Friday, 25 February 2011

கூகிள் (தமிழ் – ஆங்கிலம்) (ஆங்கிலம்-தமிழ்) அகராதி

கூகிளின் (தமிழ் – ஆங்கிலம் ) (ஆங்கிலம் – தமிழ்) இணைய அகராதி சேவை எங்களை மிகவும் கவர்ந்து விட்டது. சில நாட்களுக்கு முன் வரை www.tamildict.com என்ற தளத்தின் மூலமாகவே (ஆங்கிலம் – தமிழ் ) (தமிழ் – ஆங்கிலம்) அகராதியை பயன்படுத்தி வந்தோம்.

கூகிளின் (தமிழ் – ஆங்கிலம் ) (ஆங்கிலம் – தமிழ்) இணைய அகராதி சேவை மிகவும் பயனுள்ள சேவை.

இச் சேவையை பயன்படுத்த www.google.com/dictionary என்ற முகவரிக்கு சென்று English — Tamil தேர்ந்தெடுத்து ஆங்கில சொற்களுக்கு இனையான தமிழ் சொற்களை அறிந்து கொள்ளலாம்.



கூகிள் ஆங்கிலம் தமிழ் அகராதி
கூகிள் தமிழ் – ஆங்கில அகராதி
கூகிள் தமிழ் - ஆங்கில அகராதி

பயன் உள்ள இணையதளங்கள்


அனைவருக்கும் வணக்கம்! இப்பதிப்பில் தாங்களுக்கு நான் தர இருக்கும் தகவல் சிறந்த, பயன்யுள்ள இணையதளங்களை பற்றியது.

முதலில் நாம் காண் இருக்கும் இணையதளம்.



Job என்றவுடனே தங்களுக்கு புரிந்து இருக்கும் என எண்ணுகிறேன்...ஆம் இந்த இணையதளம்....வேலைவாய்ப்புகளுடன் சம்பந்தப்பட்ட இணையதளமே!.....
நாம் முதலில் ஓர் வேலையில் இணைய அல்லது வேலைக்கு பதிய பயன்ப்படுத்துவது ரிஸ்யும் RESUME அதாவது நம்மளை பற்றிய முழு விவரங்களின் ஓர் தொகுப்பு என கூறாலாம்...இதில் நமது பெயர், விலாசம், படிப்பு, தகுதி, வயது, தற்போதய நிலை என பல தகவல்களை அடங்கி இருக்கும்...ஓர் கம்பெனியில் தாங்கள் வேலைக்கு பதிவுசெய்ய முதலில் தர வேண்டியது இந்த RESUME என்னும் FORMயையே....இந்த இணையதளம் தங்களுக்கு இந்த சேவையை இலவசமாக வழங்குகின்றது...தங்கள் தகவல்களை ஒவ்வொன்றாக டைப் செய்ய வேண்டியது இல்லை...இங்கு இருக்கும் மாதிரி ஒன்றில் ஒன்றை தேர்வு செய்துக்கொள்ள வேண்டும்..பின்னர் அங்கு தங்களை பற்றி கேட்கும் தகவல்களை நிரப்ப வேண்டும். அவ்வளவு தான் அழகிய RESUMEதயார்!...
இங்கு தங்கள் இமெயில் முகவரி தந்து பதிவு செய்துக்கொள்ளவும்....



Meebo சிறந்த SOCIAL தளங்களின் இணைப்பு தளமாக இயங்குகிறது....
தாங்கள் நண்பர்களுடன் உரையாட நினைத்தால் அதாவது SOCIAL தளங்களின் நண்பர்களுடன் உரையாட நினைத்தால் என்ன செய்விற்கள்..ம்ம்ம் அந்த அந்த தளத்திற்கு சென்று இந்த பணியை மேற்க்கொள்விற்கள்..ஆனால் இவை அனைத்துமே ஓரே இடத்தில் நிகழ்ந்தால்...என்ன? தங்கள் வேலையும் குறையும், நேரமும் குறையும்....இந்த பணியை இந்த தளம் அருமையாக வழங்குகிறது...சோசியல் தளங்களான..GOOGLE, YAHOO, FACEBOOK, WINDOWS LIVE, AIM, JABBER, MYSPACE போன்ற தளங்களின் இணைப்பை நேரடியாக ஏற்ப்படுத்தி தருகிறது..இந்த தளம்.

