Tuesday 18 December 2012

மாயன் வம்சத்தினர் ஒரு காலத்தில் சிறப்பாக வாழ்ந்தவர்கள். அவர்கள் மண்ணியல், விண்ணியல், சிற்பம், ஓவியம், காலக்கணிதம், வடிவ இயல், மாந்திரீகம், கணிதம், அறிவியல் என பல கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தனர். உயர்ந்த அறிவு படைத்த அவர்கள் ஒரு காலண்டரை உருவாக்கியிருந்தனர். அந்த காலண்டரில் குறிப்பிட்டுள்ளபடியே சில விஷயங்கள் இதுவரை நடந்திருக்கின்றன.

அந்தக் காலண்டர் டிசம்பர் 21, 2012 உடன் முடிந்து போகிறது. அதன் பி
ன் ஒன்றுமில்லை. இதனால் உலகம் அழிந்து விடுமோ என்ற பரபரப்பு உருவாகியுள்ளது. இல்லாவிட்டால் அவ்வளவு அறிவு படைத்த மாயன் சந்ததிகள் அந்த காலண்டரின் தொடர்ச்சியாக வேறு காலண்டரை உருவாக்கியிருக்க மாட்டார்களா?

அதுசரி, இந்த மாயன்கள் யார்? அவர்களுக்கு எப்படி உலக அழிவை கணித்துக் கூறும் ஆற்றலும்,திறனும் வந்தது? கிறிஸ்து பிறப்பதற்கு கிட்டத்தட்ட 2000, 3000 ஆண்டுகளுக்கு முன், மாயா என்ற இனம் தென்அமெரிக்காவில் இருந்தது. அவர்கள் வானியல் சாஸ்திரம் முதல் புவியியல், விஞ்ஞானம்,சிற்பக்கலை, கட்டடக்கலை என பல கலைகளில் ஆற்றல் மிகுந்தவராக வாழ்ந்தனர்.

இவர்கள் உருவாக்கிய காலண்டர் கி.மு. 3113-ல் தொடங்கி கி.பி. 2012 டிசம்பர்21-ம் திகதி முடிவுக்கு வருகிறது. அவர்களது நாள் காட்டியின் முதல் நாள் 0, 0, 0, 0, 0 என்பதில் ஆரம்பிக்கிறது. அது சுழன்று 13, 0, 0, 0, 0 என்னும் இறுதி நாளை அடைகிறது. இதற்கு மொத்தமாக 5125 வருடங்கள் ஆகின்றன.

மாயனின் இந்த நாட்காட்டியின் முதல் தேதியான 0, 0, 0, 0, 0 என்பது தற்போதுள்ள நம் நவீன நாள்காட்டியின்படி,கி.மு. 3114-ஐக் குறிக்கிறது. மாயன் காலண்டரின் முடிவடையும் தேதியான 13, 0, 0, 0, 0 நாள் தற்போதுள்ள நமது நவீன நாள்காட்டியின்படி கி.பி. 2012டிசம்பர் மாதம் 21-ம் திகதி 11:11:11 மணிக்கு முடிவடைகிறது.

மிகச் சிறந்த வானியல் அறிவு பெற்றிருந்த மாயன் இன மக்கள் 2012-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் திகதியுடன் தங்கள் காலண்டரை முடித்துக் கொள்ள என்ன காரணம்? அன்றுதான் உலகத்தின் இறுதிநாள். அதனால்தான் அவர்கள் காலண்டரில் அதன் பிறகு திகதிகள் இல்லை. அதன் பிறகு இந்த உலகம் இருக்காது இதுதான் மாயன் காலண்டரை நம்புவோரின் நம்பிக்கையாக இருக்கிறது.

இது உண்மைதானா?உலகம் அழிந்து விடுமா?

நாசா விஞ்ஞானிகள், அதற்கு வாய்ப்பே இல்லை. இதெல்லாம் வீண் புரளி என்கிறார்கள். ஆனால் நம்பிக்கையாளர்கள் பலர், உலகம் அழியாவிட்டாலும் நிச்சயம் அன்று மிகப்பெரிய ஆபத்துக்கள் பூமிக்கு ஏற்படக் கூடும். ஏதேனும் புதிய கிரகங்கள் அல்லது விண்கற்கள் சூரியனுடனோ அல்லது பூமியுடனோ மோதலாம். இதைப்பற்றி மாயன்கள் தங்கள் சிலம்பலம் நூலில் மிகத் தெளிவாகக் குறித்துள்ளனர்.

