Thursday, 10 November 2011

தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது ?

நாம் பயன்படுத்தும் அல்லது வாங்கும் நோக்கியா மொபைல் தரமானதா என்றுஎப்படி தெரிஞ்சுகொள்வது கடைகாரர் எல்லா போன்களும்

தரமானதுதான்னு சொல்லுவார் உங்கள் நோக்கியா போனின் தரத்தை
எளிதாக கண்டுபிடிக்கலாம் .கடைகாரரிடம் போனை வாங்கி *#06# டயல் செய்ங்க. சில எண்கள் வரும்

இதை "IMEI" நம்பர் என்று சொல்லுவாங்க. (International Mobile Equipment Identity) (கேள்விபட்டுருபீங்க).பிறகு அந்த எண்களில் ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கங்களை பாருங்கள்.
Phone serial no. x x x x x x ? ? z z z z z z z
(XXXXXX - Approval code, ZZZZZZZ - Serial number)

ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கம்

0 2 அல்லது 2 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு EMIRATES ,தரம் : மோசம்

0 8 அல்லது 8 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு GERMANY , தரம் : சுமார்

0 1 அல்லது 1 0 என்றால் அந்த போன் தயாரான நாடு FINLAND ,தரம் : நல்ல தரம்

0 4 என்றால் அந்த போன் தயாரான நாடு CHINA . தரம் : நல்ல தரம்
( CHINA என்றதும் பயப்பட வேண்டாம்.அதனுடைய software வேறு நாட்டில் தாயரிக்கபட்டது.)


0 3 என்றால் அந்த போன் தயாரான நாடு KOREA . தரம் : நல்ல தரம்

0 5 என்றால் அந்த போன் தயாரான நாடு BRAZIL . தரம் : சுமார்


0 0 என்றால் அந்த போன் ஒரிஜினல் நோக்கியா தொழிற்சாலையில் தயாரானது. தரம் : மிக மிக நல்ல தரம், மற்றும் உடலுக்கு எந்த தீங்கும் இழைக்காதது.
1 3 என்றால் அந்த போன் தயாரான நாடு AZERBAIJAN ,தரம் : மிக மோசமான தரம்.எளிதில் பழுதடையும் . மேலும் உங்கள் உடலுக்கு தீங்கானது.

இனிமேல் NOKIA MOBILE வாங்க சென்றால் இந்த எண்களை மறக்காமல் எழுதிக்கொண்டு போங்க. பதிவு பயனுள்ளதாக இருந்துருக்கும் என நம்புகிறேன்-----

Wednesday, 9 November 2011

கூகுள் + இன் மற்றுமொரு புதுவசதி .

கூகுளின் சமூக வலையமைப்பான கூகுள் +, பேஸ்புக்கிற்கு போட்டியாக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றது.இந்நிலையில் வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் அமைப்புக்கள் தங்களுக்கென கூகுள் + இல் ஒரு பக்கத்தினை உருவாக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலவசமாகவே இவ்வசதியினை வழங்குவதாகவும், இதற்கான பக்கத்தில் விளம்பரங்களைக் காட்சிப்படுத்தப் போவதில்லையெனவும் கூகுள் அறிவித்துள்ளது.

இதே போன்ற வசதியினை பேஸ்புக் ஏற்கனவே வழங்கி வருகின்றது.

கூகுள் + அதிவேகமாக வளர்ந்துவரும் ஒரு சமூக வலையமைப்பு. தற்போது இதன் பாவனையாளர்களின் எண்ணிக்கை 40 மில்லியனாகும்.

எனினும் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை இதனை விட பலமடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது.

கூடிய விரைவில் இது பேஸ்புக்கிற்கு பலத்த சவாலளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

thanks blogs

இலவச பூதக்கண்ணாடி.

