Thursday 25 July 2013

உங்கள் தகவல்களை பேஸ்புக்கில் மறைக்க


உங்கள் தகவல்களை பேஸ்புக்கில் மறைக்க


இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் என்பது ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது என்றே கூறலாம். அந்த அளவிற்கு அதன் மீது மக்களுக்கு அதிக மோகம் உள்ளது.
இந்த பேஸ்புக்கில் நடக்கும் குற்றங்களும் தினமும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது அதிகம் பெண்கள் தான் என்று கூறலாம்.
இனி இந்த கவலை உங்களுக்கு எப்பவும் வேண்டாம் உங்கள் தகவலை மொத்தமாகவே பேஸ்புக்கில் இருந்து மறைக்க இதோ எளிய வழி இருக்கிறது. பெரும்பாலும் இந்த வழி பலருக்கும் தெரிவதில்லை. அந்த வழிமுறையைக் காணலாம்.
முதலில் உங்கள் அக்கவுண்டில் உள்ள privacy settings க்கு போங்கள்.
பின்பு படத்தில் இருப்பது போல Edit க்கு போகவும்.
தற்போது only me என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
தற்போது படத்தில் உள்ளது போன்று கிளிக் செய்யவும் அதனால் அன்னியர்கள் யாரும் உங்களுக்கு பிரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்ப முடியாது.
பின்பு அதில் strict filtering என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் இதன் மூலம் அன்னியர்களிடம் இருந்து வரும் புதிய மெசேஜ்கள் தடுக்கப்படும்.
Who Can Look Me Up ல் friends என்று மட்டும் கொடுக்கவும் இதனால் உங்கள் மொபைல் நம்பரை வேறு யாரும் பார்க்க இயலாது.
இதில் கூகுள் போன்ற சர்ச் இன்ஜின்கள் உங்கள் புரோபைலை தேட அனுமதிக்கும் இடம் தான் Let other search engines link to your timeline ஆப்ஷன்.
அடுத்தது டைம்லைன் ஆப்ஷன் privacy க்கு கீழே இந்த ஆப்ஷன் இருக்கும்.
பின்பு அதில் சிகப்பு கோடிட்ட பகுதியை மாற்றி வையுங்கள் இதில் பெரும்பாலும் உங்களது நண்பர் என்ற ஆப்ஷனையே தெரிவு செய்யுங்கள்.
நீங்கள் அதில் வேலைகளை முடித்தவுடன் இதில் உள்ளது போன்ற சிவப்பு வட்டம் ஒன்று வரும் இதை நாங்கள் செய்தது எல்லாம் சரியா என்று செக் செய்து கொள்ளுங்கள்.
பிறகு ஆப்ஸ் க்கு கீழே வாருங்கள் அதில் உங்களுக்கு தேவையானதை செய்து கொள்ளுங்கள்.
இதில் பெரும்பாலும் ஆப்ஸ் ஆப்ஷனை ஆப்(OFF) நமக்கு நல்லதாகும் அதனால் அதை ஆப்(OFF) செய்து விடுங்கள்.
அடுத்து Advertise setting இருக்கும் இதிலும் சிறிது எடிட் செய்ய வேண்டும்.
இதில் Third Party Sites ல் No One என்று கொடுக்க வேண்டும் இதன் மூலம் நமது கணக்கு யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்படும்.