Friday, 9 August 2013

எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் குறிப்பிட்ட இணையத்தளங்களை தடை (Block) செய்வது எப்படி?


இணையத்தில் எந்த அளவிற்கு நன்மைகள் உள்ளதோ அதற்க்கு இரு மடங்கு தீமைகளும் உள்ளன. சில இணையத்தளங்கள் தகுதியற்றவையாக இருக்கலாம். பாடசாலை,அலுவலகம் மற்றும் உங்கள் வீடுகளிலும் கூட சிறுவர்களின் பாதுகாப்பிற்காக சில தேவையில்லாத இணையத்தளங்களை தடை செய்யவேண்டி வரலாம் அவ்வாறு குறிப்பிட்ட இணையத்தளங்களை தடை செய்வதற்கு பல மென்பொருட்கள் உள்ளன.ஆனால் Windows கணினிகளில் எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் தேவையில்லாத சில குறிப்பிட்ட  இணையத்தளங்களை இலகுவான முறையில் தடை செய்யலாம்.

சரி Windows கணினிகளில் எப்படி குறிப்பிட்ட இணையத்தளங்களை தடை செய்வது என்று பார்ப்போம்.

1.முதலில் My Computer ஐ  Open செய்து  Hard Disk-(C:) யில்  பின்வரும் Folder-களில் கிளிக் செய்யவும் 
>>Windows 
>>System32
>>Drivers
>>Etc
அல்லது C:\Windows\System32\drivers\etc இதனை Copy  செய்து Windows Explorer Address Bar-இல்  Paste செய்து Enter கொடுக்கவும். பின்பு கீழே படத்தில் உள்ளவாறு ஒரு Window வரும் 

 2.அதில்  மேலே படத்தில் உள்ளவாறு முதலாவது  உள்ள hosts File-இல் கிளிக் செய்து Notepad மூலம் Open செய்துகொள்ளவும். பின்பு கீழே படத்தில் உள்ளவாறு Notepad-இல் வரும்

3.அதில் 127.0.0.1      localhost  எனபதற்கு கீழே நீங்கள் தடை செய்ய வேன்டிய இணையத்தளங்களின் முகவரியை  இவ்வாறு கொடுக்கவும் 
127.0.0.2 www.youtube.com 
127.0.0.3 www.facebook.com
127.0.0.4 www.twetter.com  
உதரணத்திற்க்கு கீழே படத்தை பார்க்கவும் இதே போல் எத்தனை தளங்கள் வேண்டுமானாலும் கொடுத்து Notepad File-இல் கிளிக் செய்து Save கொடுக்கவும் 
























4.இனி உங்கள் கணினியில் இந்த இணையத்தளங்களை ஓபன் செய்தால் கீழே படத்தில் உள்ளது போல் வரும்


5.இந்த இனையத்தளங்களின் தடையை அகற்ற திரும்ப host file ஐ Notepad இல் Open செய்து நீங்கள் கொடுத்த இணையத்தள முகவரிகளை அகற்றி விட்டு Notepad File-இல் கிளிக் செய்து Save கொடுக்கவும் அவ்வளவுதான். :)

இதனை பயன்படுத்துவதில்  ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.


 
thanks - Webblanka

Tuesday, 6 August 2013

இமெயில் வழியே இணைய பக்கத்தை அனுப்பும் வசதி

இமெயில் வழியே முழு இணையதளத்தையும் அனுப்பி வைக்கும் தேவையை எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம் என்றால்,இமெயில் த வெப் (http://www.emailtheweb.com/ ) தளம் இதை சாத்தியமாக்குகிறது.இந்த தளத்தின் மூலம் எந்த ஒரு இணையதளத்தையும் இமெயிலாகவே அனுப்பி விடலாம்.
இதற்காக முதலில் நீங்கள் அனுப்ப விரும்பும் இணையதள முகவரியை டைப் செய்து விட்டு தொடர்ந்து இமெயில் முகவரியை டைப் செய்தால் போதும்,அந்த தளம் உரிய நபருக்கு அப்படியே போய் சேர்ந்து விடும்.
இந்த சேவையை பயன்படுத்த ஜிமெயில் முகவ‌ரி தேவை.இலவச சேவை மற்றும் கட்டண சேவை இரண்டும் உள்ளது.ஆனால் இலவ்ச சேவையில் வரம்புகள் உண்டு.
எல்லாம் சரி, இணையதளத்தை இமெயிலில் ஏன் அனுப்ப வேண்டும்? இணையதள முகவரியை மட்டும் இணைப்பாக அனுப்பலாமே என்று நீங்கள் கேட்கலாம்.
ஆனால் இமெயிலில் வரும் இணைப்புளை எல்லாம் கிளிக் செய்து பார்க்க எத்தனை பேருக்கு நேரம் இருக்கிறது என்று கேட்கிறது இந்த தளம்.நேரமின்மை,வைரஸ் தாக்குதல்,வீணான விளம்பர மெயில் தாக்குதல் என பலவேறு காரணங்களால் பலரும் மெயிலில் வரும் இணைய இணைப்புகளை கிளிக் செய்யாமலே இருந்து விடலாம்.அதனால் இணைப்புக்கு பதிலாக மொத்த இணையதளத்தையும் அனுப்பி விடுவது சிறந்தது தானே.
மெயிலில் இணைய உலா.