அந்தகாலங்களில் 40 வயதுக்கு மேல்தான் கண்ணாடி அணிவார்கள். இன்று சிறுவயதிலேயே கண்ணாடி அணிந்துகொள்கின்றனர்.சமயங்களில் நாம் கம்யூட்டரில் பணிபுரியும் சமயம் கண்ணாடி இல்லாமல் -கண்ணாடியை மறந்து விட்டிதருந்தால்-இந்த சின்ன சாப்ட்வேர் உங்களுக்கு உதவிபுரியும். 1 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓபபன் ஆகும்.இதில் நாம் பார்க்கும் லென்ஸின் அளவினை வேண்டிய அளவிற்கு நாம் அதிகரித்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மிக பெரியான அளவிற்கு உயரம் அகலத்தை அமைத்துக்கொள்ளலாம்.
சிறிய அளவிலும் நாம் அமைத்துக்கொள்ளலாம்.கர்சரை நகர்தத நமக்கு வியுவில் தெளிவாக தெரியும்.
இதிலேயே இன்வர்ட் கலரும் உள்ளது.சாதாரண மெக்னிபையிங் கிளாஸ்ஸில் உருவத்தை பெரியதாக்கிதான் காண்பிக்கும். இதில் நமக்கு தேவையான பிக்ஸல் அளவினை வைத்து-உருவங்கள் பெரிய அளவிளான பிக்ஸல்அமைத்தால் எவ்வாறு தெரியும் என இதில் எளிதில் அறிந்துகொள்வது இதில கூடுதல் வசதியாகும். பயன்படுத்திப்பாருங்கள்.

thanks net

இணைய வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா?

நுட்பம் அதிவேகத்தில் வளர்ந்து வரும் இன்றைய உலகில் அனைத்துத் துறைகளும் கணினிமயம் ஆவதுடன், உலகில் எந்த மூலையில் இருந்தும் சேவைகளைப் பெறுமாறு இணையத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. வங்கியியலும் இதிலிருந்து விதிவிலக்காக முடியுமா என்ன? இன்று அனைத்துப் பிரபலமான வங்கிகளும் தமது வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய சேவைகளான மின்சாரப் பயனீட்டுக்கட்டணம், ரயில் பயணச்சீட்டு, விமானப்பயணச்சீட்டு எனப் பல சேவைகளுக்கான கட்டணத்தை இணையத்தின் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் பயன்பெறுமாறு தமது வங்கிக்கணக்கு வசதிகளை அமைத்துள்ளன.

இதற்காக தனது வங்கிக்கணக்குகளை இணையம் மூலமாகவே கையாளும் முறையையும் வங்கிகள் அறிமுகப்படுத்தி உள்ளன. பணத்தைக் கையால் தொடாமலே இன்றைய உலகில் சம்பாதிப்பதும் அதனைச் செலவு செய்வதும் பரவலாக நடந்து வருகிறது. இதில் இவ்வளவு வசதிகள் இருந்தாலும், இதில் சிக்கல்களும் இல்லாமல் இல்லை. நுட்பத்தினால் வசதிகள் வளரும்போது அதனைத் தவறாகப் பயன்படுத்தி பணத்தைக் கையாடல் செய்யும் தீயவர்களின் உத்தியும் அதனுடனேயே வளர்கிறது. எனவே வங்கிக் கணக்குகளுக்கான கடவுச் சொற்களையும் (Passwords) கடன் அட்டை (Credit card) எண்களையும் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும். அவை தீயவர்களின் கையில் சிக்கினால் அவற்றின் மூலம் பணக்கையாடல் செய்து திருட்டுகள் செய்யவும் வழிகோலுகிறது.

வங்கிகள் பலவும் தங்கள் வாடிக்கையாளர்கள் இந்த முறையில் பணபரிமாற்றம் செய்வதையும், வங்கி கணக்குகளை கையாள்வதையும் பெரிதும் ஊக்கப்படுத்தி வருகின்றன. இந்த இணைய வழி பரிமாற்றம் முதலீட்டு சந்தை வர்த்தகத்திலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த முறை மிக வசதியாய் இருப்பதால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் வங்கிகளில் நடைபெற்ற அடையாளத் திருட்டு (Identity Theft) மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வங்கிக் கணக்கு விபரங்களை (Account Details) மின்னஞ்சலில் கேட்டு வங்கி முகவரியிலிருந்து வருவது போல் பாவனை செய்து வரும் கடிதங்களுக்கு பதில் அனுப்பும் போதே இது போன்ற திருட்டுக்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற கடிதங்கள் வரும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

