ஒருவர் நமக்கு இமெயில் அனுப்பியுள்ளார் என்றால் அந்த இமெயில் எந்த நாட்டில் எந்த பகுதியில் இருந்து வந்தது என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்
ஒருவர் நமக்கு இமெயில் அனுப்பியுள்ளார் என்றால் அந்த இமெயில்
எந்த நாட்டில் எந்த பகுதியில் இருந்து வந்தது என்று எளிதாக
கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.
ஒருவரின் இமெயில் முகவரி மூலம் இருக்கும் இடத்தை சில
நிமிடங்களிலே கண்டுபிடிக்கலாம். நமக்கு ஒருவர் இருக்கும் இடத்தை
கண்டுபிடிக்க வேண்டுமானால் அந்த நபர் நமக்கு சமீபத்தில்
அனுப்பிய இமெயில் முகவரியை திறந்தது அதில் இருக்கும்
Show Original என்பதை தேர்ந்தெடுத்து அதில் உள்ள Sender ip
என்பதை Copy செய்து கொள்ளவும். இந்த IP முகவரியை
இந்த இணையதளத்தில் சென்று கொடுத்தால் போதும் உடனடியாக
கண்டுபிடிக்கலாம்.
இணையதள முகவரி : http://www.yougetsignal.com/tools/visual-tracert/
இந்த தளத்திற்கு சென்று நாம் Copy செய்து வைத்திருக்கும்
IP முகவரியை கொடுக்கவும் சில நிமிடங்களில் அதுவும் உடனடியாக
கூகுள் மேப்பிலே அனுப்பியவரின் இடத்தை காண்பிக்கும்.
சில நிறுவனங்கள் இதை வைத்துக்கொண்டு தான் இமெயில்
முகவ்ரியை மட்டும் கொடுங்கள் இருக்கும் இடத்தை சொல்கிறோம்
என்கிறது.இது எப்படி சாத்தியம் என்றால் சில இணையதளங்களில்
சென்று நாம் ஒரு இமெயில் முகவரியை கொடுத்தால் கடைசியாக
அவர் ஆக்சஸ் செய்த IP முகவரியை எளிதாக எடுத்துக்கொடுக்கும்
உடனடியாக இவர்கள் அந்த முகவரியை இங்கு கொடுத்து
இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கின்றனர்.உதாரணமாக நாம் நம்
நண்பர் ஒருவர் அனுப்பிய IP முகவரியை கொடுத்துப் பார்த்தோம்
சரியாக இருக்கும் இடத்தை காட்டியது. கண்டிப்பாக இந்ததளம்
நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home