உங்கள் செல்போன் ஒரிஜினலா?
இந்திய அரசாங்கத்தால் கடந்த நவம்பர் மாதம் இறுதியோடு செல் போனில் IMEI (International Mobile Equipment Identification) எண் இல்லாத அல்லது போலியான IMEI எண்களை உடைய போன்களுக்கான சேவை நிறுத்தப்படும் என்ற ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆனால் இது எந்த அளவிற்கு செயல்படுத்தப் பட்டுள்ளது என்பதைப் பற்றிய தகவல் என்னிடம் இல்லை.
குறைந்த விலைக்கு அதக வசதிகளுடன் விற்பனைக்கு வருகின்ற சைனா மொபைல்களில் IMEI எண் போலியானதா என்கிற சந்தேகம் வருவது நியாமானதுதான். IMEI எண் என்பது குறிப்பிட்ட மொபைல் போன் தயாரிப்பாளர்களால் குறிப்பிட்ட மாடல் போன்களின் எண்ணிக்கை மற்றும் பயனாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உருவாக்கப் பட்டதாக இருக்கலாம். இது 15 இலக்க எண்ணாகும். நமது செல்போனில் சரியான IMEI எண் உள்ளதா எனக் கண்டறிய என்ன செய்யலாம்.
உங்கள் மொபைல் போனில் *#06# என டைப் செய்தால் உங்கள் போனிற்க்கான 15 இலக்க IMEI எண் திரையில் வரும். இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு IMEI என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் IMEI எண்ணை டைப் செய்து 53232 என்ற எண்ணிற்கு SMS செய்தால் Success என பதில் வந்தால் உங்கள் போன் ஒரிஜினல் (இந்த வசதி இந்தியாவூக்கு மட்டுமே).
ஒரு சில சமயங்களில் இது சரியாக வேலை செய்யாமல் போனால், இதை ஆன்லைனிலும் சோதிக்க சுட்டி கீழே தரப்பட்டுள்ளது. ஆன்லைனில் உங்கள் போனை குறித்த மேலதிக விவரங்களும் தெளிவாக தரப்படுகிறது.
http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home