Wednesday, 30 July 2014

பேஸ்புக்கில் இருந்து நிரந்திரமாக அக்கவுன்டை அழிக்க இதோ வழி…!


இன்றைக்கு பலரும் சமூகவலைத்தளங்களை மிகவும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர் எனலாம்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதை போல ஆக்கப்பூர்வமாக அதை நாம் பயன்படுத்துவதைவிட இன்று அதற்கு அடிமையாகத்தான் இருந்து கொண்டு இங்கு இருக்கிறோம்.
இதோ பேஸ்புக் மற்றும் ட்விட்டர் அக்கவுன்டை நிரந்திரமாக மூட ஒரு வழி இருக்கின்றது இதோ.
பேஸ்புக்கில் அக்கவுன்டை தற்காலிமாக Deactivate செய்வதற்கும் நிரந்திரமாக அழிப்பதற்கும் இரண்டுஆப்ஷன்ஸ் உள்ளது இதோ அந்த ஆப்ஷன்கள்.
பேஸ்புக் Logout பட்டன் இருக்கும் இடத்தில் உள்ள Settings ஓப்பன் செய்து கொள்ளுங்கள் முதலில்
இது Settings பக்கத்தினைத் திறக்கும். இங்கு “Deactivate Account” என்ற பிரிவில் கிடைக்கும் deactivate என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். அல்லது நேரடியாக http://www.facebook.com/deactivate.php என்ற லிங்க்கில் கிளிக் செய்து, அக்கவுண்ட்டினை நீக்கலாம்.
“Why are you deactivating:” என்ற பிரிவில், உங்க ளுக்கு விருப்பமான தேர்வினை ஏற்படுத்தி, அதில் பதில் அளிக்கலாம். இறுதியாக, Deactivate My Account” என்ற பட்டனை அழுத்தி, அக்கவுண்ட்டினை நீக்கலாம்.
அடுத்து உங்கள் அக்கவுன்டை நிரந்திரமாக நீக்கிட இதோ இந்த வழியை பின்பற்றுங்கள் இதன் மூலம் அக்கவுன்டை அழித்த பிறகு மீண்டும் பேஸ்புக்கில் லான் இன்(Login) செய்தாலும் உங்களது அக்கவுன்ட் ஓப்பன் ஆகாது.
http://www.facebook.com/help/contact.php? show_form=delete_account என்ற இந்த லிங்கை காப்பி செய்து மேலே அட்ரஸ் பாரில் காப்பி செய்யுங்கள், பின்பு எளிதாக உங்கள் அக்கவுன்டை நிரந்திரமாக அழியுங்கள் அவ்வளவுதான்.
அடுத்து ட்விட்டர் பற்றி பார்ப்போம்
ட்விட்டர் இணைய தளம் சென்று, அங்கு உங்கள் அக்கவுண்ட்டில் நுழையவும். தொடர்ந்து வலது மூலையில் உள்ள Settings என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
இது Account Settings என்ற பக்கத்தினைத் திறக்கும். இந்தப் பக்கத்தின் இறுதியில் உள்ள “Deactivate my account” என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
அல்லது நேரடியாக http://twitter.com/settings/accounts/confirm_delete என்ற முகவரியில் உள்ள தளம் சென்று, அங்கு உங்கள் அக்கவுண்ட்டினை நீக்கலாம். இங்கு உறுதிப்படுத்துவதற்காக உங்கள் முடிவினைக் கேட்கையில் “Okay, fine, deactivate my account” என்பதில் கிளிக் செய்து கணக்கினை நாம் முடிக்கலாம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home