இதற்கு முதலில் இங்கு தங்களை பதிவு செய்துகொள்ளுங்கள், பின்ன்ர் தங்கள்SOCIAL தளங்களின் தகவலை தந்து இணைத்து கொள்ளுங்கள்...அவ்வளவு தான் இனி இங்கு இருந்தே உரையாடலாம் தங்கள் நண்பர்களுடன்...



இத்தளத்தில் தாங்கள் பலவகையான எழுத்து வகைகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்....மிக அழகாகவும் எழுமையாகவுமே இந்த தளம் காட்சியளிக்கிறது...பல வகையான விசித்திர ரசிக்க ஆர்சரியம் தரும் பல FONTபோன்ட்கள் இங்கு உள்ளன...இத்தளத்தில் இருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்...

Templates
நம் பிளாக்கை / வலைபக்கத்தை அழகாக மாற்ற நாம் எதாவது ஓர் முயற்சியை மேற்கொண்டு கொண்டே இருப்போம் அவற்றில் ஒன்று..பிளாக்கர் / வலைபக்கம் டெம்பெளேட் TEMPLETE . இவற்றை இலவசமாக பல தளங்கள் வழங்குகின்றன. அவற்றில் சிறந்தவை தாங்களுக்காக...இத்தளங்கள் அழகாகவும், எழுமையாகவும், பதிவிறக்க வேகமாகவும் செயல்படுகின்றன.

Blogger Templates:
BTemplates
Freetemplates
Ourblogtemplates

Website Templates:
Freewebtemplates.
Freewebsitetemplates
Templatesbox


தனி விளம்பர பலகை தயார் செய்வது எப்படி?





வணக்கம் நண்பர்களே! தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. தங்கள் வருகைக்கு நன்றி

சென்ற பதிவில் கூறியவாறே தங்களுக்கு நான் சொல்ல இருப்பது.....இலவசமாக விளம்பர பலகையை தயார் செய்வது எப்படி என்பதை தான்...




நாம் அனைவருக்குமே....விளம்பரம் என்பது முக்கிய ஒன்றாக இருக்கிறது....தங்கள் கருத்துகள், செய்திகள்,படைப்புகள் போன்றவற்றை மக்களிடையே தெறிவுப்படுத்த பிரபலபடுத்த விளம்பரங்கள் பயன்படுகின்றன்.....முக்கியமாக தங்கள் பிளாக்குகள் , வலைதளம், பதிவிகளை பிரபலப்படுத்த...பயன்யுள்ளதாக...இருக்கும். எப்படி என்று இப்போ காணலாம்...

இலவச விளம்பர பலகை தயார் செய்ய பல இணைய தளங்கள் செயல்பட்டாலும்....மிகவும்...அருமையான...செயல்பாட்டினை வெளிப்படுத்துகிறது....இரண்டு தளங்கள்.
BannerSnack




ஒன்று BannerSnack என்னும் தளம்....மிகவும் அருமையான செயல்பட்டினை வழங்குகிறது....இத்தளத்தில் தாங்கள் முதலில் உறுப்பினராகி கொள்ளவேண்டும்..பின்னர்...இதன் பயனை பெறலாம்..மிகவும் சிறந்த...தரத்தில் விளம்பர பலகையை தயார் செய்யலாம்...
இங்கு உடனடி PREVIEW யும் காணலாம். மேலும் இங்கு பொத்தான்களையும்(BUTTON) தயார்செய்யலாம்...
பல EFFECTSயும் தங்கள் பயன்படுத்தலாம்...நான் மிகவும் அசந்த தளம் இது...இலவச சேவையை மிக அருமையாக....வழங்குகிறது இதன் சிறப்பு...
இத்தளத்திற்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும்: BannerSnack

அடுத்துகாண இருப்பது இச்சேவையை வழங்கும் மற்றொரு இணைய தளத்தை....