எந்த ஒரு பொறுப்புள்ள வங்கியும் தனது வாடிக்கையாளரின் கடவுச் சொல்லைக் கேட்டு மின்மடல் அனுப்பவோ அல்லது தொலைபேசி மூலம் அழைப்போ செய்யாது. அவ்வாறு கடவுச் சொல் போன்ற தனிப்பட்ட தகவல்கள் (Private credentials) கோரப்பட்டால் நிச்சயம் அது திருட்டு முயற்சியாகத் தான் இருக்கும். எனவே இது போன்ற மின்மடல்கள், தொலைபேசி அழைப்புகள் வந்தால் கவனமாக இருக்கவேண்டும். இந்த வகை தகவல் திருட்டுக்களால் நாட்டின் முன்னேற்றம் பெரியளவில் பாதிக்கப்படுகிறது. இணைய வழி அரசு நிர்வாகம் மற்றும் இணைய வழி பணப்பரிமாற்றம் ஆகியவற்றின் நம்பகத்தன்மை முழுவதுமாகவே சந்தேகத்திற்கு உள்ளாகி விடுகிறது.

மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் பகிர்ந்து கொள்ளக் கூடாத தகவல்களான இவற்றை சிலர் இவை மறக்காமல் இருக்க காகிதங்களில் எழுதி வைத்துள்ளதையும் காணலாம். இதுவும் தவறான வழிமுறையாகும். இது தீயவர் எவரது கையில் சிக்கினால் ஆபத்து தான். கடினமான கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுப்பதுடன் அவற்றை மனனம் செய்து வைத்துக் கொள்ளுதலே சிறந்தது. இணைய உலாவு மையங்களில் (Browsing centers) இதுபோன்ற வங்கி தொடர்பான பரிமாற்றங்களைச் செய்யாமல் இருப்பதே சிறந்தது.

சில வங்கிகள் இது போன்ற கையாடல்களைத் தடுக்க பண அளவுக்கான உச்சவரம்பு விதித்துள்ளன. ஒவ்வொரு பரிமாற்றத்தையும் குறுஞ்செய்தி (SMS) மூலம் தெரிவிக்கும் வசதியையும் பெரும்பாலான வங்கிகள் அளிக்கின்றன. இதனையும் பயன்படுத்தி விழிப்புடன் இருக்க இயலும்.

இவை தவிர தொழில்நுட்ப வழியில் செய்யப்படும் கயமைத் தனங்களை (fraud) புகார் செய்ய காவல் துறையின் இணையக்குற்றப் புலனாய்வுப் (Cybercrime) பிரிவும், வங்கியின் தகவல் தொழில்நுட்பத் துறையும் இணைந்து செயலாற்ற வேண்டும்.

வங்கிகளும் அதிகப் பாதுகாப்பு நிறைந்த 128 படி சங்கேதக்குறியேற்றம் (128 bit encryption) கொண்ட மென்பொருள்களைப் பயன்படுத்துவதோடு வெரிசைன் (Verisign) தாவ்டே (thawte) போன்ற பிரபல இணைய எண்குறியேற்ற சான்றிதழ்களையும் (Digital certificates) பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் மன நிம்மதியுடன் வங்கிகளை இணையத்தில் பயன்படுத்த ஆவன செய்யவேண்டும்.

அதோடு நாம் வங்கியின் பாதுகாக்கப்பட்ட இணையப்பக்கத்தில் (secure webpage) தான் இருக்கிறோமா என்று பயனர்களும் கவனிக்க வேண்டும். (இதனை வங்கிகள் https:// என்று தொடங்கும் பக்கமாக வைத்திருக்கின்றன. இதனையும் கவனித்தல் அவசியம்) நமது கடவுச்சொல்லை அடிக்கடி மாற்றிவர வேண்டும். நமது பணி முடிந்தவுடன் அனைத்து திரைகளையும் முடிவிட வேண்டும். மேலும் உலாவியின் (browser) தற்காலிக சேமிப்புப் பக்கங்களையும் (cache) அழித்துவிடவேண்டும்.

