Tuesday, 14 June 2011

தமிழ் மொழியில் அறிமுகமாகும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்


மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில் அண்மையில் மேலும் 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது.

இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும்.

பல்வேறான மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. பிரவுசர் போட்டியில் மற்ற பிரவுசர்களை முந்திச் செல்ல இது கை கொடுக்கும் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது.

இந்த பிரவுசர் வெளியான போது மைக்ரோசாப்ட் இந்தியாவில் பிரபலமான 29 இணைய தளங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ பிரபலப்படுத்த இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது.

தமிழ் மற்றும் பிற மொழிகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை உங்கள் கணணியில் இயக்க http://windows.microsoft.com/en-US/internet-explorer/downloads/ie-9/worldwide-languages என்ற முகவரி சென்று அங்கிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உங்கள் கணணியில் இயங்கும் ஓபரேட்டிங் சிஸ்டம்(விஸ்டா/விண்டோஸ் 7 x 32 / 64 பிட்) எது என அறிந்து அதற்கேற்ற பதிப்பினை தரவிறக்கம் செய்திடவும். விண்டோஸ் எக்ஸ்பியில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 இயங்காது என்பது உங்களுக்கு ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது

thanks Net

Sunday, 12 June 2011

கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு


சில நேரங்களில் நாம் அவசரமாக வெளியில் செல்ல வேண்டி வரலாம். மிக முக்கியமான மென்பொருள்களை அல்லது கோப்புகளை தரவிறக்கம் செய்து கொண்டிருப்போம்.

அவ்வாறான வேளையில் தரவிறக்கம் செய்யும் வரை நம்மால் கணணியுடன் இருந்து அதை ஷெட்டவுண் செய்ய முடியாது.

அந்த மாதிரியான சமயங்களில் நமக்கு உதவுவதற்கு ஒரு சிறிய மென்பொருள் உள்ளது.

தரவிறக்க சுட்டி

சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு

உங்கள் வலைமனைக்கான புதிய வீடு அழைக்கிறது. இப்படி தான் வரவேற்கிறது பிரேவ்சைட்ஸ் இணையதளம். இந்த தளம் சொந்தமாக இணையதளத்தை உருவாக்கி கொள்வது மிக மிக சுலபம் என்று சொல்கிறது.

இணையதளத்தை அமைப்பதற்கு தேவையான கோடிங் எல்லாம் அறியாமலேயே நிமிடத்தில் உங்களுக்கென சொந்த தளத்தை உருவாக்கி கொள்ளலாம் என்கிறது இந்த தளம்.

இப்படி துணிச்சலாக உறுதிமொழி அளிப்பதாலோ என்னவோ வீரமிகு(பிரேவ்சைட்ஸ்)தளங்கள் என பெயர் வைத்துள்ளனர் போலும். முன் போல இணையதளம் அமைப்பது இல்லாமல் இப்போது மிகவும் எளிதாகி விட்டாலும் கூட இணைய சாமன்யர்களுக்கு ஒரு இணையதளத்தை தாங்களே உருவாக்கி கொள்வது என்பது கொஞ்சம் மிரட்சி அளிக்கலாம்.

ஓரளவுக்கேனும் எச்.டி.எம்.எல் போன்றவையும் குறித்த பரிட்சயம் இருந்தால் தான் இணையத்தில் உள்ள கருவிகளை கொண்டு இணையதளத்தை அமைப்பது சாத்தியம். இவையெல்லாம் தேவையேயில்லை. இணையதளம் தேவை என்ற விருப்பம் இருந்தால் போதும் புதிய தளத்தை உருவாக்கி கொள்ள வழி காட்டுகிறோம் என உற்சாகம் அளிக்கிறது பிரேவ்சைட்ஸ்.

வடிவமைப்பு போன்றவற்றையும் இந்த தளமே பார்த்து கொள்கிறது. பிரவுசரிலிருந்தே தளத்தில் தகவல்களை இடம் பெற வைக்கும் வசதி, மின்னஞ்சல், வலைப்பதிவு வசதி போன்றவரை உள்ளடக்கிய இணையதளத்தை உருவாக்கி கொள்ளலாம் என்று இந்த தளம் உறுதி அளிக்கிறது.

தனி நபர்கள், இசை கலைஞரகள், வர்த்தக பிரிவினர் என அனைத்து தரப்பினரும் தங்களுக்கு தேவையான தளத்தை உருவாக்கி கொள்ளலாம் என்கிற‌து. உங்கள் தளத்தை இன்றே உருவாக்கி கொள்ளுங்கள் என்று அழைக்கும் இந்த தளம் அதை நிறைவேற்றி தருகிறது என்றாலும் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெரும்பாலான சேவைகளை போலவே இந்த தளமும் அடிப்படையான தளத்தை மட்டுமே இலவசமாக உருவாகி கொள்ள உதவுகிறது. அந்த இலவச தளத்தில் இட வசதி மற்றும் கூடுதல் அம்சங்களும் குறைவு என்று தான் சொல்ல‌ வேண்டும். முழு வீச்சிலான‌ இணைய‌த‌ளம் தேவை என்றால் க‌ட்ட‌ண‌ சேவைக்கு தான் செல்ல‌ வேண்டும். ஆனால் எளிதான‌து விரைவான‌து என்ப‌தை ம‌றுப்ப‌த‌ற்கில்லை.

