Saturday, 30 July 2011

கணிதத்தை கற்றுக் கொடுக்கும் மென்பொருள்


கணித திறன்களையும் அவற்றின் செயல்முறைகளையும் கற்று கொள்ள சிறுவர்களுக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமைகிறது REKEN TEST என்ற மென்பொருள்.

இந்த மென்பொருள் மூலம் கணித அறிவின் எளிய பிரச்சனைகளை தீர்க்க முடியும். அதாவது கூட்டல், கழித்தல், பெருக்குதல், வகுத்தல் மற்றும் தசமங்கள், பின்ன பிரச்சனைகள், பணப் பிரச்சனைகள் போன்றவற்றுக்கு அடிப்படை மட்டத்தில் இருந்து பல மட்டங்களில் கற்றுகொள்ள வசதியளிக்கிறது இந்த மென்பொருள்.

கணித பயிற்சிகளை செய்யும் போது நேர கணிப்பினை இந்த மென்பொருள் வழங்குவதால் மிக வேகமாக கணித பயிற்சிகளை செய்யும் ஆற்றலை வளர்க்க முடியும்.

வீட்டிலேயே கணித பாடத்தினை கற்றுகொள்ள கண்டிப்பில்லாத கனிவான கணித ஆசானாக இந்த மென்பொருள் செயல்படுகிறது.

தரவிறக்க சுட்டி

Friday, 29 July 2011

வீடியோக்களை வெட்ட இலவச video cutter..

இந்த மென்பொருளை பின்வரும் லிங்கில் சென்று தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இந்த மென்பொருளில் எந்த வீடியோவையும் ஓபன் செய்து கொண்டு சிலைடர்கள் மூலம் தேவைப்படும் பகுதியின் ஆரம்ப நிலையையும், இறுதி நிலையையும் தேர்வு செய்து கொண்டு, Save Video மூலம் உங்களுக்கு தேவையான வீடியோ பகுதியை பெற்று கொள்ளுங்கள்.



இதன் மூலம் உங்கள் வீடியோவை MPEG4, DivX, MP3, FLV, WMV Format -களில் பெற முடியும். குறிப்பிட்ட வீடியோவில் உள்ள ஆடியோ பகுதியை மட்டும் பிரித்தெடுத்து MP3 யாக சேமித்து கொள்ள முடியும்.







Download Links:

Thursday, 28 July 2011

கூகுள் மெனுபாரின் நிறத்தை அழகாக மாற்றலாம்



கூகுல் தளத்திற்கு சென்றால் கூகுளின் மெனுபார் இருக்கும். அந்த மெனுபாரின் நிறம் இளம் கருப்பு நிறத்தில் இருக்கும். இது பார்ப்பதற்கு சற்று மங்கலாக இருப்பதால் சில பேருக்கு இந்த நிறம் பிடிப்பதில்லை. அப்படி நினைப்பவர்கள் இனி கவலை பட தேவையில்லை நமக்கு பிடித்த மூன்று வண்ணங்களில் நாம் சுலபமாக அந்த மெனுபார் கலரை மாற்றி கொள்ளலாம். குரோம் நீட்சியின் உதவியுடன் இந்த மெனுபார் கலரை சுலபமாக மாற்றி கொள்ளலாம்.
இந்த வசதியை பெற நீங்கள் குரோம் உலவியை உபயோகிக்க வேண்டும். கீழே உள்ள நிறங்கள் மாற்ற பட்ட மெனுபாரின் அழகை காணுங்கள்









இதில் உங்களுக்கு தேவையான நிறத்தின் மீது க்ளிக் செய்தால் நீட்சி டவுன்லோட் ஆகும். அடுத்து சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Install பட்டனை அழுத்தவும் அவ்வளவு தான் அடுத்த வினாடியே உங்கள் கூகுள் மெனுபாரின் நிறம் மாறிவிடும். கூகுள், ஜிமெயில்,கூகுள் பிளஸ் இப்படி எந்த கூகுள் தளத்திற்கு சென்றாலும் இனி அதன் மாற்ற பட்ட மெனுபாரோடு அழகாக காட்சி அளிக்கும்.

