Friday, 6 May 2011

உங்கள் மொபைல் போன் தொலைந்து விட்டால் என்ன செய்வீர்கள்?

செல்போன்களை தொலைத்து விட்டால் அதனுடன் நாம் சேகரித்த

தகவல்கள் தொலைபேசி எண்கள் முதல் வீடியோக்கள் வரை அனைத்தும்

வீணாகிவிடும்.


இதுபோன்ற நேரங்களில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும். செல்போன்களில்

இருக்கும் தகவல்களை வேறு எங்காவது பத்திரப்படுத்தினால் மட்டுமே
தகவல் இழப்பை தவிர்க்க முடியும்.

எனவே செல்போன்கள் தொலைந்துபோனால் கவலைப்பட இனி
தேவையில்லை. அவ்வாறு செல்போன்களை தொலைத்து மன
உளைச்சலில் இருப்பவர்கள் பின் வரும் WEBSITE பயன்படுத்தலாம்.

இந்த இணையத்தளம் நமது செல்போனில் உள்ள அனைத்து
தகவல்களையும் ஆன்லைனில் சேமிக்கும் வசதியை
http://www.mobyko.com/Home.do

என்னும் இணையத்தளம் வழங்குகிறது. பெரும்பாலும் இந்த வசதியை
செல்போன்களுக்கு பயன்படுத்த முடியும்.


இந்த இணையத்தளத்தை பயன்படுத்த நாம் செய்ய வேண்டியது பின்வருவன :

இந்த இணையத்தளத்திற்கு சென்று நமது செல்போன் மாடலை தேர்வு
செய்து , நமது செல்போன் எண்ணை அளிக்க வேண்டும்.

உடனே நமது CELL PHONE NUMBERக்கு ஒரு செய்தி ( Message ) வரும்.
அந்த செய்தியில் நமக்கு ரகசிய NUMBER அனுப்பி வைப்பார்கள். அந்த
எண்ணை அடிப்படையாக வைத்து ஒரு புதிய கணக்கை தொடங்க
வேண்டும்.

புதிய அக்கவுண்டை தொடங்கிய பின்னர் நமது தொலைபேசிக்கு
அவர்களின் புரோகிராமை அனுப்பி வைப்பார்கள்.
<=====>



இதனை இணையத்தளத்தில் அளிக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை
பின்பற்றி , புரோகிராமை நமது செல்போனில் டவுன்லோடு
செய்துக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு நமது செல்போனில் உள்ள வீடியோக்கள் , ஆடியோக்கள்
அனைத்தும் ONLINEனில் சேமிக்கப்படும்.

அவ்வளவுதான் முடிந்ததது உங்களது வேலை. நமது செல்போன்
தொலைந்து போனால் கூட புதிய செல்பேசிக்கு அனைத்து
தகவல்களையும் கொண்டு வர முடியும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home