Sunday, 23 October 2011

கம்யூட்டரை எளிதாக ஸ்கேன் செய்ய

நமது கம்யூட்டரில் உள்ள டிரைவ் எதுவாக இருந்தாலும் சரி
அது எந்த அளவு உபயோகிக்கப்பட்டுள்ளது ஒவ்வோருபோல்டர்களின்
அளவு என்ன - பைல்கள் எத்தனை உள்ளது என தெளிவாக அறிய
இந்த சாப்ட்வேரால்முடியும்.மேலும் இதிலிருந்தே ரீ-சைக்கிள்
பின்னை சுத்தம் செய்யலாம்.Control Pannel - ல் உள்ள Add Remove -ல்
பைல்களை நீக்கலாம்.டிக்ஸ்கை ஸ்கேன் செய்து காலியிடங்கள
பார்க்கலாம்.இலவச மென்பொருளான இது 165K கொள்ளளவே
உள்ளது.பதிவிறக்கம் செய்வதும் உபயோகிப்பதும் மிக எளிது.
இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் முதலில் உள்ள Download Scanner கிளிக் செய்யவும்.

இதை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் :ஆகும்.


இதில் உங்கள் Harddisc --ன் மொத்தவிவரம் தெரிய வரும்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இதில் உங்கள் Harddisc -ன் பகுதிகள் தெரிய வரும். நீங்கள்
கர்சரை எதாவது ஒரு நிறத்தின் மீது வைத்தால் அந்த
டிரைவின் பெயர் - அதில் உள்ள போல்டர்- அதில் உள்ள
பைல்களின் அளவு விவரம் மேல் புறத்தில் தெரியவரும்.
இதைப்போலவே நீங்கள் உங்கள் வசம் உள்ள அனைத்து
டிரைவ்களின் விவரம் நொடியில் அறிந்து கொள்ளலாம்.
வலப்புறம் மேலே உள்ள கட்டத்தை கிளிக் செய்வதுமூலம்
நேரடியாக Add/Remove Programs சென்று அதில் உள்ளவைகளை
நீக்கி பின் ஸ்கேன் டிக்ஸ் செய்து காலியிடங்களை பார்வையிடலாம்.
அதிலேயே கீழே உள்ள ரீ-சைக்கிள் பின் கிளிக் செய்து அதில் உள்ள
குப்பைகளை நீக்கலாம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home