Wednesday, 30 July 2014

திருடப்பட்ட அல்லது காணமல் போன உங்கள் android கைபேசியை கண்டுபிடிக்கும் முறை !!

இன்றைய  பதிவு Android கைபேசி சாதனங்களை பயன்படுத்துவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Mobile, Tab பயன்படுத்துவோர் இதன்வழி உங்கள் சாதனங்களின் பாதுகாப்பின் பயன்பாட்டை மேஇன்றைய லும் ஒருபடி மேலே உறுதி செய்துகொள்ளலாம். இங்கு குறிப்பிடும் முறையை கொண்டு நேரே Google Playstore சென்று உங்கள் Android Device, tap, mobile எங்கே இருக்கிறது, கடைசியாய் எங்கே இருந்தது என்று Google Play store மூலம் கண்டறியலாம். வேறு எந்த ஒரு APPLICATION-களும் தேவை இல்லை.
முதலில் உங்கள் Android சாதனத்தின் SECURITY – Device Administrators சென்று பார்த்தால் (Allow Android Device Manager to lock or erase a lost device) இப்படி எழுதபட்டிருக்கும், வேருமுறையில் இருந்தாலும் அர்த்தங்கள் ஒன்றுதான். குறிப்பிடப்பட்டவை என்னவென்றால் உங்கள் device காணமல் அல்லது திருட பட்டிருந்தாலோ உங்கள் data-க்களை அழிக்கவோ, அல்லது lock செய்யகூடிய அனுமதி கொடுப்பதே ஆகும்.
செய்முறை வழிமுறை
  • Google Play Store செல்லவும்
  • எந்த E-mail கணக்கு மூலமாக உங்கள் android சாதனத்தில் Google play தொடங்கி பட்டதோ அதே ஈமெயில் குறிப்பிடவும்.
  • ஆகா வலதுபுறம் மேலே கிளிக் செய்யவும்.
  • Setting கிளிக் செய்து அதன் மூலமாக மேலும் முன்னேறவும்
  • இப்போது உங்களின் Android Device எங்கே இருக்கிறது, எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை கணக்கிடும்.
  • கீழே உள்ள என்னுடைய கைபேசி எங்கே உள்ளது எவ்வளவு தூரத்தில் மற்றும் இறுதியாய் எங்கே பயன்படுத்தினேன் என்பதினை துல்லியமாக தெரிவிக்கின்றது.
  • இதில் மேலும் இருக்கும் இன்னொரு தேர்வு (RING)
  • இப்போது அந்த RING சற்று கிளிக் செய்தால், உங்கள் கையி பேசி 5நிமிடங்களுக்கு தானே ஒலிக்கும்.
ஆரம்பத்திலே Lock/Erase-களை தெரிவித்துள்ளேன். உங்கள் Android Device-களில் உள்ள தேர்வை  நீங்கள் கிளிக் செய்திருந்தால் இப்போது Setup Lock&Erase பயன்படுத்தி இங்கிருந்து காணமல் போன உங்கள் Device data க்களை Lock&Erase செய்யலாம்.
முயற்சிக்கலாம், ஆனால் தேவையான நேரத்தில் பயன்படுத்துவதே சிறந்தது. ஆனால் RING செய்து எப்போது வேண்டுமானாலும் முயற்சிக்கலாம்.

பேஸ்புக்கில் இருந்து நிரந்திரமாக அக்கவுன்டை அழிக்க இதோ வழி…!