இதே போலவே இமெயில் மூலமே நீங்கள் இணையத்திலும் உலாவரலாம்.அதாவது நீங்கள் பார்க்க விரும்பும் இணையதளத்தை இமெயிலிலேயே வர வைத்துக்கொள்ளலாம்.
வெப்டுபிடிஎப் ( http://www.web2pdfconvert.com/) இந்த சேவையை வ‌ழங்குகிறது.அடிப்பையில் இந்த தளம் இணைய பக்கங்களை பிடிஎப் கோப்பாக மாற்றிக்கொள்ள வழி செய்கிறது. அபிமான இணையதளங்களை அல்லது முக்கிய இணைய பக்கங்களை இப்படி பிடிஎப் வடிவில் மாற்றி சேமித்து கொள்ளலாம் அல்லது அச்சிட்டு கொள்ளலாம்.
இதே பாணியில் இந்த தளத்திற்கு நீங்கள் பார்க்க விரும்பும் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து அனுப்பினால்,அந்த தளத்தில் பிடிஎப் வடிவை அனுப்பி வைக்கிறது.ஆக இணையத்திற்கு போகமாலே இணையதளத்தை பார்க்கலாம்.இணையதளத்தை பார்வையிடுவது மட்டும் அல்ல கூகுலில் தேடவும் இதை பயன்ப‌டுத்தலாம்.கூகுல் இணைய முகவரியை குறிப்பிட்டு தேட வேண்டிய பதத்தையும் குறிப்பிட்டால் பிடிஎப் வடிவில் தேடல் பக்கத்தி அனுப்புகிறது.
சில அலுவகங்களில் இணைய கட்டுப்பாடு இருக்கும்.இமெயிலை மட்டும் பயன்ப‌டுத்த அனுமதிக்கலாம்.இது போன்ற இடங்களில் இணையதளங்களை பார்வையிட விரும்பினால் இந்த சேவை கைகொடுக்கும்.அது மட்டும் அல்ல செல்போனில் இணையத்தை அணுகும் போது இணைய பக்கங்கள் மிகவும் மெதுவாக டவுண்லோடு ஆகும் நேரங்களிலும் இதை பயன்படுத்தலாம்.

Facebook இலிருந்து வீடியோ,ஒடியோக்களை டவுன்லோட் செய்ய

சமூக வலைத்தளங்களில் ராஜாவாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் facebook ல் இருந்து நாளுக்கு நாள் புதுப் புது வீடியோக்கள் , ஆடியோக்கள் பகிரப்படுகின்றன. அவற்றை நாம் தரவிறக்க விரும்புவோம் அனால் அது முடியாமல் போய்விடும் ஏனெனில் அதில் டவுன்லோட் செய்வதற்கான வழிகள் இல்லை. எனவே எப்படி டவுன்லோட் செய்வது?


அதற்காக ஒரு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது அதன் பெயர் Bigasoft Facebook Downloader இது facebook ட் காகவே வடிவமைக்கப்பட்டது. இந்த மென்பொருளைப் பயன்படுத்தி நமக்குத் தேவையான வீடியோ ஒடியோக்களை எமக்கு விரும்பிய format ல் டவுன்லோட் செய்ய முடியும்.

