இன்று கூகுளில் தெரிவது : நாட்டிய மங்கை மர்தா க்ரஹமின் 117 வது பிறந்த தினம்
கூகுள் இன்று தனது அழகிய அனிமேஷன் ஓவியம் மூலம், அமெரிக்காவின் புகழ் பெற்ற நடன இயக்குனரும், நவீனத்துவ நடனவியலை அறிமுகப்படுத்தியவருமான Martha Graham (மர்தா க்ரஹம்) இன் 117 வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறது.
1894ம் ஆண்டு மே 11 ம் திகதி, வைத்தியர் ஒருவரின் மூன்று மகள்களில் ஒருவராக பிறந்த க்ரஹம், 1916ம் ஆண்டு தொழில் ரீதியாக நடனத்தில் தேர்ச்சி பெற்றார். பின்னர் கிழக்கத்தேய கலைஓவியங்களை தனது நடனத்தின் மூலம் வெளிக்கொணர தொடங்கினார். இது அவரது நடனத்திற்கு தனி முத்திரையை கொடுத்தது.
Modern Dance ஐ அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தகக்வராக விளங்கிய Martha Graham, 1991ம் ஆண்டு ஏப்ரல் 1 ம்திகதி மரணித்தார்.
நேற்றைய தினம், சார்லெஸ் ரோஜெரின் Mr.Men கார்டூன்களை பெருமைப்படுத்தி தனது டூடிள் சின்னத்தை உருவாக்கியிருந்த கூகுள் முதன் முறையாக கடந்த 2010 ம் ஆண்டு மே மாதம், பேக் மேனின் 30வது பிறந்த தினத்தை முன்னிட்டு அனிமேஷன் முறையிலான கூகுள் டூடிள் சின்னங்களை உருவாக்க தொடங்கியது.
1998ம் ஆண்டிலிருந்து தனது டூடுள் சின்னங்களை வெவ்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்றால் போல் வடிவமைத்து வரும் கூகுள் நிறுவனம் இதுவரை 900 டூடுள்களை உருவாக்கியிருக்கிறது. கடந்த வருடம் மாத்திரம் 270 டூடுள் சின்னங்கள் இவ்வாறு உருவாகியிருந்தன.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home