தொடர்பு முகவரிகளை (contacts) எப்படி நம் நண்பர்களின் மெயில் முகவரிக்கு அனுப்புவது என கீழே காணலாம்.
தற்போது கணினி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இதில் குறிப்பாக செய்தி பரிமாற்றத்திற்கு மெயில்களை பயன்படுத்துவது அதிகரித்து கொண்டே போகிறது. கூகுள் வழங்கும் மெயில் நிறுவனமான ஜிமெயிலை பெரும்பாலனாவர்கள் உபயோகித்து கொண்டு இருக்கிறோம். இந்த ஜிமெயிலில் நம் கணக்கில் உள்ள தொடர்பு முகவரிகளை (contacts) எப்படி நம் நண்பர்களின் மெயில் முகவரிக்கு அனுப்புவது என கீழே காணலாம்.
- முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
- அடுத்து உங்கள் ஜிமெயில் பக்கத்தில் உள்ள Contacts லின்க்கை க்ளிக் செய்யவும்.
- அடுத்து வரும் விண்டோவில் உங்கள் கணக்கில் உள்ள அனைத்து முகவரிகளும் உங்களுக்கு வரும். அதில் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவேண்டிய முகவரிகளை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- தேர்வு செய்து கொண்டு More actions என்ற பட்டனை க்ளிக் செய்து அதில் வரும் Export என்ற வசதியை க்ளிக் செய்யவும்.
- அடுத்து வரும் விண்டோவில் Export என்ற பட்டனை தேர்வு செய்து கொண்டு உங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள்.
- Export பட்டனை அழுத்தியதும் நீங்கள் தேர்வு செய்த அனைத்து முகவரிகளும் உங்கள் கணினியில் டவுன்லோட் ஆகும்.
- இப்பொழுது வழக்கம் போல Compose mail அழுத்தி டவுன்லோட் செய்த பைலை attach செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பலாம்.
- நீங்கள் அனுப்பிய .csv பைலை உங்களின் நண்பர் முகவரியில் சேர்க்க முதலில் Contacts - More actions - import சென்று நீங்கள் அனுப்பிய பைலை தேர்வு செய்து Import க்ளிக் செய்தால் நீங்கள் அனுப்பிய முகவரிகள் அவரின் கணக்கில் சேர்ந்து விடும்.
- இது போல சுலபமாக உங்கள் தொடர்பு முகவரிகளை உங்கள் நண்பர்களுக்கு சுலபமாக அனுப்பலாம்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home