அதன் காரணமாக பூமி சுழற்சியில் அல்லது சூரியனின் பாதையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம். ஆபத்துக்கள் நேரலாம் என நம்புகின்றனர். இது பற்றி சென்னை பிர்லா கோளரங்க செயல் இயக்குனர் டாக்டர் பி.எம்.அய்யம்பெருமாள் கூறியதாவது:-

வருகிற 2012-ம் வருடத்தில் உலகம் அழியும் என்று, சமீபகாலமாக உலகம் எங்கும் தகவல் பரவி வருகிறது. இது வதந்தியா? இல்லது உண்மையா? என்று பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

சூரியனில் இருந்துதான் கிரகங்கள் தோன்றி பிரபஞ்சத்தில் இயங்கி வருகின்றன. சூரியன் தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரியனில் இருந்து வினாடிக்கு 750 டன் ஹைட்ரஜன் ஆவி வெளியாகி 746 டன் ஹீலியமாக வெளிப்படுகிறது. மீதமுள்ள 4டன் ஒளியாகவும், வெப்பமாகவும் வெளிப்படுகிறது.

விஞ்ஞானிகளின் அதி நுட்ப ஆராய்ச்சியில் இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பே இல்லை. பலர் கூறுவது போல் 2012-ல் கண்டிப்பாக உலகம் அழியாது. 2020-ம் ஆண்டு ஒரு குறுங்கோள் பூமியை தாக்கும் என்று கூறுகிறார்கள். அவ்வாறு தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

குறுங்கோள் இடம் பெயர்ந்து பூமியை தாக்கும் நிலை ஏற்பட்டால் அக்னி ஏவுகணை மூலமாக குறுங்கோளை பொடிப்பொடியாக தகர்க்கும் சக்தி உலக ஆய்வுக்கூடத்தில் உள்ளது. ஆகவே எந்த சூழ்நிலையிலும் பூமிக்கு ஆபத்து ஏற்படாது என்றார்

Sunday 9 December 2012

Nokia செல்பேசியில் சில பயன்மிக்க ரகசிய குறியீடுகள்..!!



Nokia செல்பேசியில் சில பயன்மிக்க ரகசிய குறியீடுகள்..!!
உங்கள் செல்பேசியின் IEMI எண்ணை அறிய
*#06#
உங்கள் செல்பேசியின்  Firmware Version ஐ அறிய
*#0000#
உங்கள் செல்பேசியை ஆரம்ப நிலைக்கு கொண்டுவர (Factory Settings)
*#7780#
உங்கள் தகவல்களை அழித்து கைபேசியை ஆரம்ப நிலைக்கு கொண்டுருவதற்கு   
*#7370#
Bluetooth முகவரியை அறிய (இந்த வசதி கொண்ட கைபேசிகளில் மட்டும்)
*#2820#
WiFi MAC முகவரியை அறிய  (இந்த வசதி கொண்ட கைபேசிகளில் மட்டும்)
*#62209526#
Warrenty, Counter,Life Time தகவல்களை பெற   
*#92702689#
EFR  activate செய்ய  (தரமான அலையை பெற.. பேட்டரி விரைவாகசக்தியை இழக்கும்).
*3370#
EFR ஐ Deactivate செய்ய (இதன் மூலம் சாதரண அலையை பெற முடியும்.பேட்டரி சாதாரணமாக இயங்கும்.)
*3370#

தொலைந்து போன MOBILE-லை மீட்டெடுக்க

உங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா? அல்லது திருடிவிட்டார்களா? கவலையே வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும்.

இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை (IMEI) நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

IMEI என்பது International Mobile Equipment Identity என்பதின் சுருக்கம் ஆகும்.

சரி. இந்த IMEI International Mobile Equipment Identity எண்ணை எப்படிக் கண்டறிவது.?
IMEI NUMBER

  • உங்கள் மொபைலில் *#06# என டைப்செய்திடுங்கள்
  • உடனே உங்களுடைய மொபைல்போனின் IMEI எண் திரையில் தோன்றும்.
  • அதை பாதுகாப்பாக ஒரு இடத்தில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • எப்போதாவது உங்கள் மொபைலை நீங்கள் இழக்க நேரிடும்போது இந்த எண் உங்களுக்கு உதவும். 
  • மேலும் தொலைந்து போன மொபைலை சட்டவிரோதமாக பயன்படுத்துபவர்களிடமிருந்தும் நம்மைப் பாதுகாக்க உதவும்.
IMEI எண் மொபைலை எப்படி கண்டுபிடிக்க உதவும்? அல்லது எப்படி பாதுகாக்க உதவும்?
உங்கள் மொபைல் தொலைந்துவிட்டால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும். அதற்கு cop@vsnl.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