தரவிறக்கம் செய்யப்பட வேண்டிய பேஸ்புக் வீடியோக்களின் யூ.ஆர்.எல்..(URL) மென்பொருளில் உள்ளிட்டு, கீழ்நோக்கிய அம்புக்குறியுடன் கூடிய வட்டமான பட்டனை சொடுக்குவதன் மூலம் நீங்கள் விரும்பும் வீடியோ அல்லது ஆடியோ தரவிறக்கம் செய்யப்பட்டு, 


உங்களுடைய கணினியில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில் கோப்புகள் சேமிக்கப்படும். பிறகு தேவையான நேரங்களில் அந்த வீடியோ அல்லது ஆடியோ கோப்புகளை இணைய இணைப்பு இல்லாமலேயே பார்த்து, கேட்டு மகிழலாம்.



இந்த facebook video, audio downloading software ஐ டவுன்லோட் செய்ய:


இது பணம் கட்டி பெறக் கூடிய மென்பொருளாகவும் இருக்கிறது free மென்பொருளாகவும் இருக்கிறது. நீங்க free யாவே டவுன்லோட் பண்ணுங்களேன்... அதுலயும் நல்லாத்தான் வேலைசெய்யும்.. 

உங்கள் கலர் போட்டோவை பென்சில் வரைவாக மாற்ற எழிய மென்பொருள்

ஓவியம் வரையத் தெரிந்தவர்கள் தாமாக தம்மை வரைந்து போட்டோ வாக மாற்றி upload பண்ணுவாங்க என்ன மாதிரி ஓவியம்னாலே என்னன்னு தெரியாத பக்கிக்கு எல்லாம் எப்படி pencil sketch போடலாம்னு ஜோசிச்சிருக்கும் போது ஒருத்தர் photo to sketch 3.2 என்ற மென்பொருள் பற்றி சொன்னாரு.. அத என் கணனில நிறுவினேன் ... ஹா அவளவு தான் நானும் ஓவியன் ஆகிட்டேன்..

இந்த மென்பொருளில் pen sketch, pencil sketch மற்றும் brush sketch ஆகிய பார்மட்களில் உங்களுடைய போட்டோக்களை convert செய்துகொள்ளலாம்.

எளிமையான படிமுறைகளில் எந்த ஒரு மென்பொருள் அனுபவமும் இன்றி நீங்களாகவே இதைச் செய்து முடிக்கலாம்.

Photo to Sketch மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய :http://www.thinkersoftware.com/photo-to-sketch/index2.htm

முகவரிக்குச் செல்லவும்.

Sunday, 4 August 2013

கணணி பற்றிய அடிப்படை அறிவை பெற்றோருக்கு வழங்க : இதை கொஞ்சம் படிங்க

இன்றைய உலகில் கணணி மிக முக்கியமான சாதனமாக மாறிவிட்டது. இதனை பல்லாயிரக் கணக்கான மக்கள் உலகம் முழுவதுமாக உபயோகப்படுத்துகிறார்கள். 
எனவே இப்படிப் பட்ட பயன் தரும் கருவியைப் பயன்படுத்துவதற்கு உங்கள் பெற்றோர்களுக்கும் சொல்லிக் கொடுத்தால் எவளவு நன்றாக இருக்கும். இதற்காகவே Google ஓர் புதிய தளத்தை நிறுவியுள்ளது அதன் பெயர் "Teach Parents Teach" என்பதாகும்.

இதன் மூலம் கணணி பற்றிய அடிப்படை அறிவுகளை உங்கள் பெற்றோருக்கு புகட்டலாம். இதில்  "Video Tutorials" ம் உண்டு. இதனை பார்வையிட்டு உங்கள் பெற்றோர்கள் பயன் பெறலாம். இதோ இது தான் அந்த இணையதள முகவரி 


ஆபாச தளங்களை கணனியிலிருந்து நீக்க.( அனைவரும் வாசிக்க வேண்டியது)


இன்றைய வளர்ந்து வரும் உலகில் நாளுக்கு நாள் இணைய பாவனை அதிகரிக்க அதற்க்கு ஏற்றாற்போல் ஆபாச இணையத்தளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இப்படிப்பட்ட இணையத்தளங்களிலிருந்து உங்கள் இளைய சமுதாயத்தை பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமையாகும்.



இதற்காகவே ஒரு மென்பொருள் உள்ளது. இதை உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள். பின்னர் அந்த மென்பொருள் தன் வேலையைப் பார்க்கும். இதோ அந்த மென்பொருளின் முகவரி தரவிறக்க 

http://www1.k9webprotection.com/ -