரு மென்பொருள்
புகைப்படங்களை எடிட் செய்ய வேண்டுமெனில் எதாவது ஒரு போட்டோ எடிட்டரின் உதவி நமக்கு வேண்டும். அனைவரும் அறிந்த ஒரு போட்டோ எடிட்டிங் மென்பொருள் என்றால் அது போட்டோசாப் மட்டுமே. இதில் மட்டும்தானா போட்டோக்களை எடிட் செய்ய வேண்டும். இல்லை உங்களுக்கு விருப்பமான எந்த போட்டோ எடிட்டர்களில் வேண்டுமானாலும் போட்டோக்களை எடிட் செய்து கொள்ளலாம், ஆனால் அவை யாவும் மிகச்சிறப்புடையதாக இருப்பதில்லை போட்டோசாப் அளவிற்கு எந்த மென்பொருளும் இல்லை என்றால் நாம் ஒத்துக்கொள்ள தான் வேண்டும். அதற்காக எப்போது போட்டோசாப் மென்பொருளையே நம்பி இருக்கவும் கூடாது. போட்டோசாப் மென்பொருளுக்கு மாற்று மென்பொருள் ஏதாவது சந்தையில் உண்டா என்றால் நிறைய போட்டோ எடிட்டிங் மென்பொருள்கள் உள்ளது ஆனால் அவை யாவும் சிறப்புடையதாக இல்லை. போட்டோசாப் மென்பொருளுக்கு இணையான போட்டோ எடிட்டிங் மென்பொருள் ஒன்று உள்ளது.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ள வேண்டும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து பயன்படுத்தவும் வழக்கமாக பயன்படுத்தப்படும் போட்டோ எடிட்டிங் மென்பொருள்களை விட இந்த மென்பொருள் மிகவும் சிறப்புடையதாகும். இது அளவில் சிறயதாகும், 4 எம்.பி அளவுடையதாகும். 50 க்கும் மேற்பட்ட எபக்ட்ஸ் இந்த மென்பொருளில் உள்ளது.
போட்டோசாப் இல்லாத நேரத்தில் இந்த மென்பொருளானது உங்களுக்கு கைகொடுக்கும். நீங்கள் வேண்டுமானால் போட்டோக்களை மேலும் அழகுபடுத்த விரும்பினால் clipart, frame, texture, stamp, brush style போன்ற டூல்ஸ்களை இணையத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன் போட்டோக்களை மிகவும் சிறப்பாக எடிட் செய்ய முடியும். விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் இந்த மென்பொருளானது முழுமையாக வேலை செய்கிறது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home