Google Chrome 11
இணைய பிரவுசர்கள் போட்டி போட்டுகொண்டு வாசகர்களுக்கு புதிய வசதிகளை வழங்கி கொண்டுள்ளனர். தற்போது தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் IE 9 என்ற புதிய பதிப்பை வெளியிட்டது. அதைபார்த்த மொசில்லா நிறுவனம் தனது பிரவுசரான பயர்பாக்சில் அசத்தலான மாற்றங்கள் செய்து தனது புதிய பதிப்பான Firefox 4 வெளியிட்டு டவுன்லோடில் சாதனை படைத்தது. இதையெல்லாம் பார்த்த கூகுள் நீங்க மட்டும் தான் வெளியிடுவீங்களா நாங்களும் விடுவோம் என்று கூகுள் நிறுவனம் பல்வேறு வசதிகளை கொண்ட புதிய பதிப்பான Google Chrome 11 என்பதை வெளியிட்டு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என நிருபித்துள்ளது. எது எப்படியோ பங்காளிங்க சண்ட போட்டா கூட்டாளிகளுக்கு கொண்டாட்டம் என்பது போல மாறி மாறி நமக்கு வசதிகளை கொடுக்கும் இணைய பிரவுசர்களுக்கு முதல்ல ஒரு நன்றி சொல்லிடுவோம்.
- எந்த உலவியிலும் இல்லாத சிறப்பம்சமே கூகுள் க்ரோமில் உள்ளது. அதாவது கூகுள் குரோம் பிரவுசர் புதிய பதிப்பை வெளியிட்டவுடன் குரோம் உலவியை பயன்படுத்துபவரின் அனைவருக்கும் இந்த உலவி தானாகவே அப்டேட் ஆகிவிடும்.
- உங்களுடைய பிரவுசர் அப்டேட் ஆகிவிட்டதா என அறிய வேண்டுமென்றால் Settings - About Google Chrome க்ளிக் செய்து உங்களுக்கு வரும்விண்டோவில் கூகுள் குரோம் பதிப்பை பார்க்கவும்.
- இது போன்று இருந்தால் உங்கள் உலவி அப்டேட் ஆகிவிட்டது. இது போல இல்லாமல் அப்டேட் ஆகவில்லை என்றாலும் உலவி தானாகவே அப்டேட் ஆக தொடங்கும்.
- இந்த இரண்டு முறைகளிலும் அப்டேட் ஆகவில்லை என்றால் இங்கு சென்று டவுன்லோட்செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
புதிய பதிப்பின் பயன்கள்:
- புதிய பதிப்பில் உள்ள ஆச்சரியமான வசதி HTML 5 Speech API. நம்மில் பெரும்பாலானோர் API எனப்படும் embeded form நம் பிளாக்கில் நிருவியிருப்போம் அதில் இனி நீங்கள் தட்டச்சு செய்ய வேண்டிய அவசியமில்லை உங்கள் மைக்ரோபோனில் வார்த்தையை சொன்னாலே அது தட்டச்சு செய்யும்.
- API என்றால் என் பிளாக்கில் தமிழ் டைப் செய்ய பொருத்தி உள்ளேனே அது தான்.
- Autofill என்ற வசதியில் இருந்த பிழைகளை நீக்கி உள்ளது.
- கூகுள் குரோம் தனது லோகோவை புத்தம் புதியதாக மாற்றி உள்ளது.
- இன்னும் பல வசதிகளை நமக்கு க்ரோமின் புதிய பதிப்பு வழங்கு கிறது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home