இதுபோன்ற சில குறிப்புகளை பின்பற்றுவதால் பாதுகாப்பான முறையில் இணைய வழி வங்கிக்கணக்கை பராமரிக்கவும், பாதுகாக்கவும், பயனீட்டவும் முடியும். பல இணைய வழி பணபரிமாற்றத்தை நம்பிக்கையுடன் கையாளவும் முடியும்.

Sunday, 6 November 2011

பேஸ்புக்கிலிருந்து வரும் தேவை இல்லாத இமெயில்களை தடுப்பது எப்படி?

இன்றைய இணைய யுகத்தில் பேஸ்புக் பயன்படுத்ததாவர் எவருமே இருக்க மாட்டார். அதனால் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளது. முக்கியமானது தேவை இல்லாமல் மின்னஞ்சல்கள் வருவது.அதை எப்படி தவிர்ப்பது என்று சொல்வதேஇந்தப் பதிவு. 


பேஸ்புக் மூலம் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது நம்  நண்பர்கள் நம் ஸ்டேட்டஸ் மீது ஒரு கிளிக் செய்தாலே நமக்கு மின்னஞ்சல் வருவது. இதை எப்படி தடுப்பது என்றுதான் இன்றைய பதிவு.முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழையவும்.


மேலே உள்ளது போல பக்கத்தின் வலது பக்கம் Home என்பதற்கு அருகில் சொடுக்கவும் செய்து Account Settings  செல்லவும். இதில் இடது புறம் Notifications என்பதை  சொடுக்கவும்



இப்பொழுது, இதில் மேலே படத்தில் உள்ளதை போல Email Frequencyஎன்பதை சொடுக்கவும். இதன் மூலம் உங்களுக்கு ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல் வராது, மாறாக Photo Tag, Payment Confirmation, Security, and Privacy Notifications மற்றும் சில முக்கியமான செய்திகள் (இது நீங்கள் ரொம்ப நாளாக பேஸ்புக் பக்கம் வராவிட்டால் பிரபல செய்திகள், உங்கள் சுவற்றில்(Wall) நண்பர்கள் எழுதியது போன்றவை ஒரே மின்னஞ்சலில் வரும் )

எந்த மின்னஞ்சலும் வேண்டாம் என்பவர்களும் இதையே தெரிவு செய்து கொள்ளலாம். 

இல்லை எனக்கு சில விஷயங்கள் மின்னஞ்சலில் வர  வேண்டும் என்று கேட்பவர்கள் இதனைசொடுக்கமல் விட்டு கீழே All Notifications என்ற பகுதியில் உங்களுக்கு தேவையான ஒன்றின் மீது (Photos, Pages இது போன்று ) கிளிக் செய்து தேவையான Notification தெரிவு செய்து Save செய்து விடுங்கள். இதன் மூலம் உங்கள் விருப்பமானவற்றை மட்டும் மின்னஞ்சலில் பெறலாம். 

சைட் டிஷ்: 

மிக முக்கிய காரியம் முடிந்து விட்டது இனி குட்டி தகவல்கள். 

Facebook அக்கவுண்ட் Email முகவரியை மாற்றுவது எப்படி? 

Facebook => Account Settings => Email இதில் உங்கள் Primary இமெயில் ஆக ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே இருந்தால் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்கள், இல்லை புதியதாக ஒன்றை கொடுத்து (Add Another Email) Primary ஆக மாற்றிக் கொள்ளலாம். 

நமது பேஸ்புக் கணக்கை வேறு யாரேனும் பயன்படுத்துகிறாரா என்று அறிவது எப்படி?

Facebook => Account Settings => Security => Login Notifications இதை enable செய்யவும். இதன் மூலம் உங்கள் கணக்கில் நீங்கள் இதுவரை பயன்படுத்தாத கணினியில் இருந்து Log-in செய்தால் உங்களுக்கு மின்னஞ்சல் வந்துவிடும். (கவனிக்க. வேறு கணினி, உங்கள் கணினி அல்ல)

இதை Enable செய்த உடன் ஒருமுறை Log-அவுட் செய்து பின்னர் நுழையவும், அப்போது உங்கள் கணினிக்கு ஒரு பெயர் கேட்கும் கொடுத்து விடுங்கள். 