இணையதள முகவரி


thanks net

கூகுள் மொபைல்

சில்லறை வர்த்தகத்தில் கூகுள் பெரிய புரட்சி ஒன்றை மேற்கொள்ளத் தொடங்கி யுள்ளது. கூகுள் வாலட் (Google Wallet) என்ற பெயரில், உங்கள் மொபைல் போனை மணி பர்ஸாக மாற்றுகிறது.

இதன் மூலம்,கடைகளில் பொருள் வாங்கிய பின், அங்குள்ள சாதனம் ஒன்றின் முன், உங்கள் மொபைல் போனை அசைத்தால் போதும்; உங்கள் கணக்கில் உள்ள பணத்திலிருந்து பில்லுக்குத் தேவையான பணம், கடைக்காரர் அக்கவுண்டிற்குச் செல்லும்.

உங்கள் மொபைல் போனுக்கு அதற்கான ரசீது கிடைக்கும். கடைக்காரர் இந்த விற்பனைக்கென ஏதேனும் டிஸ்கவுண்ட், பரிசு கூப்பன் தருவதாக இருந்தால், அதுவும் மொபைல் போனில் பதியப்படும். இதனை அடுத்ததாக அந்தக் கடையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.



இது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். இந்த சிஸ்டத்தின் அடிப்படையில் இயங்கும் தொழில் நுட்பத்தின் பெயர் NFC (Nearfield communication).

இதன் அடிப்படையில் இயங்கும் இரு சிப்களை, இரண்டு சாதனத்தில் அமைத்து அருகே வைத்து இயக்குகையில், அவை இரண்டும் தாங்களாகவே, தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும்.

கிரெடிட் கார்ட் தகவல்கள், ட்ரெயின் டிக்கட், கூப்பன்களில் உள்ள பார் கோட் தகவல்கள் போன்ற தகவல்களை எளிதாக இவை கையாளும். இந்த சிப்களை இனி வெளியாகும் அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களிலும் வைத்திட கூகுள் முடிவு செய்துள்ளது.

முதலில் ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல்படும் நெக்சஸ் எஸ் மொபைலில் இது செயல்படும். முதல் முறையாக அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோ மற்றும் நியூயார்க் நகரங்களில் இது சோதனை செய்யப்படுகிறது.

பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மற்ற நகரங்களுக்கு விரிவாக்கப்படும். பின்னர், அனைத்து நாடுகளின் முக்கிய நகரங்களில் அமல்படுத்தப்படும்.

அமெரிக்காவில் பல வர்த்தக நிறுவனங்களும், கிரெடிட் கார்டுகளை வழங்கும் நிதி நிறுவனங்களும் வங்கிகளும் இதற்கென கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றன.

பன்னாட்டளவில் மூன்று லட்சம் வர்த்தக நிறுவனங்கள் இதற்கு போட்டி போட்டுக் கொண்டு முன்வந்துள்ளதாகவும் கூகுள் அறிவித்துள்ளது.

சாம்சங், மோட்டாரோலா, எச்.டி.சி. நிறுவனங்கள் தங்கள் மொபைல் போன்களில் இதனை அறிமுகப்படுத்த ஒத்துக் கொண்டுள்ளன.

ஏற்கனவே இந்த தொழில் நுட்பத்தினை Microsoft, Visa, Sony, Nokia and AT&T ஆகிய நிறுவனங்கள் சப்போர்ட் செய்து வருகின்றன. என்.எப்.சி. தொழில் நுட்பம் இனி ஸ்மார்ட் போன்களில் ஒருங்கிணைந்த ஒரு வசதியாக கருதப்படும்.

இனி ட்ரெயின், பஸ் அல்லது விமானப் பயணங்களுக்கு, இன்டர்நெட் மூலம் டிக்கட் எடுத்து, அதனை அச்செடுத்து, மறந்துவிடாமல் எடுத்துச் செல்லும் வேலை எல்லாம் இருக்காது.

மொபைல் மூலமாகவே இன்டர்நெட்டில் டிக்கட் எடுத்து அதனைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். பின்னர், ஏறிச் செல்லும் வாகனங்களில் கதவுகளில் பதிந்து வைக்கப்பட்டுள்ள சாதனத்தின் முன், மொபைல் போனை ஆட்டிவிட்டு உள்ளே செல்லலாம்.




கடைகளில் பொருட்களை வாங்கிய பின்னர், மொபைல் போனை காசு வாங்கும் இயந்திரத்தின் முன் அசைத்துவிட்டு, ரசீது பெற்று பொருளை எடுத்துச் சென்றுவிடலாம்.

பணம் மட்டுமின்றி, வாகன ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை போன்றவற்றையும் இதில் கொண்டு வர கூகுள் திட்டமிடுகிறது.