thanks net

மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி


எமது 3G மற்றும் GSM போன்களின் சிம் காட்டில் குறிப்பிடத்தக்களவு தகவல்களை சேமித்து வைக்கக்கூடிய வசதி உண்டு. நாம் எமது சிம்மில் சேமித்த போன் புக் நம்பர்ஸ் கோல் கிஸ்ட்ரி மற்றும் எஸ்சமஸ் (Phonebook,sms,call history) போன்றவற்றை நாம் அழித்திருந்தால் Sim Card Recovery 3.0 இவ் மென்பொருளை உபயோகிப்பதன் மூலம் நாம் மீட்டு எடுத்துக் கொள்ளலாம்.
இவ் மென்பொருளை நாம் விலை கொடுத்து வாங்கினால் நாம் சிம் வாங்கியதில் இருந்து அழித்த அனைத்து தகவல்களையும் பெறலாம். Trail Virsion னை நாம் இலவசமாக உபயோகிக்கலாம். இதன் மூலம் நாம் கடைசியாக அழித்த இரு தகவல்களினை மாத்திரம் மீட்கலாம்.


YOUTUBE-ல் உள்ள வீடியோவை MP3 யாக பதிவிறக்க

இணையத்தில் உலவும் அனைவரும் Youtube தளத்தை அறிந்திருப்போம் இந்த தளமானது வீடியோவை பகிர்ந்து கொள்ளும் தளமாகும். இந்த தளத்தில் பல்லாயிரகோடி கணக்கான வீடியோக்கள் உள்ளன. இவற்றை நாம் முழு வீடியோவாக மட்டுமே பதிவிறக்கி பாப்போம். ஆனால் இவற்றில் உள்ள வீடியோவில் இருந்து வாய்ஸ் (SOUND) னை மற்றும் தனியாக பிரித்து கேட்க பலருக்கும் ஆசை இருக்கும்.





மேலும் பழையபாடல்கள் கிடைப்பது அரிதாகும், Youtube ல் தேடுனால் அனைத்தும் வீடியோவாகவே இருக்கும் அவற்றை நம்து விருப்பத்திற்கு எற்றது போல் MP3 மாற்றி கேட்க முடியும். இதற்கு FetchMP3 எனும் தளம் உதவுகிறது. இந்த தளத்தில் நமக்கு வேண்டிய வீடியோவை சர்ச் செய்து அதனை MP3 யாக பதிவிறக்கி கொள்ள முடியும்.

தளத்தின் முகவரி: FetchMP3

இந்த தளத்தில் சென்று உங்களுக்கு விருப்பமான பாடலை MP3 யாக பதிவிறக்க முடியும். இந்த தளத்தில் Youtube தளத்தில் Low,High,Very High போன்ற பல்வேறு Format களில் Download செய்ய முடியும்

கணிணியில் வெற்று போல்டர்களை எளிமையாக அழிக்க RED மென்பொருள்


பல காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் கணிணியில் பல வெற்று போல்டர்கள் (Empty Folders) நமக்குத் தெரியாமல் உருவாகி நிறைந்திருக்கும். இவை கணிணியின் ஹார்ட் டிஸ்கில் பல இடங்களில் இருக்கலாம். கணிணியில் மென்பொருள்களை நிறுவும் போதும் அவற்றை நீக்கும் போதும் சில வெற்று போல்டர்கள் அழிக்காமலே விடப்படுகின்றன. சில நேரம் நாமே New Folder உருவாக்கி விட்டு அதனை எதற்குப் பயன்படுத்துவது என்று தெரியாமல் விட்டு வைத்திருப்போம். இவைகளைத் தேடிக் கண்டறிந்து அழிப்பது சுலபமான விசயமன்று.

