Saturday 27 November 2010

Mp3 பாடல்களை வெட்டவும் இணைக்கவும் இலவச மென்பொருள்

EP 8, 2010


நண்பர்கள் சிலர் ஒரு முழு mp3 பாடலில் இருந்து குறிப்பிட்ட வரிகளை மட்டும் வெட்டி எடுத்து பயன்படுத்த விரும்புவார்கள். சில நேரம் குறிப்பிட்ட ஒன்றுக்கு மேற்பட்ட சிறுபாடல்களை இணைத்து முழு பாடலாக மாற்ற விரும்புவார்கள். கல்லூரி நிகழ்ச்சிகளில் ஆடல்பாடல்களில் பல பாடல்களை கோர்வையாக ஒளிபரப்பி நாடகம் போடுவார்கள். இந்த நேரத்தில் நமக்கு உதவும் மென்பொருள் தான் Mp3 Split and Joiner.

இந்த மென்பொருளை வைத்து விரும்பிய இடத்தில வெட்டிக்கொள்ளலாம். வெட்டிய சிறிய பாட்டை செல்போன்களில் ரிங்க்டோனாக ( mobile ringtone ) வைத்துக்கொள்ளலாம். விரும்பிய இசைக்கோர்வைகளை ஒன்றாக இணைத்துக்கொள்ளலாம்.

இதில் எளிதான வகையில் விரைவான நேரத்தில் கட் செய்யலாம். கோப்புகளை இழுத்து ( drog and drop )அதன் விண்டோவில் விட்டு விடலாம். மேலும் ஒரே நேரத்தில் பல கோப்புகளை மாற்றும் Batch Splitting வசதியும் உள்ளது.

இது விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயங்குதளங்களிலும் வேலை செய்யும்.தரவிறக்கச்சுட்டி: http://www.mp3-joiner.net/Files/MJSSetup.exe

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home