Flashvortex




Flashvortex இத்தளமும் சிறப்பான செயலைபாட்டினை வழங்குகிறது....மிக அருமையாக...விரைவாக வழங்குவது இதன் சிறப்பு....தங்களுக்கென பல மாடல்களை அவற்களே தருகிறார்கள் அவற்றில் தாங்களுக்கு பிடித்ததை தாங்களுக்கு ஏற்றது போல மாற்றிக்கொள்ளலாம்.
மேலும் பயன்தரும் வகையில்...இங்கு தாங்கள் கடிகாரங்கள்(CLOCKS),பட்டன்கள்(BUTTONS),சைடு பார்..(SIDE BAR) என பல சேவைகளை வழங்குகிறது,.....


இத்தளத்திற்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும்:Flashvortex.

சிறந்த இணையதளங்கள் ஓர் பார்வை




Download Freeware Softwares
இலவச மென்பொருட்களை வழங்க இணையத்தில் பல இணையதளங்கள் இருந்தாலும் அவற்றில் சிறந்த இணையதள முகவரி கீழே தரபட்டுள்ளன......இந்த இணையத்தில் மென்பொருட்களை மற்றும் இன்றி பல இலவச கேம்ஸ் , Developer Tools போன்ற மென்பொருட்கள் உள்ளன...
மொபைல் போன்களுக்கான மென்பொருட்களும் உள்ளன.
Download Ebooks Free
Ebook என்னும் இணைய வழி பதிவு,புத்தகங்களை இலவசமாக வழங்குகுறது. இந்த தளங்கள் அணைத்து விதமான Ebooks இங்கு தங்கள் இலவசமாக தரவிறக்கலாம். டெக்னாலஜி,இசை,சமையல்...என அனைத்து வகையான Ebook இங்கு இருக்கிறது..


How to Create a Website Using Html, Java...codes
இது ஓர் சிறந்த இணைய முகவரி..நான் எதிர்சையாக கண்ட இணையதளம்....
இங்கு தங்களுக்கு இணையத்தளங்களின் தகவல்கள் மற்றும் இணையத்தளங்களை உருவாக்கும் முறைகளை மிக அழகாக எளிமையாக வழங்குவதில் சிறந்து விளங்குகிறது....
மேலும் இதன் இன்னொரு சிறப்பு...Onlineயே தாங்கள் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப HTML CODES இங்கு உருவாக்கலாம்.....

Best Hd Wallpapers 4 Ur System
நம்மிள் அனைவருக்கும் அசை இருக்கும் நாம் கணினியை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று...நம் கணிணி அழகு என்றவுடனே முதலில் வைப்பது...Desktop Wallpapers தான்...அந்த அழகிய வால்பேப்பர்களை பதிவிறக்க தான் இந்த இணைய தள முகவரி இங்கு HD (High Definition) வால்பேப்பர்கள் உள்ளன. பல வகை வால்பேப்பர்கள் உள்ளன்....பயன்படுத்தி பயன் பெறுங்கள்....

Send Sms 2 Mobile Free
நாம் இணையத்தில் வேலையில் ஈடுபட்டு கொண்டுயிருக்கும் போது..நம் நண்பர்களுக்கு அவசரமாக ஓர் செய்தியை தெறிவிக்க வேண்டியிருக்கும் அல்லது சில வாழ்த்து செய்திகளை அனுப்ப வேண்டியிருக்கும். இதை தாங்கள் தங்கள் கணினி முலமாகவே மேற்க்கொள்ளலாம்....அதற்கு இந்த இணையதளங்கள் வழங்குகின்றன் அழகிய முறையில்..மேலும் இங்கு வாழ்த்துகள் தங்களுக்கு அனுப்ப உதவுகின்றன........

Thursday, 10 February 2011

ஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.

ஒன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

கணினி பயன்படுத்தும் அனைவரும் விரும்பும் பொதுவான ஒன்று நாம் கணினியில் தட்டச்சு செய்யும் வேகம் அதிகரிக்க வேண்டும் என்பது தான்.

டைப்ரைட்டிங் வகுப்புக்கு கூட செல்ல நேரம் இருக்காது இந்தநிலையில் நாம் ஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவத்தான் இந்தத்தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.keybr.com

இந்தத் தளத்திற்கு சென்றவுடன் முகப்பிலேயே டைப்ரைட்டிங் கீபோர்டு தெரியும். இதில் நாம் தட்டச்சு செய்யும் வேகத்தை மட்டும் கொடுத்து விட்டு Type செய்ய தொடங்கலாம். ஒவ்வொரு எழுத்தாக மேலே கொடுக்க நாம் தட்டச்சு செய்ய வேண்டியது தான்.