இதில் மோசடி நடக்காமல் இருக்க அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கூகுள் கொண்டு வந்துள்ளது. மொபைல் போனில் இது இருந்தாலும், போன் இயக்கத்துடன் கலக்காமல் தனி சிஸ்டம் மற்றும் மெமரியில் என்.எப்.சி. சிப் இயங்கும்.

போன் இயக்கத்திற்கென ஒரு PIN எண்ணும், மொபைல் மணி பர்ஸுக்கென இன்னொரு PIN எண்ணும் பயன்படுத்த வேண்டும்.

கூகுளின் இந்த புதிய நிதி வர்த்தக நடவடிக்கை அதனுடைய ஆண்ட்ராய்ட் சிஸ்டம் மற்றும் அவை இயங்கும் மொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களை அதன் வளையத்திற்குள் கொண்டு வரும்.

வர்த்தகத்தில் ஈடுபடாமலேயே, பன்னாட்டளவில் பெரிய வர்த்தக நிறுவனமாக கூகுள் மாறும்.

இந்த துறையில் தங்களின் பங்கினையும் மேற்கொள்ள நிச்சயம் மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்பத்தினைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

அதிக எண்ணிக்கையில் நிறுவனங்கள் வந்தால், நமக்கு லாபம் தானே
thanks net

Thursday, 2 June 2011

கூகுளின் புதிய வசதி : Gmail Priority Inbox (மின்னஞ்சல்களின் முக்கியத்துவம்)


கூகிள் இன்றொரு புதிய வசதியை ஜிமெயில் இல் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சேவை gmail priority inbox எனப்படுகிறது. நமக்கு தினமும் ஏராளமான மின்னஞ்சல்கள் வருகின்றன. இன்பாக்ஸில் நிறைந்து விடும் அத்தனை மின்னஞ்சல்களையும் நம்மால் படிக்க இயலாமல் சோர்ந்து போய்விடுவோம்.குறிப்பிட்ட மின்னஞ்சல்களை தடை செய்வதும் இதற்கு ஒரு தீர்வாகலாம்.இந்த நேரத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சலை முக்கியமானது அல்லது முக்கியமற்றது எனக்குறித்து வைக்கலாம். முக்கியமானவற்றை மட்டும் முன்னிறுத்தி priority inbox காட்டுவதால் நமது நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

Priority Inbox ஐ செயல்படுத்த Gmail Settings -> Priority inbox செல்லவும்.
அதில் Show Priority Inbox என்பதை கிளிக் செய்து சேமித்துக்கொள்ளவும்.
பின்னர் நமது ஜிமெயில் இன்பாக்ஸில் உள்ள மின்னஞ்சல்கள் மூன்று வகையாக
பிரிக்கப்படுகின்றன.


Important - இப்பகுதியில் நாம் முக்கியம் எனக்குறிப்பிடுகிற மின்னஞ்சல்கள் இருக்கும்
Starred - இப்பகுதியில் நாம் நட்சத்திரமிட்ட மின்னஞ்சல்களின் பட்டியல் இருக்கும்
Everything else - முக்கியமற்ற மற்றும் மீதமுள்ள அனைத்து மின்னஞ்சல்களும் இருக்கும்.

Priority inbox செயல்படும் விதம்

இந்த சேவை புத்திசாலித்தனமாக செயல்படும் வண்ணம் அமைக்கப்பட்டு உள்ளது.
1.நாம் அனுப்பும் மின்னஞ்சல்கள், (Send mails)
2.நாம் குறிப்பிட்டு படிக்கும் மின்னஞ்சல்கள், (Read messages)
3.நாம் பதில் அனுப்பும் மின்னஞ்சல்கள், (Reply messages)
4.எந்த மாதிரி தலைப்பில் அமைந்த மின்னஞ்சல்களை படிக்கிறோம், (keywords)
5.யாருடைய மின்னஞ்சல்களுக்கு குறியீடு கொடுக்கிறோம் (Starred mails)

போன்றவற்றை வைத்து தானாகவே யாருடைய மின்னஞ்சல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை தீர்மானித்து கொள்கிறது.

மேலும் ஒரு வசதி என்னவென்றால் ஜிமெயில் தவறாக சில மின்னஞ்சல்களை முக்கியம் என எடுத்துக்கொண்டால் நாம் அதை மாற்றிக்கொள்ளலாம். உங்கள் இன்பாக்ஸிற்கு மேலே மஞ்சள் நிறத்தில் + குறியீடும் , - குறியீடும் இருக்கும். முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய மின்னஞ்சல்களை தேர்வு செய்து + பட்டனை கிளிக் செய்தால் முக்கியமானதாகி விடும். - குறியீடை அழுத்தினால் முக்கியத்துவம் அற்றதாகிவிடும்.


மேலும் மின்னஞ்சலின் அருகில் உள்ள நட்சத்திரக் குறியீடை கிளிக் செய்தால் அவர்களும் தனியாக Starred என்ற பகுதியில் வந்துவிடுவார்கள். படிப்பதற்கும் எளிதாக இருக்கும்.