Thursday 24 January 2013

ஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி?


இணையத்தில் கூகுளின் GMail மின்னஞ்சல் சேவையை அனைவரும் பயன்படுத்தி வருவீர்கள். ஒரு ஜிமெயில் கணக்கை வைத்து கூகுளின் மற்ற சேவைகளான bloggerBlogger, Google Plus, YouTube போன்றவற்றிலும் நுழைந்து பயன்படுத்தலாம். ஆனால் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளை வைத்திருக்கலாம். சொந்த வேலைகளுக்கு, அலுவலகப் பணிக்கு என்று தனித்தனியாக வைத்திருப்பார்கள். நாம் பயன்படுத்தும் இணைய உலவியில் ஒரு ஜிமெயில் கணக்கிலிருந்து மற்றொன்றுக்கு மாற முதல் கணக்கை Sign Out செய்து விட்டு பின்னர் தான் புதிய கணக்கில் செல்ல முடியும்.


நாள்தோறும் இந்த மாதிரி ஒரே நேரத்தில் இரண்டு மூன்று கணக்குகளைப் பயன்படுத்துவதாக இருப்பின் சிரமமாகத் தான் இருக்கும். இதற்கு உதவுகிறது கூகுளின் Multiple Sign-in வசதி. இதன் மூலம் நமது இணைய உலவியில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 10 கூகுள் கணக்குகளைப் பயன்படுத்த முடியும். தேவையெனில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு உடனடியாக மாறிக் கொள்ளவும் பல டேப்களில் பல ஜிமெயில் கணக்குகளைத் திறக்கவும் முடியும். 

இதில் பயன்படுத்தக் கூடிய சேவைகள்.

ஜிமெயில் கணக்கு மூலமாக கூகுளின் பிற சேவைகளையும் நீங்கள் பயன்படுத்த முடியும் என அறிந்திருப்பீர்கள். ஆனால் இந்த Multiple Sign-in முறையில் போகும் போது குறிப்பிட்ட சில சேவைகளை தான் அணுக முடியும். அவை என்னவென்று பார்ப்போம்.

GMail, Google Plus, YouTube, Calender, Alerts, Maps, News, Groups, Reader, Sites, Voice, Web Search.

நீங்கள் முதன் முதலில் நுழையும் கூகிள் கணக்கே முதன்மையாக கருதப்படும். இது தான் உங்களின் Default Google Account ஆக இருக்கும். மேற்குறிப்பிட்ட Multiple Sign-in சேவைகளில் இல்லாத சேவையைக் கிளிக் செய்தால் அது உங்களின் முதன்மை (Default) கணக்கில் தான் நுழையும். உதாரணமாக ஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளின் பிளாக்கர் தளத்தை இந்த முறையில் பயன்படுத்த முடியாது.

எப்படி பயன்படுத்துவது?

1. Google தளத்திற்கு சென்று உங்களின் முதன்மையான ஜிமெயில் கணக்கில் நுழையவும். பின்னர் கூகிள் தளத்தில் இடது வலது புறமாக உங்கள் கணக்கின் ப்ரொபைல் பெயர் மற்றும் புகைப்படம் தெரியும். அதில் கிளிக் செய்தால் கீழே ஒரு மெனு தோன்றும்.

2. அதில் Add Account என்பதைக் கிளிக் செய்தால் உலவியில் புதிய டேப் ஒன்றில் கூகிளின் பக்கம் தோன்றும். உங்களின் மற்றொரு கணக்கின் User Name, Password கொடுத்து விட்டால் போதும். அதிலும் நீங்கள் ஜிமெயில் படிக்கலாம். மேலே பார்த்த சேவைகளையும் அணுகலாம்.

3. இரண்டு அல்லது பல கணக்குகளில் நுழைந்த பின்னர் உங்கள் ப்ரொபைல் பெயர் மீது கிளிக் செய்தால் அனைத்து கணக்குகளும் தோன்றும். சுலபமாக எதனைப் பயன்படுத்த வேண்டுமோ அதை கிளிக் செய்தாலே போதும்.

குறிப்புகள்:

• அதிகபட்சம் 10 கணக்குகள் மட்டுமே 
• Sign-Out கொடுத்தால் அனைத்து கணக்குகளும் மூடப்படும்.
• Multiple Sign-in பட்டியலில் இல்லாத சேவையைப் பயன்படுத்த நீங்கள் அதன் குறிப்பிட்ட கணக்கில் நுழைய வேண்டும். அல்லது வேறு இணைய உலவியைத் திறந்து பயன்படுத்துங்கள்.

thanks Ponmalar