தினமும் சராசரியாக 1 மணி நேரம் செலவு செய்தால் 40 நாட்களுக்குள் நாம் கணினியில் தட்டச்சு செய்வதில் வல்லவர்கள் ஆகலாம். முதலில் வேகம் குறைவாக தட்டச்சு செய்ய ஆரம்பித்து அதன் பின் நாட்கள் செல்ல செல்ல நாம் தட்டச்சு செய்யும் வேகத்தை கூட்டலாம்.

தட்டச்சு பழக விரும்பும் அனைவருக்கும் இந்தச் செய்தி பயனுள்ளதாக இருக்கும்

Thursday, 3 February 2011

நீங்கள் கல்லூரியில் படிப்பவரா? கணிதத்தின் மேல் உங்களுக்கு விருப்பம் அதிகமா? இல்லை கணிதத்தை வெறுக்கும் ஆளா நீங்கள்?

கணிதம், இயற்பியல் சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு லினக்ஸ் இயங்குதளத்திற்கான ஏராளமான இலவச மென்பொருட்கள் உள்ளன. அந்த வரிசையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது Mathematics 4.0 என்னும் மென்பொருளை இலவசமாக வழங்குகிறது. 2D, 3D, கணித சமன்பாடுகள், இயற்பியல் சமன்பாடுகளை மிக எளியமுறையில் தீர்ப்பதற்கு இதைப் பயன்படுத்தலாம்.

மைக்ரோசாப்ட் வழங்கும் இலவச மென்பொருள்  : Microsoft Mathematics 4.0

மைக்ரோசாப்ட் வழங்கும் இலவச மென்பொருள் : Microsoft Mathematics 4.0

கல்லூரி மாணவர்கள் தங்கள் வீட்டுப் பாடத்தை மைக்ரோசாப்ட் மேதமடிக்ஸ் மூலம் உடனே செய்து முடிக்கலாம். புதியவர்கள் தங்கள் கணித, இயற்பியல் அறிவை விருத்தி செய்வதற்கும் இதைப் பயன்படுத்தலாம்.
அல்ஜிப்ரா முதல் முக்கோணவியல் வரை ஏராளமான அம்சங்கள் இதில் உள்ளன.

மைக்ரோசாப்ட் வேர்ட் மற்றும் ஒன்நோட் இவற்றுக்கான நீட்சியாகவும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.

தரவிறக்கச் சுட்டி : http://bit.ly/fzoRec

ஈ-மெயில்களில் உள்ள அட்டாச்மெண்ட்களை மட்டும் தனியே பதிவிறக்கம் செய்ய


தற்போதைய நிலையில் ஈ-மெயில் சேவையினை பல நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகிறன. அவற்றில் ஜிமெயில், யாகூ, ஹாட்மெயில், போன்ற நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவைகள் ஆகும். நாம் சாதரணமாக ஈ-மெயில் அனுப்பினாலும் கூடவே ஒரு அட்டாச்மெண்ட் பைலை சேர்த்தே அனுப்புவோம். அது நலம் விசாரிக்கும் ஈ-மெயிலாக இருந்தாலும் சரி, முக்கியமான அலுவல்களாக இருந்தாலும் சரி அட்டாச்மெண்ட் என்பது முன்பெல்லாம் முக்கியமான செயலுக்காக மட்டுமே அனுப்பபடும், ஆனால் தற்போதைய நிலையில் எந்த ஒரு ஈ-மெயிலாக இருப்பினும் கூடவே சேர்ந்து ஒரு அட்டாச்மெண்ட் பைல் அனுப்பபடுகிறது. ஈ-மெயில் அனுப்பும் போது அதனுடன் சேர்ந்து அட்டாச்மெண்ட் பைல்களாக போட்டோ, வீடியோ, ஆடியோ, டாக்குமெண்ட், போன்ற பல பைல்களும் ஈ-மெயில் மூலமாக பரிமாற்றம் செய்யப்படுகிறன. இவ்வாறு ஈ-மெயிலுடன் சேர்ந்துவரும் அட்டாச்மெண்ட் பைல்களை தனியே பதிவிறக்கம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. அதுதான் Mail Attachment Downloader.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும்.பின் Start > Programs > GearMage > Mail Attachment Downloader என்பதை தேர்வு செய்து Mail Attachment Downloader அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் ஈ-மெயில் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு எந்த இடத்தில் அட்டாமெண்ட்கள் பதிவாக வேண்டும் என்பதை குறிப்பிட்டுவிட்டு, Connect and Download என்ற பட்டனை அழுத்தி பதிவிறக்கி கொள்ள முடியும்.



