Thursday, 2 February 2012

Nokia செல்பேசியில் சில பயன்மிக்க ரகசிய குறியீடுகள்..!!


Nokia செல்பேசியில் சில பயன்மிக்க ரகசிய குறியீடுகள்..!!
உங்கள் செல்பேசியின் IEMI எண்ணை அறிய
*#06#
உங்கள் செல்பேசியின்  Firmware Version ஐ அறிய
*#0000#
உங்கள் செல்பேசியை ஆரம்ப நிலைக்கு கொண்டுவர (Factory Settings)
*#7780#
உங்கள் தகவல்களை அழித்து கைபேசியை ஆரம்ப நிலைக்கு கொண்டுருவதற்கு   
*#7370#
Bluetooth முகவரியை அறிய (இந்த வசதி கொண்ட கைபேசிகளில் மட்டும்)
*#2820#
WiFi MAC முகவரியை அறிய  (இந்த வசதி கொண்ட கைபேசிகளில் மட்டும்)
*#62209526#
Warrenty, Counter,Life Time தகவல்களை பெற   
*#92702689#
EFR  activate செய்ய  (தரமான அலையை பெற.. பேட்டரி விரைவாகசக்தியை இழக்கும்).
*3370#
EFR ஐ Deactivate செய்ய (இதன் மூலம் சாதரண அலையை பெற முடியும்பேட்டரி சாதாரணமாக இயங்கும்.)
*3370#

Wednesday, 1 February 2012

பென் டிரைவ்களின் தரத்தை சோதிக்க இலவச மென்பொருள் ChkFlsh


USB கருவிகளான பென் டிரைவ், மெமரி கார்டு போன்றவை இன்றைய கணிணியுலகத்தில் தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலம் செயல்பட்ட பின் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்றன. பென் டிரைவ்களும் தற்போது போலியாக 32 GB என்றெல்லாம் சொல்லி விற்கப்படுகிறது. சிலருக்கோ தாங்கள் வாங்கிய பென் டிரைவ் தரமானதா அல்லது போலியானதா என்று கண்டறியத் தெரியாது. அதே போல தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பென் டிரைவ் பழுதாயிருக்கிறதா என்றும் கண்டுபிடிக்க முடியாது. 

பென் டிரைவ் மற்றும் ஏனைய USB கருவிகளின் தரத்தைச் சோதிக்க ChkFlsh என்ற இலவச மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் Read Speed, Write Speed, Sector wise Errors போன்ற விசயங்களை சோதித்து அறியலாம். இதனால் நமது பென் டிரைவ் தரமாக உள்ளதா என்றும் தெரிந்து கொள்ளலாம்.

பென் டிரைவை எப்படி சோதிப்பது?

இந்த மென்பொருளைத் தரவிறக்கி ChkFlsh என்ற கோப்பை கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் பென் டிரைவை கணிணியில் செருகவும். பென் டிரைவில் உள்ள தகவல்களை அழித்து விட்டு சோதிக்கப் பயன்படுத்துவது நலமானது. இதில் 3 வகையான Access Type கள் இருக்கின்றன.

Use Temporary file என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் Write and Read சோதனையைச் செய்ய முடியும். உங்கள் பென் டிரைவில் ஏதேனும் தகவல்கள் இருந்து Read Test மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனில் As Logical Drive என்பதைக் கிளிக் செய்து கொள்ளவும். Test Length – இதில் One Full Cycle என்பதைத் தேர்வு செய்யவும். பின்னர் Start கொடுத்தால் பென் டிரைவ் சோதிக்கப்படும்.
ஒவ்வொரு பைல் செக்டார்களாக (File Sector) களாக சோதிக்கப்பட்டு வரும். இறுதியில் ஒவ்வொரு செக்டாரும் பச்சை வண்ணத்தில் காண்பிக்கப்பட்டால் உங்கள் பென் டிரைவ் நலமாக இருக்கிறது என்று அர்த்தம். இதோடு பென் டிரைவின் வேகம் மற்றும் பிழைகள் இருந்தால் காண்பிக்கப்படும்.

தரவிறக்கச்சுட்டி : http://mikelab.kiev.ua/PROGRAMS/ChkFlsh.zip