தட்டச்சுப் பயிற்சி
கணனித் துறையில் வல்லுநர் ஆவதற்கான முதல் தெரிவு வேகமான தட்டச்சுப் பயிற்சியே ஆகும்.
தட்டச்சும் போது எந்ததெந்த விரல்களை எந்தெந்த அழுத்திகளில் வைக்க வேண்டும் என சரியாக விளங்கி பயிற்சி செய்தால் ஒருசில நாட்களிலேயே சரியாகவும்
வேகமாகவும் தட்டச்சும் திறனை பெற்றுக்கொள்ளலாம். அதுவும் தட்டச்சு பயிற்சி பெறும் போது, விசைப்பலகையில் உள்ள அழுத்திகளை பார்க்காமல், திரையை பார்த்தே தட்டச்சிப் பழகுதல் கூடுதல் பயன்மிக்கது.
நீங்கள் ஒரு ஆரம்ப தட்டச்சுப் பயிற்சியாளரானால், கீழே இணைக்கப்பட்டிருக்கும் படத்தை ஒரு முறை வடிவாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் கை விரல்களை எவ்வாறு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை நிறங்களால் வேறுப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது.
என்ன பார்த்து விட்டீர்களா?
இனி உங்கள் ஆரம்ப தட்டச்சுப் பயிற்சியை தொடர வேண்டியது தான்.
இதோ இத்தளத்திற்கு சென்று பயிற்சி பெறுங்கள். இத்தளம் உங்கள் தட்டச்சும் வேகத்தை கூடிய விரைவில் வளர்த்துக்கொள்வதற்கு உதவும் ஒரு அருமையான தளம்.
www.powertyping.com/qwerty/lessonsq.html
இதே போன்று BBC இணையத்தளத்திலும் தட்டச்சுப் பயிற்சிக்கென ஒரு பக்கம் உள்ளது. சும்மா அல்ல பாட்டு கேட்டுக்கொண்டே தட்டச்சு பயிற்சிப் பெறலாம். இடையே வாழ்த்துக்களும், பிழைத்தால் அதட்டல்களும் கிடைக்கும். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என நான்கு மட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மட்டத்திலும் மூன்று பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதியையும் தட்டச்சிட்டு முடிந்ததும், உங்களுக்காக ஒரு பாடலும் ஆடலும் வழங்கப்படும். உற்சாகத்துடனேயே தட்டச்சிடலாம்.
நான்கு மட்டங்களையும் தட்டச்சிட்டு முடிந்தவுடன், உங்களின் தட்டச்சுத் திறன் நிர்ணயிக்கப்பட்டு, நீங்கள் தட்டச்சும் வேகம், நிமிடத்திற்கு எத்தனை எழுத்துக்கள் தட்டச்சிடுகீறீரகள் என்பன காட்டப்படும். அதற்கான இணையச் சான்றிதலையும் பெற்றுக்கொள்ளலாம்.
இதோ BBC தட்டச்சுப் பயிற்சித் தளம்.
வேகமான தட்டச்சுப் பயிற்சிக்கு இத்தளம் உகந்தது.
www.powertyping.com/fog/foggies.html
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home