கடந்த நுழைவுகளை பார்ப்பது எப்படி? 

Facebook => Account Settings => Security => Active Sessions இதில் நீங்கள் உங்கள் கணக்கில் நுழைந்த வேறு வேறு இடம்/கணினி மூலம் நுழைந்து இருந்தால் அவற்றை காட்டும், எது வேண்டாமோ அல்லது சந்தேகமோ அதை End Activity கொடுத்து விடலாம். 

பேஸ்புக் App's களுக்கு கடவுச்சொல் வைப்பது எப்படி? 

சில பேஸ்புக் பயன்பாடுகள் (Applications) Secure ஆனது அல்ல. எனவே அவற்றுக்கு கடவுச்சொல் கொடுத்தால் நல்லது தானே.  Facebook => Account Settings => Security => App Passwords இதில் பயன்பாட்டின் பெயரைக் கொடுத்து விட்டால் போதும். 

Friday, 4 November 2011

மடி கணினிக்கு பயனுள்ள ஒரு இலவச மென்பொருள் !

இது ஒரு இலவச மென்பொருள் .இது மடி கணினிகளுக்காக உருவாக்கப்பட்டது. இதை மடி கணினியில் நிறுவி இயக்கினால் மடி கணினியில் பொருத்தப் பட்டிருக்கும் பேட்டரி குறித்த அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள முடியும் .


மடி கணினியை தயாரித்த நிறுவனம் சீரியல்  நம்பர் போன்றவற்றை அறியலாம் அத்தோடு  பேட்டரியில் எத்தனை சதவீதம் சக்தி காலியாகியுள்ளது இன்னும் எவ்வளவு நேரம் நீடிக்கும் போன்ற விபரங்களை அறிந்து கொள்ள முடியும் .மிகவும் பயனுள்ள இம்மென்பொருளின் அளவு மிகச்சிறியது. 

Tuesday, 1 November 2011

அனைவரும் விரும்பும் இலவச கட்டண மென்பொருள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை _

எமது வீடியோ கோப்புக்களை கன்வேர்ட் செய்துகொள்ள பல்வேறு இலவச மென்பொருட்கள் இருக்கின்றன.

எனினும் ஒப்பீட்டளவில் கட்டண மென்பொருட்களின் தரமும், வசதிகளும் செயல்படும் வேகமும் இலவச மென்பொருட்களில் சற்றுக் குறைவே.

இருந்த போதிலும் 49.95 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள WinX Video Converter Deluxe மென்பொருளை முற்றிலும் இலவசமாக தரவிறக்கும் வசதி பாவனையாளர்களுக்கு வழங்கப்படுகின்றது.

எனினும் இச்சலுகை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை மாத்திரமே. எனவே அனைவரும் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவி பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

MKV, M2TS, MTS, AVCHD, H.264/MPEG-4 AVC, AVI, MPEG, MP4, WMV, MOV, FLV, RM, RMVB, WebM, Google TV, etc. போன்ற அனைத்து வகையான வீடியோ போர்மட்களிலும் கன்வேர்ட் செய்ய ஏதுவாக உள்ளது.

DVD Burner மற்றும் Youtube Video Downloader போன்ற இதர பயனுள்ள வசதிகளும் இந்த மென்பொருளில் உள்ளது. Windows,Mac பாவனையாளர்கள் இதனை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பில் சென்று இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். மென்பொருளுக்கான Licence Code அந்த தளத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த சீரியல் எண்ணைக் கொடுத்து மென்பொருளின் முழு பதிப்பையும் இலவசமாக 'எக்டிவேட்' செய்து கொள்ளுங்கள்.

இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய - WinX Video Converter Deluxe.

மேலும் இச்செய்தியை பகிர்ந்துகொள்வதன் மூலம் மற்றவர்களும் இதனைப் பெற்றுக்கொள்ள வழிசெய்திட முடியும்.

குறிப்பு: எதிர்வரும் 6 ஆம் திகதி வரை மட்டுமே இலவசமாக தரவிறக்கம் செய்யமுடியும் மேலும் 10ஆம் திகதிக்குள் 'எக்டிவேட்' செய்து கொள்ளவும் வேண்டும்.