Friday 19 November 2010

உறுப்பினராகாமலே எந்த இணையத்தளத்திலும் நுழையலாம் எப்படி



இணையத்தளத்தில் நாம் எதையாவது அவசரமாக தேடிக்கொண்டு இருப்போம் நாம் தேடிய தகவல் உள்ள இணையத்தளத்தை நான் கிளிக்கினால் 'உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த இணையத்தளத்தை பார்க்க அனுமதி உள்ளது.' என்று வரும் , அதில் உறுப்பினராக வேண்டுமெனில், இமெயில் முகவரி அளித்து , இன்னப்பிற தகவல்களை அளித்து , அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதற்குள் நாம் தேடிய விசயமே மறந்துவிடும். சில சமயம் அறியாத இணையத்தளங்களில் நமது மெயில் முகவரியை அளித்தால், அது ஸ்பாம்மர்களின் கையில் சிக்கி, நாம் வெற்றிலை பாக்கு வைத்து ஸ்பாம்மர்களை அழைத்தது போல் ஆகிவிடும். இது போன்ற சிக்கல்களை தீர்க்க இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம் நீங்கள் http://www.bugmenot.com/ இந்த இணையத்தளத்திற்கு சென்று நாம் உறுப்பினர் ஆகா வேண்டிய இணையத்தள முகவரியை அளித்தால், அவர்கள் இலவச ஐ.டி மற்றும் பாஸ்வேர்டு அளிப்பார்கள் . உதாரணமாக நாம் www.tamilwire.com முகவரிக்கு சென்று புதிய படங்களை டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் அதற்க்குUsername , Password அளித்தால், தான் படங்களை டவுன்லோட் பண்ண முடியும் ஆனால் நாம் நான் கூறிய இந்த இணையத்தளத்திற்கு சென்று நாம் படங்களை டவுன்லோட் பண்ண இருக்கும் www.tamilwire.com என்ற இத இணையத்தளத்தின் முகவரியை கொடுத்தால் அவர்கள் நமக்கு இலவச Username மற்றும் Password கிடைக்கும் அதை பயன்படுத்தி உள்ளே நுழையலாம் . இதனால் அவசத்தேவையின் போது இதனை பயன்படுத்தி நாம் ஆபத்து இல்லாமல் இணையத்தளங்களை பயன்படுத்தலாம் நேரத்தையும்
மிச்சப்படுத்தலாம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home