ஆபாச தகவல்களை வெளியிடுவோர் மீது கூகுளின் அதிரடி நடவடிக்கை
இணையதள உலகில் மிகப்பெரும் தேடுபொறியான கூகுள் தற்போது ஆபாசதளங்கள் மற்றும் முறையற்ற தகவல்களை வெளியிடும் தளங்களை தனது தேடல் பக்கத்தில் காட்டுவதில்லை என்ற அதிரடியான முடிவை எடுத்துள்ளது. சீனாவில் கூகுள் இணையதளத்திற்கு கொடுத்த நெருக்கடி காரணமாக தற்போது கூகுள் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதலாவதாக ஆபாச தளங்கள் நாட்டின் சட்டத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தகவல் வெளியீடப்பட்டுள்ள தளங்கள், காப்புரிமை அனுமதி பெற்ற தளங்களில் இருந்து தகவல்களை திருடி வெளியிடப்படும் இணையதளங்களை கூகுள் தேடுபொறியில் காட்டுவதில்லை. இந்த அதிரடியான நடவடிக்கையால் கூகுளால் காட்டப்படும் பல தேவையில்லாத குப்பையான இணையதளங்கள் நீக்கப்பட்டு இருக்கிறது. மற்ற நிறுவனங்களைப் போல விரைவில் செயல்படுத்தப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லாத கூகுள் உடனடியாக இந்த சேவையை செயல்படுத்தியுள்ளது. சைபர் கிரைம் பொலிசார் தவறான தகவல்களை வெளியிடும் தளங்களைப் பற்றிய தகவல்களை கேட்டால் அவர்களைப் பற்றிய அத்தனை தகவல்களையும் கொடுக்கத் தயார் என்கிறது கூகுள். தவறான தவல்களை வெளியிடும் தளங்கள் இனியாவது அது போன்ற தகவல்களை நீக்க வேண்டும். அப்போது தான் கூகுள் துணை அவர்களுக்கு இருக்கும். |
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home