இந்த மென்பொருளின் சிறப்பம்சமாக உங்களுக்கு வேண்டிய பைல்களை மட்டும் தனியே தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மற்றும் குறிப்பிட்ட தேதிக்குள் உள்ள வேண்டிய அட்டாச்மெண்ட்களை மட்டும் பதிவிறக்கம் செய்ய முடியும். இதுபோன்ற பல்வேறு விதமான சிறப்பம்சங்களை இந்த மென்பொருளில் அடங்கியுள்ளது. ஈ-மெயில் அட்டாச்மெண்ட்களை மட்டும் தனியே பதிவிறக்கம் செய்ய இது ஒரு அருமையான வாய்ப்பாகும்

ISO இமேஜ்களை பெண்ட்ரைவ் மற்றும் CD/DVDக்களில் பூட்டபிள் பைல்களாக மாற்ற

ISO பைல்களை பூட்டபிள் பைல்களாக மாற்றம் செய்ய நாம் நீரோ அல்லது Poweriso, MagicISO, ISO Burner இதில் எதாவது ஒரு ரைட்டிங் சாப்ட்வேரினை பயன்படுத்தியே மாற்றம் செய்வோம். ISO பைல்கள் பெரும்பாலும் அதிக அளவுடையதாகவே இருக்கும். இந்த ISO பைல்களை நாம் பெண்ட்ரைவ்களில் பூட்டபிள் பைல்களாக மாற்றம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தினை நாம் USB வழியாக பூட் செய்ய இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மென்பொருளானது Freeware அப்ளிகேஷன் ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி




இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த மென்பொருளை Unzip செய்துகொள்ளவும். IsoBurner என்பதன் மீது வலதுகிளிக் செய்து தோன்றும் பாப்அப் விண்டோவில் Run as Administrator என்பதை தேர்வு செய்யவும். பின் ஒப்பன் ஆகும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான தேர்வை ஒகே செய்து விட்டு Next பொத்தானை அழுத்தி பூட்டபிள் பைலை உருவாக்கி கொள்ள முடியும்.

இந்த மென்பொருளின் உதவியுடன் நாம் பெண்ட்ரைவுகளிளும் பூட்டபிள் பைல்களை உருவாக்க முடியும். நேரிடையாக CD/DVDக்களில் ISO இமேஜ்களை ரைட் செய்யவும் முடியும்.

Wednesday, 2 February 2011

உங்களது Facebook கணக்கை வேறு யாரவது பயன்படுத்தினால் எப்படி தெரிந்து கொள்வது???




நம்ம எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமா facebookபக்கம் திரும்பிகிட்டு இருக்கோம்னு சொல்லலாம். Orkut யில் நிறைய வசதிகள் இருந்தாலும்
Facebook பயன்படுத்துபவர்களுக்கு Orkut அந்நியமாக படுகிறது. இந்த பதிவும் Facebook Security ய பத்தியதுதான். ஆமாங்க Facebook என்ற தளத்தை நிறுவிய Mark Zuckerberg's Fan page யை சமீபத்தில் Hack செஞ்சுருக்காங்க நம்ம கில்லாடி Hackerகள். நம்ம Facebook கணக்கை வேறு யாரவது பயன்படுத்தினால் நாம் எப்படி பார்த்து தெரிந்து கொள்வது என்று பார்போம்.நம்முடைய பல Personal செய்திகளை Facebook தர துவங்கிவிட்டோம், இந்நேரத்தில் இதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.