கணிணியில் உள்ள வெற்று போல்டர்களைத் தேடவும் அதனை உடனடியாக அழிக்கவும் உதவுகின்ற ஒரு மென்பொருள் தான் RED (Remove Empty Directories). இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படக்கூடியது. இதனை நிறுவிய பின்னர் தேவையான டிரைவைத் தேர்ந்தெடுத்து Scan Drive என்பதைக் கிளிக் செய்யவும். இதன் பின் குறிப்பிட்ட டிரைவில் உள்ள வெற்று போல்டர்கள் எல்லாமே பட்டியலிடப்படும். Delete பட்டனைக் கொடுத்தால் அனைத்து போல்டர்களும் அழிந்துவிடும்.


அழிக்கப்படும் போல்டர்கள் Recycle bin க்கே செல்லும். அடுத்ததாக Empty Recycle bin கொடுத்தால் கணிணியிலிருந்தே நீக்கப்படும். இதன் Settings பகுதியில் நேரடியாக நீக்குவது, Hidden Folder களைச் சோதித்தல், எந்த மாதிரி போல்டர்களை நீக்கக் கூடாது போன்ற அமைப்புகளைக் கையாள முடியும்.


இம்மென்பொருளின் ஒரே குறை என்னவென்றால் தேவைப்பட்ட போல்டர்களைத் தேர்வு செய்து அழிக்க முடியாது. எல்லா வெற்று போல்டர்களுமே ஒரே கிளிக்கில் அழிக்கப்படும். அதனால் விண்டோஸ் நிறுவப்பட்டிருக்கும் டிரைவ் / சி டிரைவ் (C Drive) பகுதியைச் சோதிப்பதைத் தவிர்ப்பது நலம்.

தரவிறக்கச்சுட்டி: http://www.jonasjohn.de/lab/red.htm

 

புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது,ஆனால் அதற்கான நேரமும் பொறுமையும் தான் இல்லை என்று மெய்யாகவோ ,பொயாகவோ அலுத்து கொள்பவர்களுக்காக என்றே அழகான அருமையான புதுமையான இணையதளம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.

புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது,ஆனால் அதற்கான நேரமும் பொறுமையும் தான் இல்லை என்று மெய்யாகவோ ,பொயாகவோ அலுத்து கொள்பவர்களுக்காக என்றே அழகான அருமையான புதுமையான இணையதளம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.

புக்ஸ் என்பது அந்த இணையதளத்தின் பெயர். புத்தகங்களை குறிக்கும் ஆங்கில சொல்லான புக்ஸில் ‘கே’ விற்கு பதிலாக கியூ என்னும் எழுத்து இடம் பெறும் வகையில் இதன் பெயர் அமைந்துள்ளது.

பெயரில் மட்டும் அல்ல செயல்பாட்டிலும் இதே புதுமை இருக்கிறது.

படிப்பதை இன்னும் செயல் திறனோடு மேற்கொள்ளுங்கள் என்று சொல்லும் இந்த தளம் ,வாசிப்பதன் மூலம் தேவைப்படும் அறிவை சுலபமாகவும் ,இலவசமாகவும் பெறுங்கள் என்கிறது.

புத்தகத்தில் உள்ளவற்றை சுலபமாக தெரிந்து கொள்வது என்பது சரி.ஆனால் இலவசமாக தெரிந்து கொள்வது என்றால் என்ன பொருள் என்று குழப்பம் ஏற்படலாம்.

இலவசமாக படிப்பது என்றால் படிக்காமலேயே படிப்பது என்று வைத்து கொள்ளுங்களேன்.படிக்காமல் படிப்பது எப்படி என்று மீண்டும் குழப்பம் ஏற்பட்டால் ,முழு புத்தகத்தையும் படிக்காமல் அதன் சாரம்சத்தை மட்டும் சில வரிகளில் தெரிந்து கொள்வது என்று பொருள்.

