Wednesday 29 September 2010

கொசுவை விரட்டும் மென்பொருள்




கொசுக்களை அழிக்க அல்லது விரட்ட தினமும் பல யுக்திகளை கையாளுகிறோம்.பலர் டென்னிஸ் மட்டை போன்ற ஒன்றை வைத்து கொசுக்களை அடிப்பதை பார்த்து இருக்கிறோம்.நாம் கணிணியை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது கொசு கடிக்காமல் இருக்க இந்த Anti Mosquito என்ற மென்பொருள் உதவுகிறது.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இயக்கினால் கீழ்க்கண்ட விண்டோ தோன்றும் அதில் Active என்பதை கிளிக் செய்தால் இந்த மென்பொருள இயங்க ஆரம்பித்து விடும்.


Active என்பதை கிளிக் செய்தவுடன் இந்த மென்பொருள் கொசுவை விரட்டும் அல்ட்ரா ஒலிகளை வெளிபடுத்த ஆரம்பித்து விடும்.இந்த அல்ட்ரா ஒலிகளை நாம் கேட்க முடியாது.


மீண்டும் INACTIVE கிளிக் செய்து இந்த மென்பொருளின் இயக்கத்தை நிறுத்தலாம்.மேலும் Hide என்பதை கிளிக் செய்து பின்புலத்தில் இயக்கலாம்.


இந்த மென்பொருளில் இருந்து வரும் அல்ட்ரா ஒலி கொசுக்களை பறக்க விடாமல் கட்டுபடுத்துகிறது.இதனால் இதை இயக்கிய சில நிமிடங்களில் உங்கள் கணிணிக்கு அருகில் இருந்து கொசுக்கள் ஓடிவிடும்.நீங்கள் உங்கள் ஒலிப்பான்களை On செய்து வைத்திருந்தால் போதும்.CNET தளம் இந்த மென்பொருளில் எவ்வித வைரஸ்களும் இல்லை என உறுதி செய்துள்ளது.இந்த மென்பொருளை தரவிறக்க கீழ்க்கண்ட சுட்டிகளை பயன்படுத்தலாம்.

CNET தளத்தில் இருந்து தரவிறக்க இங்கு கிளிக் செய்க

மேலும் விபரங்களுக்கு மென்பொருளின் வலைத்தளத்திற்கு செல்ல இங்கு கிளிக் செய்க

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home