Monday, 20 December 2010

இலங்கையின் புதிய 5000 ரூபாய் ஞாபகார்த்த நாணயக் குற்றி

இலங்கை மத்திய வங்கி தனது 60 வருட நிறைவையொட்டி 5000 ரூபாய் ஞாபகார்த்த நாணயக் குற்றியை வெளியிட்டிருக்கிறது ( 'Frosted Proof' crown sized silver commemorative coin).இலங்கையில் வெளியிடப்பட்டுள்ள நாணயக் குற்றிகளில் பெறுமதி கூடியதும். மல்டி கலர் எனப்படும் பல வர்ணங்களைக் கொண்டதுமான வெள்ளி நாணையக் குற்றி இதுவாகும்.
1950ம் ஆண்டு முதல் 2010 ஆகஸ்ட் 28 உடன் இலங்கை மத்திய வங்கி தனது 60 வருடங்களை பூர்த்தி செய்கிறது.

இந்த நாணயக் குற்றியின் மத்திய பகுதியில் வர்ணத்தினாலான இலங்கை மத்திய வங்கியின் சின்னம்பொறிக்கப் பட்டிருக்கின்றது. அதன் கீழே நாணையத்தின் முகப்பின் ஓரம் வழியாக 60 ஆண்டுகளை குறிக்கும் முகமாக1950-2010 என்றும் தொடர்ந்து ”இலங்கை மத்திய வங்கி” என்று தமிழ், சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது.

முன்பக்கம்

நாணயத்தின் பின் புறத்தில் அடர்ந்து விரிந்த மரம் பொறிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சியையும் உறுதிப்பாட்டையும்
குறிக்கிறது.
அதன்படி நாணயத்தின் பின்புற ஓரத்தின் வழியே “வளர்ச்சியும் உறுதிப்பாடும்” என்று தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
மரத்தின் கீழே நாணயத்தின் பெறுமதியான 5000 என்ற இலக்கமும் ”ரூபாய்” என்ற சொல் தமிழ் சிங்களம் ஆங்கில ஆகிய மொழிகளில்
பொறிக்கப்பட்டிருக்கிறது.
மரத்தின் ஓரத்தின் வலது புறத்தில் 2010 என்ற வெளியிடப்பட்ட ஆண்டும் பொறிக்கப்பட்டுள்ளது.

பின் புறம்

இந் நாணயக் குற்றியின் நிறை 28.28 கிராம்
விட்டம் 38.61 மில்லி மீற்றர்.
இதுஐக்கிய ராச்சியத்தின் Royal Mint நிறுவனத்தின் தரச் சான்றிதழ் பெற்றிருக்கிறது.

இந்நாணயம் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து மக்கள் வாங்கிக்கொள்ள முடியும்.
இந்த 5000 ரூபாய் ஞாபகார்த்த நாணயத்தை 7000 ரூபாய்க்கு மத்திய வங்கியின் பிரதான காரியாலயத்திலோ, மாகாண மட்டங்களிளுள்ள நாணய அருங்காட்சியக அலுவலகங்களிலோஅல்லது சர்வதேச வலைப்பின்னல் மூலமாக www.cbsl.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலமாகவோ வாங்கிக்கொள்ளலாம்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home