Youtube வீடியோவினை விரும்பிய பார்மெட்டில் பதிவிறக்கம் செய்ய - நெருப்புநரி நீட்சி
Youtube வீடியோவினை பதிவிறக்கம் செய்ய மென்பொருள்கள் பல இருக்கிறன அவைகளை கொண்டு Youtube வீடியோவினை பதிவிறக்கம் செய்யும் போது நாம் அந்த குறிப்பிட்ட வீடியோவின் முகவரியை (URL) காப்பி செய்து அந்த Youtube டவுண்லோடர் மென்பொருளில் ஒட்ட வேண்டும். அப்போது மட்டுமே அந்த குறிப்பிட்ட வீடியோவினை பதிவிறக்கம் செய்ய முடியும். அதிலும் ஒரு சில வீடியோக்கள் பதிவிறக்கம் ஆகாமல் அடம் பிடிக்கும்.
இதற்கு பதிலாக Youtube வீடியோவினை காணும் போதே அதனை பதிவிறக்கம் செய்தால் எப்படி இருக்கும். அதற்கு நாம் அந்த குறிப்பிட்ட உலாவியில் சில மாற்றங்கள் செய்தால் மட்டுமே முடியும். நெருப்புநரி உலாவியில் Youtube வீடியோவினை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்று பார்ப்போம்.
இதற்கு முதலில் உலாவியில் நீட்சியை இணைத்துக்கொள்ளவும். நீட்சியை தரவிறக்க சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று Add to Firefox எனும் பொத்தானை அழுத்தவும். அழுத்தியவுடன் மேலே நீட்சியை பதிவிறக்க அனுமதி கேட்கும். Allow எனும் தேர்வினை கிளிக் செய்யவும்.
கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Install Now என்னும் பொத்தானை அழுத்தவும்.
உங்களுடைய நெருப்புநரி உலாவியில் நீட்சி நிறுவப்பட்டு பின் நெருப்புநரி உலாவியை மறுதொடக்கம் செய்ய அனுமதி கேட்கும்.
அனுமதித்தவுடன் நெருப்புநரி உலாவி மறுதொடக்கம் ஆகும். பின் நெருப்புநரி உலாவியில் Youtube தளம் சென்று வீடியோவினை காணுங்கள் அப்போது அந்த குறிப்பிட்ட வீடியோவின் கீழ் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு இருக்கும். அதை பயன்படுத்தி வீடியோவினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
நீங்கள் விரும்பும் பார்மெட்களில் வீடியோவை எளிதாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த நீட்சி மிகவும் பயனுள்ள நீட்சியாகும்.