Tuesday 5 April 2011

பூட்டுவதற்கு[ Lock செய்ய ] நாம் எமது கணணியின் முகப்புத்திரையில்[ Desktop ]ஒரு ShortCut ஒன்றை எவ்வாறு உருவாக்கிப் பயன்படுத்தலாம்

நாம் கணணியில் வேலை செய்துகொண்டிருக்கும் போது அவசரமான ஒரு வேளையில் அதாவது வேண்டப்படாத அவசரமான வேளைகளில் பிறரிடமிருந்து எமது ஆவணங்களை பாதுகாப்பதற்காக உடனே கணணியை பூட்டுவதற்கு[ Lock செய்ய ] நாம் எமது கணணியின் முகப்புத்திரையில்[ Desktop ]ஒரு ShortCut ஒன்றை எவ்வாறு உருவாக்கிப் பயன்படுத்தலாம் என்பதே இப்பதிவின்
நோக்கமாகும்.

இதற்காக நீங்கள் கீழே உள்ள படிகளை செய்தால் போதும்.





முதலில் உங்கள் முகப்புத்திரையில் வைத்து Right Click செய்து புதிய ShortCutஒன்றை உருவாக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.



இப்போ ஒரு விண்டோ தோன்றும். இதிலே உள்ள இடைவெளியில்rundll32.exe user32.dll,LockWorkStation என்பதைக் கொடுத்து NEXT என்பதை அழுத்தவும்.



இப்போ தோன்றும் விண்டோவில் lock.exe என்று அல்லது உங்களுக்கு விரும்பிய பெயரை .exeஎன்பதுடன் சேர்த்துக் கொடுத்து Finish என்பதைக் கொடுங்கள்.



இப்போ நீங்கள் உருவாக்கிய ShortCut ஆனது முகப்புத்திரையில் காணப்படும். இலகுவில் இனங்காண இதற்கு பொருத்தமான icon ஐ வழங்கவேண்டும். இதற்காக; உருவாக்கப்பட்ட ShortCut இன்மேல் Right Click செய்து Propertiesஎன்பதைத் தெரிவுசெய்து அதிலே ShortCut என்பதை கிளிக்செய்து Change Icon என்பதை தெரிவுசெய்யவும்.



இப்போ தோன்றும் விண்டோவில் Shell32.dll என்பதை காட்டிய இடத்தில் கொடுக்கும்போது கீழே உள்ள பகுதியில் File icon ஒன்று தோன்றும்.



அதனை கிளிக் செய்யும்போது பல Icons தோன்றும். இவற்றில் விரும்பியதை தெரிவு OK கொடுக்கவும்.


இப்போ கணணித்திரையை Lock செய்வதற்குரிய ShortCut ஐ உருவாக்கப்பட்டுவிட்டது. இனிமேல் அவசரமாக Lock செய்யவேண்டிய தேவையின்போது இதனை கிளிக் செய்யவேண்டியதுதான்.......

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home