மின்னஞ்சலில் முக்கியமாக இருக்க வேண்டிய தகவல்கள்
  1. பெயர்(NAME)
  2. முகவரி(ADDRESS)
  3. போன் என்ன மாடல்(MOBILE PHONE MODEL)
  4. அந்த போனைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர்(MOBILE PHONE COMPANY)
  5. கடைசியாக போன்செய்த எண்(LAST DIALED NUMBER)
  6. உங்கள் மின்னஞ்சல் முகவரி(EMAIL ADDRESS)
  7. எந்த தேதியில் தொலைந்து(LOST ON DATE)
  8. போனின் அடையாள எண் (IMEI) 
ஆகிய தகவல்களை கட்டாயம் அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் தகவல்களைச் சேர்க்கலாம்.

Police Department -ன் திறன் வாய்ந்த GPRS and INTERNET இணைந்த வலுவானதொரு கட்டமைப்பின்(Strong Structure) மூலம் உங்கள் போனை யாராவது பயன்படுத்தும் பட்சத்தில் அந்நபர் இருக்கும் இடம், மற்றும் பயன்படுத்தும் நபரைக் கண்டுபிடித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள். உங்களுக்கும் இதுப் பற்றிய தகவல்களைத் தெரியப்படுத்துவார்கள். 

அதனால் நண்பர்களே முதலில் உங்களுடைய மொபைல் போனில் IMEI எண்ணை மறக்காமல் உங்கள் டயரி போன்ற ஏதாவதொன்றில் *#06# என்பதைக் கொடுத்து தோன்றும் எண்ணைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் விலையுயர்ந்தCostly Mobile Phone தொலைந்துபோனால் காவல்துறை உதவியுடன் மீண்டும் பெற அது வழிவகுக்கும். மீண்டும் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.

மின்னஞ்சலை கண்டுபிடித்தவர் வி.ஏ. சிவ அய்யாத்துரை


புறாவைப் பயன்படுத்தி தூது அனுப்புவது முதல், அஞ்சலகம் மூலம் கடிதங்களைப் பெற்றவரைக்கும் தகவல் தொடர்பானது ஒரு சீரான இடைவெளியில் வளர்ந்துகொண்டே வந்தது. கணினி என்ற ஒரு வஸ்துவை கண்டுபிடித்த பிறகு, தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட அசுர வளர்ச்சியை யாராலும் தடுத்த முடியவே இல்லை.. 
v.a.siva iyyadurai
வி.ஏ. சிவ அய்யாதுரை
கணினியுடன் இணையமும் பயன்பாட்டுக்கு வந்ததும் அதனுடைய வளர்ச்சி வேகம் இருமடங்காகியது என்றால் அது மிகையாகாது. அதுவும் தகவல்தொடர்புக்கு பயன்படுத்தக்கூடிய சாதனங்களின் வளர்ச்சியும், அதனைச் சார்ந்த மென்பொருள்களின் வளர்ச்சியும் விண்ணைத் தொட்டது.

அந்த வகையில் நாம் அன்றாடம் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையும் ஒன்று. இந்த மின்னஞ்சல் சேவையை gmail உட்பட பல்வேறு நிறுவனங்கள் நமக்கு இலவசமாக அளிக்கின்றன. 

தற்போது மின்னஞ்சல் இல்லையென்றால் உலகத்தில் முக்கியமான அலுவலக கோப்பு பரிமாற்றங்கள் முதல், தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்கள் வரை அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும். அந்த அளவிற்கு மின்னஞ்சலின் முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது.
v.a. ayyadurai
இத்தகைய பயன்மிக்க மின்னஞ்சலை கண்டுப்பிடித்து தகவல்தொடர்பு உலகிற்கு அர்பணித்தவர் ஒரு தமிழர் என்றால் நம்மால் நம்பமுடிகிறதா? 

ஆம் நண்பர்களே..! மின்னஞ்சலைக் கண்டுபிடித்து, அதனை முதன் முதலாக உலகிற்கு அளித்தவர் ஒரு தமிழரே!

V.A. சிவா அய்யாதுரை என்ற பெயர்கொண்ட இவர்தான் பயன்மிக்க மின்னஞ்சலை உருவாக்கியவர். 