இன்றைக்கு பலரும் சமூகவலைத்தளங்களை மிகவும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர் எனலாம்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதை போல ஆக்கப்பூர்வமாக அதை நாம் பயன்படுத்துவதைவிட இன்று அதற்கு அடிமையாகத்தான் இருந்து கொண்டு இங்கு இருக்கிறோம்.
இதோ பேஸ்புக் மற்றும் ட்விட்டர் அக்கவுன்டை நிரந்திரமாக மூட ஒரு வழி இருக்கின்றது இதோ.
பேஸ்புக்கில் அக்கவுன்டை தற்காலிமாக Deactivate செய்வதற்கும் நிரந்திரமாக அழிப்பதற்கும் இரண்டுஆப்ஷன்ஸ் உள்ளது இதோ அந்த ஆப்ஷன்கள்.
பேஸ்புக் Logout பட்டன் இருக்கும் இடத்தில் உள்ள Settings ஓப்பன் செய்து கொள்ளுங்கள் முதலில்
இது Settings பக்கத்தினைத் திறக்கும். இங்கு “Deactivate Account” என்ற பிரிவில் கிடைக்கும் deactivate என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். அல்லது நேரடியாக http://www.facebook.com/deactivate.php என்ற லிங்க்கில் கிளிக் செய்து, அக்கவுண்ட்டினை நீக்கலாம்.
“Why are you deactivating:” என்ற பிரிவில், உங்க ளுக்கு விருப்பமான தேர்வினை ஏற்படுத்தி, அதில் பதில் அளிக்கலாம். இறுதியாக, Deactivate My Account” என்ற பட்டனை அழுத்தி, அக்கவுண்ட்டினை நீக்கலாம்.
அடுத்து உங்கள் அக்கவுன்டை நிரந்திரமாக நீக்கிட இதோ இந்த வழியை பின்பற்றுங்கள் இதன் மூலம் அக்கவுன்டை அழித்த பிறகு மீண்டும் பேஸ்புக்கில் லான் இன்(Login) செய்தாலும் உங்களது அக்கவுன்ட் ஓப்பன் ஆகாது.
http://www.facebook.com/help/contact.php? show_form=delete_account என்ற இந்த லிங்கை காப்பி செய்து மேலே அட்ரஸ் பாரில் காப்பி செய்யுங்கள், பின்பு எளிதாக உங்கள் அக்கவுன்டை நிரந்திரமாக அழியுங்கள் அவ்வளவுதான்.
அடுத்து ட்விட்டர் பற்றி பார்ப்போம்
ட்விட்டர் இணைய தளம் சென்று, அங்கு உங்கள் அக்கவுண்ட்டில் நுழையவும். தொடர்ந்து வலது மூலையில் உள்ள Settings என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
இது Account Settings என்ற பக்கத்தினைத் திறக்கும். இந்தப் பக்கத்தின் இறுதியில் உள்ள “Deactivate my account” என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
அல்லது நேரடியாக http://twitter.com/settings/accounts/confirm_delete என்ற முகவரியில் உள்ள தளம் சென்று, அங்கு உங்கள் அக்கவுண்ட்டினை நீக்கலாம். இங்கு உறுதிப்படுத்துவதற்காக உங்கள் முடிவினைக் கேட்கையில் “Okay, fine, deactivate my account” என்பதில் கிளிக் செய்து கணக்கினை நாம் முடிக்கலாம்.

இலவசமாக பில் போட ஒரு சாப்ட்வேர்….!

நம்மில்  தொழில் செய்துவரும் அனைவருக்கும் பில் என்பது எவ்வளவு முக்கியமானது என்பது தெரியும். பெரிய அளவில் மற்றும் நடுத்தர அளவில் தொழில் செய்பவர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பில் போட்டு தருவதற்காக பில் புக்குகளை அச்சடித்து வைத்திருப்பார்.
ஆனால் அனேகம் தொழில்களுக்கு பில் புக் என்பது பயன்படாது. ஏனென்றால் நீங்கள் ஆன்லைனில் ஒருவருக்கு டேட்டா என்ட்ரி அல்லது வெப் டிசைனிங் போன்ற வேலைகளை முடித்து தருகிறீர்கள் அல்லது எதோ ஒன்றிற்கு ட்ரையினிங் தருகிறீர்கள் என்றால் அவர்கள் கட்டிய பணத்துக்கு அத்தாட்சியாக பில் போன்று ஏதாவது கேட்பார்கள் அல்லவா?
அதற்கென்று நம்மால் தனியாக பில் புக் அடிப்பது என்பது இயலாத காரியம். நமக்கு தற்போது ஆன்லைனிலேயே பில் போட்டு பிரின்ட் எடுத்துக்கொள்ளும் சேவை இலவசமாகவே கிடைக்கின்றது. இந்த சேவையை பயன்படுத்தி நாமே பில் போட்டுக்கொள்ளளலாம் அல்லது PDF ஆக டவுன்லோட் செய்துகூட வாடிக்கையாளருக்கு மெயில் மூலமாக அனுப்பிவிடலாம்.

சிறப்பம்சங்கள்

  • எவ்வளவு பொருட்களை வேண்டுமென்றாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
  • எவ்வளவு பில் வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளலாம்
  • பிரின்ட் எடுத்துக்கொள்ளலாம் மற்றும் PDF ஆக டவுன்லோட் செய்தும் கொள்ளலாம்
  • இன்டர்நெட் கனெக்சன் மட்டும் இருந்தால் போதும், எங்கிருந்து வேண்டுமென்றாலும் இந்த சேவையை உபயோகிக்க முடியும்.
இந்த சேவையினை உபயோகிக்க இங்கே கிளிக் பண்ணவும்