Saturday 27 November 2010

ஒரே கிளிக்கில் எல்லா பயன்பாடுகளையும் மூட...



நாம் கணினியை பயன்படுத்தும் போது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மென்பொருள்கள் அல்லது பயன்பாடுகளை திறந்து வைத்திருப்போம். திடிரென்று கணினியை அணைக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் என்ன செய்வோம்? ஒவ்வொரு பயன்பாடாக சென்று மூடிக்கொண்டிருப்போம். ஆனால் எல்லாவற்றையும் ஒரே கிளிக்கில் மூடிவிட்டால் எவ்வளவு சுலபமாக இருக்கும்.

இதற்கு தான் ஒரு மென்பொருள் உள்ளது. Close All என்ற இந்த மென்பொருள் கணினியில் நாம் திறந்து வைத்திருக்கும் அத்தனை மென்பொருள்களையும் ஒரே கிளிக்கில் ஒரே நேரத்தில் மூடுகிறது. இது அனைத்து மென்பொருள்களுக்கும் மூடு என்ற சிக்னலை அனுப்பி அதன் மூலம் மூடுகிறது. இது கணினியை அணைக்கும் நேரம் உபயோகமாக இருக்கும்.
இதை நிறுவத்தேவையில்லை. பென் டிரைவிலும் வைத்து பயன்படுத்தலாம். இதற்கு ஒரு குறுக்குவழி (Shortcut) ஒன்றை desktop or quick launch bar இல் ஏற்படுத்தி சுலபமாக பயன்படுத்தலாம்.

தரவிறக்கச்சுட்டி: http://www.ntwind.com/download/CloseAll.zip
நன்றி!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home