மின்னஞ்சலைக் கண்டுபிடித்தபோது இவருக்கு பதினான்கு வயது மட்டுமே.. ஆச்சர்யமாக இருக்கிறதா? மிகவும் இளவயதிலேயே இச்சாதனையை இவர் நிகழ்த்தியிருக்கிறார். 
v.a. iyaadurai
பல இழுபறிகளுக்குப் பின்னரே இவர் கண்டுபிடித்த மின்னஞ்சலுக்கு அமெரிக்க அரசாங்கம் காப்புரிமை கொடுத்தது. 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முப்பதாம் நாள்தான் முறையாக இவர் கண்டுபிடித்த மின்னஞ்சலுக்கு காப்புரிமையைப் பெற முடிந்தது. இதற்கிடையில் இவர் கண்டுபிடித்த இந்த வியத்தகு கண்டுபிடிப்பிற்கு பலரும் சொந்தம் கொண்டாடினார்கள் என்பது வேறு கதை. 

மாணவப்பருவத்தில் தான் கண்டுபிடித்த மின்னஞ்சலுக்கு காப்புரிமைப் பெற நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டார். இதைப்போன்ற கஷ்டகாலம் மற்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கும் வரக்கூடாது என்ற எண்ணத்தில் இவர் இன்னொவேஷன் கார்ப்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, புதிய கண்டுபிடிப்பாளர்களை  ஊக்குவிக்கும் வகையில் ஒரு லட்சம் டாலர் பரிசுத்தொகையும் அறிவித்திருக்கிறார். 

இன்றைய நிலையில் பல்வேறு தொழில்களுக்கு சொந்தக்காரரான சிவா அய்யாதுரை அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகம் MIT யில் விரிவுரையாளரும் கூட. 

அமெரிக்க தமிழர் பேரவை பெட்னா அவரை கௌரவித்து சிறப்பித்து பாராட்டியிருக்கிறது.

 இனி நீங்கள் ஒவ்வொரு முறையும் மின்னஞ்சலைப் பயன்படுத்தும் பொழுதும், திரு. வி.ஏ. சிவா அய்யாதுரையே உங்களின் நினைவுக்கு வருவார் என நினைக்கிறேன்

ஜிமெயிலில் புதிய வசதி Send SMS..!

நாள்தோறும் புத்தம் புதிய வசதிகளையும்,தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தும் Google நிறுவனத்தின் மற்றுமொரு புதிய அறிமுகம் SEND SMS.

இந்த வசதி Gmailல்  அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது.

இந்த Send SMS வசதியின் மூலம் இனி ஜிமெயிலில் இருந்தவாறே உங்கள் நண்பர்களின் மொபைல்களுக்கு  SMS அனுப்ப முடியும்.

நமக்கு வரும் ரிப்ளை SMS நமது மின்னஞ்சல்களுக்கே வந்து சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Gmail மூலம் SMS அனுப்பும் முறை: 


உங்கள் ஜிமெயிலில் லாகின்(login) செய்துகொள்ளுங்கள்.
அதில் வலது பக்கம் இருக்கும் search, chat or send sms என்னும் பெட்டியில் உங்கள் நண்பரின் மொபைல் நம்பரை உள்ளிடுங்கள். மொபைல் எண்ணை உள்ளிடும்போதே உங்களுக்கு சில வசதிகளடங்கிய பெட்டித் தோன்றும். அதில் Send Sms என்பதை கிளிக் செய்துகொள்ளுங்கள்.

புதியதாக ஒரு செல்போன்உள்ளிடுகிறீர்கள் என்றால்



அதில் send sms என்னும் வசதியைத் கிளிக் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
உடனே புதிதாக chat window தோன்றும். அதில் நீங்கள் அனுப்ப வேண்டிய SMS -ஐ தட்டச்சிட்டு அனுப்பலாம். அவர்கள் உங்களுக்கு திரும்ப அனுப்பும் SMSகள் Chat window-வில் ரிப்ளையாக(Reply) வந்துவிடும்.

மற்றுமொரு முறை: 

நீங்கள் Chat window வைத் திறந்துகொள்ளுங்கள். அதில் உள்ள more என்ற வசதியை கிளிக் செய்யுங்கள்..

அதில் Send SMS என்னும் வசதியை கிளிக் செய்வதன் மூலம் தோன்று விண்டோவில் நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை தட்டச்சிட்டு என்டர் செய்தால் உங்கள்

இப்போது அதில் உங்கள் நண்பர்களுடைய மொபைல் நம்பரை தட்டச்சிடுங்கள்.

