Wednesday 30 July 2014

இலவசமாக பில் போட ஒரு சாப்ட்வேர்….!

நம்மில்  தொழில் செய்துவரும் அனைவருக்கும் பில் என்பது எவ்வளவு முக்கியமானது என்பது தெரியும். பெரிய அளவில் மற்றும் நடுத்தர அளவில் தொழில் செய்பவர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பில் போட்டு தருவதற்காக பில் புக்குகளை அச்சடித்து வைத்திருப்பார்.
ஆனால் அனேகம் தொழில்களுக்கு பில் புக் என்பது பயன்படாது. ஏனென்றால் நீங்கள் ஆன்லைனில் ஒருவருக்கு டேட்டா என்ட்ரி அல்லது வெப் டிசைனிங் போன்ற வேலைகளை முடித்து தருகிறீர்கள் அல்லது எதோ ஒன்றிற்கு ட்ரையினிங் தருகிறீர்கள் என்றால் அவர்கள் கட்டிய பணத்துக்கு அத்தாட்சியாக பில் போன்று ஏதாவது கேட்பார்கள் அல்லவா?
அதற்கென்று நம்மால் தனியாக பில் புக் அடிப்பது என்பது இயலாத காரியம். நமக்கு தற்போது ஆன்லைனிலேயே பில் போட்டு பிரின்ட் எடுத்துக்கொள்ளும் சேவை இலவசமாகவே கிடைக்கின்றது. இந்த சேவையை பயன்படுத்தி நாமே பில் போட்டுக்கொள்ளளலாம் அல்லது PDF ஆக டவுன்லோட் செய்துகூட வாடிக்கையாளருக்கு மெயில் மூலமாக அனுப்பிவிடலாம்.

சிறப்பம்சங்கள்

  • எவ்வளவு பொருட்களை வேண்டுமென்றாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
  • எவ்வளவு பில் வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளலாம்
  • பிரின்ட் எடுத்துக்கொள்ளலாம் மற்றும் PDF ஆக டவுன்லோட் செய்தும் கொள்ளலாம்
  • இன்டர்நெட் கனெக்சன் மட்டும் இருந்தால் போதும், எங்கிருந்து வேண்டுமென்றாலும் இந்த சேவையை உபயோகிக்க முடியும்.
இந்த சேவையினை உபயோகிக்க இங்கே கிளிக் பண்ணவும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home