புத்தகங்களின் சாரம்சம் அல்லது அதன் முக்கிய பகுதியை சுருக்கமாக தருவதுண்டு அல்லவா, அதே போல இந்த சேவை புனை கதை அல்லாத எந்த புத்தகத்தையும் முக்கிய வரிகளாக சுருக்கி தந்துவிடுகிறது.அதாவது மேற்கோள்கள் போல அளிக்கிறது.

புத்தகத்தை முழுவதும் படிக்க முடியாவிட்டாலும் பரவயில்லை,அதன் சாரம்சத்தை தெரிந்து கொள்ள முடிந்தால் நல்லது என்று கருதுபவர்களுக்கு புத்தகத்தின் உள்ளடக்க சுருக்கம் மிகவும் பயனுள்ளது .ஆனால் இதையும் கூட படிக்க முடியாமல் திணறுபவர்கள் இருக்கின்றனர்.

அதே நேரத்தில் எதையுமே ரத்தின சுருக்கமாக சில வரிகளில் சொல்லும் போது எல்லோரையும் கவரவே செய்யும் தானே.

அதை தான் இந்த தளம் வாசிப்பதை புதுமையானதகாவும் புத்திசாலித்தனமானதாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறது.அதற்கேற்ப புத்தகங்களில் உள்ளவற்றை கிரகித்து கொள்வதற்கான புதுமையான வழியை உருவாக்கியிருப்பதகாவும் பெருமைப்பட்டு கொள்கிறது.

புனை கதை அல்லாத புத்தகங்களின் உள்ளடக்கத்தை முக்கிய பகுதிகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் இதனை சாத்தியமாக்கும் வழியையும் இந்த தளம் வழங்குகிறது.

இப்படி பகிரப்பட்ட புத்தகங்களின் முக்கிய வரிகளை முகப்பு பக்கத்தில் இடம் பெற்றுள்ள புத்தக பட்டியலில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பட்டியலில் உள்ள புத்தகத்தை கிளிக் செய்தால்,அந்த புத்தகத்திற்கான தனி ப்க்கம் வருகிறது.

அதில் அந்த புத்தகத்தின் முக்கிய வரிகள் கொடுக்கப்பட்டுள்ளன.அந்த வரிகளை படிதாலே புத்தகத்தின் ஆதார அம்சம் என்னவென்று புரிந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.ஒரு சில வரிகளில் ஒரு புத்தகத்தை படித்து விடுவது என்பது சிறந்த் விஷயம் தானே!

புத்தக பிரியர்கள் தாங்கள் படித்த புத்தககங்களில் இருந்தும் முக்கிய வரிகளை இப்படி பகிர்ந்து கொள்ளலாம்.ஏற்கனவே இடம்பெற்றுள்ள புத்தகத்தை படித்தவர்கள் தாங்கள் முக்கியமாக கருதும் வரிகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.

புத்தகம் படிப்பதென்பது ஒரு தவம்.அந்த தவத்தின் மூலம் பெறக்கூடிய அறிவையும் புரிதலையும் ஒரு சில வரிகளில் பெற முடியுமா? என்று தெரியவில்லை.ஆனால் பக்கம் பக்கமாக படிக்க முடியாதவர்களுக்கு புத்தகம படிப்பதன் ஆர்வத்தையும் அதன் பலனையும் தரக்கூடியது என்னும் விதத்தில் இந்த சேவையை வரவேற்கலாம்.புத்தகங்களை பார்த்தாலே ஓடுபவர்களில் பலரை புத்த்க உலகின் பக்கம் இந்த சேவை இழுத்து வரக்கூடும்.

மேலும் எதையுமே சில வரிகளில் தெரிந்து கொள்ள துடிக்கும் டிவிட்டர் தலைமுறைக்கு இந்த சேவை மிகவும் தேவை என்றும் சொல்லலாம்.

