Thursday 5 April 2012

வெள்ளை மாளிகையை சுற்றிபார்க்கலாம் வாங்க!


அமெரிக்கா ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையை இருந்த இடத்தில் இருந்தே பார்க்க கூகுளின் புதிய ஏற்பாடு. அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையை பார்க்க வேண்டும் என்ற கனவு எல்லோரிடமும் இருக்கும். இது போன்ற ஆசைகள் நிறைவேர வழியே இல்லை என்று தான் அனைவரும் நினைப்போம்.
ஆனால் அமெரிக்க வெள்ளை மாளிகையை, கூகுள் ஆர்ட் ப்ராஜெக்ட் இணையதளத்தின் மூலம் எளிதாக பார்க்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது கூகுள்.
வெள்ளை மாளிகை என்பது தலைவர்களுக்கு மட்டும் அல்ல, பொதுவான மக்களுக்கும் சேர்த்து தான் என்று மிஷேல் ஒபாமா வீடியோ மூலம் தெரிவித்து இருக்கிறார்.
360 டிகிரி ஸ்ட்ரீட் வியூ கேமரா தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி கூகுள் இந்த வசதியினை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொழில் நுட்பத்தினை மூலம் பார்ப்பவையை மிக தத்ரூபமாக பார்க்க முடியும். நிஜமாகவே பயனித்து பார்ப்பதை போலவும் உணர முடியும்.
அசாத்தியமான விஷயங்களையும் கூகுள் சாத்தியப்படுத்திவிடுகிறது என்பதற்கு இதைவிட சிறந்த எடுத்து காட்டு இல்லை என்றே கூறலாம். பல ரகசியங்களை உள்ளடக்கியது அமெரிக்கா ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை. இதை பார்க்கும் வாய்ப்பை கூகுள் ஏற்படுத்தி இருப்பது ஓர் அற்புதமான விஷயம் தான்.
கூகுளில் வெள்ளை மாளிகையை சுற்றி பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home