உடன் இரண்டு வசதிகள் தோன்றும். அதில் send sms என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது தோன்றும் விண்டோவில் உங்கள் நண்பரின் Cell Number தட்டச்சிட்டு Save கொடுத்துக்கொள்ளுங்கள். பிறகு தோன்றும் SMS chat window வில் (பெட்டியில்) அனுப்ப வேண்டிய செய்தியை தட்டச்சிட்டு enter கொடுங்கள்..

உங்கள் நண்பரின் மொபைல் போனுக்கு நீங்கள் அனுப்பிய செய்தி SMS ஆக சென்று சேர்ந்திருக்கும்.

உங்கள் நண்பர்கள் ஆப்லைனில் இருக்கும்போது தொடர்புகொள்ள இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு Google SMS பெறும் நண்பர்கள் தங்கள் மொபைல் மூலம் அனுப்பும் Reply SMS கள் உங்கள் சாட்விண்டோவில் Reply ஆக வந்துவிடும்.

மொபைலிலிருந்து அனுப்பும் SMS களுக்கு நீங்கள் பயன்படுத்தும் மொபைல் ஆபரேட்டர் நிறுவனங்களின் கட்டண விதிமுறைகளுக்கு ஏற்ப SMS க்கான கட்டணம் விகிதம் இருக்கும். SMS அனுப்புவதற்கு வசதியாக நீங்கள் பயன்படுத்தும் Mobile Operator நிறுவனங்களின் Planகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.


இந்த வீடியோவில் GMAIL SMS வசதியை பயன்படுத்துவது எப்படி? என்பதை காட்டியிருக்கிறேன்..



இந்தியாவில் Google SMS வசதியை பெற்றிருக்கும் மொபைல் நிறுவனங்களின் பட்டியல்கள்:

India

Aircel
IDEA
Loop Mobile
MTS
Reliance
Tata DoCoMo
Tata indicom
Vodafone (Delhi, Mumbai, Kolkata, Gujarat, A.P, Bihar, W.B. & A & N, Assam, N.E.)

மற்ற நாடுகளில் இந்த வசதியை மொபைல் நிறுவனங்களின் பட்டியல்:

Country
Mobile Operators
Afghanistan
Afghan Wireless Communication Company
Etisalat
Roshan
Algeria
Movicel telecomunicações, SA.
Unitel
Bahrain
Viva
Zain
Bangladesh
banglalink
Citycell
Benin
ETISALAT Bénin
Botswana
Orange
Cambodia
Cell Card
Smart
Cameroon
MTN
Orange
Congo, Democratic Republic
Airtel
Vodacom
Côte d'Ivoire
MTN
Moov Cote d’Ivoire
Orange
Egypt
Mobinil
Ghana
Airtel
MTN
Tigo
Vodafone
Guam
iConnect Buddy
Guinea
Cellcom Guinea
Orange
Indonesia
AHA
Axis
Esia
Indosat
Telkomsel
Tri
XL
Iraq
Omnea
Zain
Israel
orange
Pelephone
Jordan
Orange
Umniah
Zain
Kazakhstan
Beeline
Kcell
Kenya
Airtel
orange
Safaricom
Yu
Kuwait
Viva
Wataniya
Zain
Kyrgystan
Megacom
Lao
ETL PUBLIC COMPANY
Liberia
Cellcom
Lonestar Cell MTN
Madagascar
Airtel
Telma
Malawi
Airtel
TNM
Malaysia
Celcom
DiGi
Maxis
Maldives
Dhiraagu
Wataniya
Morocco
Inwi
Mozambique
mcel
Vodacom
Niger
Airtel
Moov
Orange
Nigeria
Airtel
Glo
Etisalat
MTN
Starcomms
Visafone
Pakistan
Mobilink
Ufone

Palestinian Territories
Jawwal
Wataniya Mobile
Philippines
Globe
SMART
Sun Cellular
Saudi Arabia
Mobily
STC
Zain
Senegal
orange
Tigo
Seychelles
Airtel
Sierra Leone
Airtel
Comium
Somalia 
Somtel
Telesom
South Africa
8ta
MTN
Sri Lanka
Dialog
Etisalat
Mobitel
Tanzania
Vodacom
Tigo
Thailand
dtac
True Move

Togo
Moov Togo
Tunisia
Orange
Tunisiana
Uganda
Orange
MTN
Uganda Telecom
Ukraine
Intertelecom
United States
All operators
Uzbekistan
Beeline
MTS Uzbekistan
Ucell
Vietnam
VinaPhone
Zambia
Airtel
MTN
Zamtel