அதோடு இங்கு சம்ர்பிக்கப்படும் பட்டியலில் இருந்து புதிய புத்தகங்களை தெரிந்து கொள்ளலாம்.அதன் சாரம்ச வரிகளை கொண்டு அந்த புத்தகத்தை படிக்கலாமா என்று முடிவு செய்து கொள்ளலாம்.அந்த வகையில் தீவிர புத்தக புழுக்களுக்கும் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.

இப்பொது தான் துவக்கப்பட்டுள்ளதால் தற்போது இந்த தளத்தில் உள்ள புத்தக பட்டியல் பெரிதாக இல்லை.ஆனால் அமைப்பும் உள்ளடக்கமும் கவரக்கூடியதாகவே இருக்கின்றன.பலரும் பயன்படுத்த துவங்கினால் இந்த தளம் சுவாரஸ்யம் மிகுந்தாதாக உருவாகலம்.

இணையதள முகவரி;http://www.booqs.com/

Monday, 11 July 2011

போட்டோக்களை மெறுகேற்ற - சிறந்த 10 தளங்கள்

படங்களுக்கு எவ்வாறு கூடுதல் அழகு சேர்ப்பது என்றுதான், படங்களை அழகூட்டுவது என்றவுடன் போட்டோசாப் அல்லது எதாவது மூன்றாம் தர போட்டோ எடிட்டிங் மென்பொருளை பயன்படுத்தபோவதில்லை. இதனை நாம் ஆன்லைன் உதவியுடன் செய்யப்போகிறோம். இணையத்தில் போட்டோக்களுக்கு அழகூட்ட பல்வேறு தளங்கள் உள்ளன. அவற்றில் சிறந்த பத்து தளங்களை தான் இங்கே வரிசை படுத்த போகிறேன்.



  
சுட்டியில் குறிப்பிட்டுள்ள தளங்களுக்கு சென்று உங்களுக்கு வேண்டிய டிசைனை தேர்வு செய்யவும். பின் உங்களுடைய படத்தினை பதிவேற்றம் செய்யவும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட போட்டோ, நீங்கள் தேர்வு செய்த டிசைனோடு இணைந்து இருக்கும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். இதன் மூலம் எளிமையாக உங்களுடைய படத்திற்கு அழகூட்ட முடியும்.




இப்போது நீங்கள் குறிப்பிடும் அளவிலும் படத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் இது போன்று உருவாக்கு படங்களை நாம் எளிதில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். மணி கணக்கில் உட்கார்ந்து போட்டோசாப் அல்லது போட்டோ எடிட்டிங் மென்பொருளில் செய்யும் வேலை ஆன்லைனில் சிலமணி துளிகளில் செய்துவிட முடியும். இதனால் நமக்கு நேரம் மிச்சமாகும். மேலும் நாம் விரும்பிய வடிவங்களில் படத்தினை உருவாக்கி கொள்ள முடியும்.


thanks net

Saturday, 9 July 2011

உங்கள் நண்பர்களின் USB Drive இல் உள்கோப்புகளையோ அல்லது உங்களுக்கு தெரியாதவர்களின் USB Drive இலுள்ள கோப்புகளையோ அவர்கள் அறியாமலே திருடுவதற்கு


உங்கள் நண்பர்களின் USB Drive இல் உள்கோப்புகளையோ அல்லது உங்களுக்கு தெரியாதவர்களின் USB Drive இலுள்ள கோப்புகளையோ அவர்கள் அறியாமலே திருடுவதற்கு Hidden File Copire என்ற மென்பொருள் உதவுகிறது. 

அவர்கள் உங்கள் கணணியில் தங்கள் USB Driveஐ பயன்படுத்தும் போது அவர்களது USB Driveஇல் உள்ள கோப்புகள் அனைத்தும் அவர்களுக்கு தெரியாமலே உங்களது கணணியில் கொப்பி செய்யப்பட்டு விடும்.

ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவுமே இருக்காது. இந்த மென்பொருள் மூலம் கொப்பி செய்யப்படும் கோப்புகள் C:WINDOWSsysbackup என்ற இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். 

தரவிறக்க சுட்டி