முதலில் Facebook.com-------->Account------>Account settings ---->Account security செல்லவும்.

மேலே உள்ளது போல் வந்த Window வில் உங்களது Account எப்பொழுது கடைசியாக பார்க்கப்பட்டது என்ற விவரங்கள் தெரியும்.நீங்கள் இல்லாமல் வேறு எந்த பகுதியில் இருந்து யாராவது உள்ளே வந்திருந்தால்,பக்கத்தில் இருக்கும் End Activity என்ற linkயை கிளிக் செய்து விடுங்கள்.மேலும் வேறு யாரவது உங்கள் கணக்கை பயன்படுத்த துவங்கினால் உங்களது email முகவரிக்கோ, அல்லது SMS மூலமாக உங்களுக்கு தகவல் வர மாதிரி செய்யலாம்.Send me a mail,Send me a text message என்ற இடத்தில Tick செய்து விடுங்கள்.வேலை முடிந்தது.

எம்.எஸ் வேர்ட்டின் DOCX பார்மட்டில் கோப்பைச் சேமிக்கும் புதிய இலவச மென்பொருள் Libre office

விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் கணினிகளில் இயங்கக்கூடியதும், இலவசமாகவும்,

எம்.எஸ் வேர்ட்டின் .DOCX எனும் பார்மட்டிலேயே கோப்பைச் சேமிக்க கூடிய வசதியையும் தருகின்ற Libre ஆபிஸின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. பிரபலமான ஓபன் ஆபிஸ் நிறுவனமே வேறு பெயரில் Libre ஆபிஸையும் வெளியிடுகிறது.

இதனது மேம்படுத்த பதிப்பின் வசதிகளை இங்கே காணலாம்.

டவுண்லோட் செய்வதற்கு

நம்முகத்தைக் காட்டி கணணிக்குள் உட்புகுந்து கொள்ளலாம் கடவுச் சொல் அவுட்!...



கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்

நுழையலாம். எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்.

கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது ஹாலிவுட் படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம். இதற்காக பல மென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளின் பெயர் பிலிங்.இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நம் கணினியில் இண்ஸ்டால் செய்துகொள்ள வேண்டியது தான். வெப்கேம் அல்லது மடிக்கணினியுடன் வரும் கேமிரா முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான் இனி உள்ளே செல்லலாம். விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இதன் 32 பிட் மற்றும் 64 பிட் வெர்சனும் கிடைக்கிறது.மென்பொருளின் அளவு 8.3 MB தான். மென்பொருள் இயக்க 25 முதல் 30 MB வரை இடம் தேவைப்படுகிறது. கணினிக்கு முன் இருந்து கொண்டு நம் முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். புதுமை விரும்பிகளுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த முகவரியைச் சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.
http://www.luxand.com/blink/

அழகான பவபொயிண்ட்(powerpoint)ஐ ஒன்லைன் மூலம் உருவாக்கலாம்

அலுவலக வேலைகள் முதல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வரை
அனைத்தையுமே தற்போது அழகான பவர்பாயிண்ட் பிரசண்டேசனாக
உருவாக்கி அனைவரிடமும் காண்பிப்போம் ஆனால் எந்த மென்பொருள்
துணையும் இல்லாமல் ஒன்லைன் மூலம் இது சாத்தியமா என்றால்
சாத்தியம் தான் ஆம் ஒன்லைன் மூலம் 280-க்கும் மேற்பட்ட
பவர்பாயிண்ட் டிசைனில் இலவசமாகவே உருவாக்கலாம்
இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.


