Sunday 14 April 2013

நாம் இறப்புக்கு பின் கூகுள் கணக்கினை அழிக்க மற்றும் தகவல்களை மாற்ற - Inactive Account Manager


இணையப்பயன்பாட்டில் அனைத்து இணைய பயனாளர்களும் ஏதோ ஒரு வகையில் கூகுளில் வசதியை பெற்று வருகிறனர். குறிப்பாக ப்ளாக், யூடுப், ஜிமெயில் , கூகுள் ப்ளஸ் மற்றும் பல்வேறு வசதிகளை பெறுகிறனர். பெரும்பாலும் இந்த வசதிகளை அனுக கூகுள் கணக்கு தேவைப்படும். 

இவ்வாறு காலம் காலமாக பயன்படுத்தி வரும் கூகுள் கணக்கு நாம் இறந்த பின் என்னவாகும். நம்முடைய கடவுச்சொல் தெரிந்தால் மட்டுமே அந்த கணக்கினை கையாள முடியும். இதற்கு பதிலாக நாம் ஒரு குறிப்பிட்ட காலம் பயன்படுத்தாமல் இருந்தால் நம்முடைய கூகுள் கணக்கில் உள்ள தகவல்கள் அனைத்தையும் வேறு மின்னஞ்சலுக்கு கூகுளே அனுப்பிவிடும். 

இவ்வாறு செய்வதனால் நமக்கு பின் நாம் பாதுகாப்பாக வைத்திருக்கும் தகவல்கள் அழியாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும். 

Inactive Account Manager  வசதியினை எனேபிள் செய்தால் மட்டுமே கூகுள் நீங்கள் குறிப்பிடும் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்களை அனுப்பி வைக்கும்.

Inactive Account Manager வசதியினை எனேபிள் செய்ய முதலில் உங்கள் கூகுள் கணக்கில் உள்நுழைந்து கொள்ளவும். பின் Account Settings செல்லவும்.

Account Settings செல்ல சுட்டி 

பின் Account Management என்னும் பட்டையின் கீழ் உள்ள Learn more and go to setup தேர்வினை கிளிக் செய்யவும்.


 இல்லையெனில் நேரடியாக Inactive Account Manager  செல்ல இங்கு கிளிக் செய்யவும். 


கிளிக் செய்தவுடன்  தோன்றும் விண்டோவில் Setup என்னும் பொத்தானை அழுத்தவும்.


நீங்கள் அடுத்து தோன்றும் விண்டோவில் Add mobile phone number என்பதை கிளிக் செய்து மொபைல் எண்னை உள்ளிடவும். அந்த மொபைல் எண்னிற்கு கடவுச்சொல் அனுப்பி வைக்கப்படும் அதை உள்ளிட்டு மொபைல் எண்னை உறுதிபடுத்திக்கொள்ளவும். பின் Add alternative email என்னும் தேர்வினை அழுத்தி மின்னஞ்சல் முகவரியையும் இணைத்துக்கொள்ளவும்.


ஸ்குரோல் செய்து விண்டோவினை கீழிறக்கவும். அதில் எவ்வளவு காலம் நீங்கள் கூகுள் கணக்கை பயன்படுத்தாமல் இருந்தால் , கூகுள் கணக்கில் உள்ள தகவல்களை நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய கோப்புகளை  கூகுள் அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடவும். 3,6,9 மாதம் அல்லது 1 வருடம் என்று குறிப்பிட்டு கொள்ளலாம்.  அதற்கேற்ப Timeout Period மாறும். 3 மாதம் என்றால் 1 மாதமாகவும், 6,9 மாதம் என்றால் 2 மாதமாகவும், 1 வருடம் என்றால் 3 மாதமாகவும் இருக்கும். 

இந்த Timeout Period என்பது உங்கள் கூகுள் கணக்கினை அழிக்கும் முன்னரோ அல்லது தகவல்களை நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும் முன்னர்,  தொலைபேசி எண்னுக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்பும் காலத்தை குறிப்பிடும். அதாவது உங்கள் கணக்கினை அழிக்கும் முன்னர் தகவல் அனுப்பபடும்.அதற்கு பின் கூகுள் குறிப்பிட்ட காலத்தில் உங்கள் கூகுள் கணக்கு ஒப்பன் செய்யபடவில்லையெனில் கூகுள் இந்த வசதியை செயல்படுத்திவிடும்.



நீங்கள் எந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனைத்து கூகுள் கணக்கு தொடர்பான தகவல்களை அனுப்ப விரும்புகீறீர்களோ அதனை குறிப்பிட்டு மின்னஞ்சல் முகவரியினை சேமித்துக்கொள்ளவும்.


தகவல்களை வேறு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டாம் அதற்கு பதில் கூகுள் கணக்கினை நிரந்தரமாக அழித்துவிடலாம் என்றால், Delete my account என்பதற்கு எதிரே உள்ள பொத்தானை அழுத்தி Yes என்று தேர்வு செய்து கொள்ளவும். 

பின் இறுதியாக எனேபிள் பொத்தானை அழுத்தி நீங்கள் Inactive Account Manager  வசதியினை உங்கள் கூகுள் கணக்கில் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home