ஒன்லைன் மூலம் பவர்பாயிண்ட் presentation எளிதாக அதுவும் சில
நிமிடங்களில் நமக்கு பிடித்த டிசைனில் எளிதாக உருவாக்கலாம்
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://280slides.com
இந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Try it Now ,Free என்ற
பொத்தானை சொடுக்கி தொடங்கலாம் அடுத்து வரும் திரையில்
எளிதாக நமக்கு தேவையான Slide மற்றும் Background மற்றும்
Slide போன்றவற்றை எளிதாக தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
பவர்பாயிண்ட் பிரண்டேசன் உருவாக்கி முடித்ததும் அதை நம்
கணினியில் சேமித்தும் வைக்கலாம். ஒன்லைன் மூலம் எளிதாக
நண்பர்கள் மற்றும் Group -களிலும் பகிர்ந்து கொள்ளலாம். இதில்
உள்ள மேலும் சிறப்பம்சம் என்ன வென்றால் நாம் உருவாக்கும்
பவர்பாயிண்ட் பிரசேண்டேசனை உலாவி மூலம் இயக்கி பார்க்கும்
வசதியும் இருக்கிறது. மாணவர்கள் முதல் பிஸினஸ் பிரஜெக்ட்
செய்யும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.பவர்பாயிண்ட் பிரசேண்டேசனை உலாவி மூலம் இயக்கி பார்க்கும்
வசதியும் இருக்கிறது. மாணவர்கள் முதல் பிஸினஸ் பிரஜெக்ட்
செய்யும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி-இணையம்

My computer இல் மறைந்து போன சிடி டிரைவை மீட்பது எப்படி?



Cd drive not detecting problemகணிணியில் நாம் தேவையான கோப்புகளை நகலெடுக்க, படம் பார்க்க போன்ற வேலைகளை செய்ய உதவியாக இருப்பது சிடி/டிவிடி டிரைவ் ஆகும். இவை இரண்டாம் நிலை சேமிப்புச் சாதனங்கள் (Secondary storage device) எனப்படும். சில நேரங்களில் சிடி டிரைவில் எதாவது ஒரு சிடியைப்போட்டு பார்த்தால் கணிணியின் My computer இல் சிடி டிரைவ் காணாமல் போயிருக்கும். நமது சிடி டிரைவ் நல்ல நிலையில் இருந்தும் நன்றாக வெளியில் வந்து உள்ளே செல்கிற நிலை இருப்பினும் அதற்குரிய டிரைவ் கணிணியில் காட்டப்படாமல் இருக்கலாம். இதை எப்படி சரி செய்வது?

1.முதலில் Device Manager இல் சிடி டிரைவ் இயல்பு நிலையில் இருக்கிறதா என்று பாருங்கள். Device manager செல்ல டெஸ்க்டாப்பில் உள்ள My computer ஐகானை வலது கிளிக் செய்து Manage மெனுவை கிளிக் செய்யவும். அதில் இடதுபக்கமுள்ள பகுதியில் Device Manager என்பதை கிளிக் செய்தால் வலது பக்கம் நமது கணிணியில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளின் பட்டியல் தெரியும். அதில் DVD / Cd Rom devices என்பது Enable ஆக உள்ளதா என சோதிக்கவும்.

Cd drive not detecting problem
2.உங்கள் கணிணியின் சிபியுவில் சிடி/டிவிடி டிரைவை இணைக்கும் IDE Cable சரியாக உள்ளதா எனவும் உடைந்திருக்கிறதா எனவும் சரிபார்க்கவும்.

3.மேற்கண்டவை சரியாக இருந்தும் கணிணியில் சிடி டிரைவ் தெரியவில்லை என்றால் Registry இல் ஒரு மாற்றம் செய்வதன் மூலம் காணாமல் போன சிடி டிரைவை மீட்கலாம்.

Start-> Run சென்று regedit என்று தட்டச்சிட்டு எண்டர் செய்யவும். இப்போது கணிணியின் Registry Editor திறக்கப்படும். பின்னர் கீழ் உள்ள கீயை கண்டுபிடிக்கவும். நீங்கள் தேர்வு செய்த Key சரியானது தானா என்பதை உறுதி செய்ய அதன் வலதுபக்கம் சிடி/டிவிடி டிரைவ் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Class\{4D36E965-E325-11CE-BFC1-08002BE10318}

Cd drive not detecting problem
இந்த கீயை கிளிக் செய்து வலது பக்கம் உள்ள பட்டியலில் UpperFilters, LowerFilters ஆகிய Subkey கள் இருந்தால் இரண்டையும் அழித்துவிடவும். அழிப்பதற்கு வலது கிளிக் செய்து Delete கொடுக்கவும். ஒரு முறை கணிணியை ரீஸ்டார்ட் செய்து விட்டு பார்க்கவும்.