Thursday, 26 December 2013

இந்த பிடிஎப் புத்தகத்தில் ஒரு மில்லியன் தகவல்களும் அதற்கான புகைப்படங்களையும் கொடுத்துள்ளார்கள்.

சமச்சீர் கல்வி வந்ததிலிருந்து மாணவர்களுக்கு ப்ராஜெக்ட்டுக்கு அதிகம் தகவல்களும் அதற்கான புகைப்படங்களும் தேவைப்படுகின்றது. இந்த பிடிஎப் புத்தகத்தில் ஒரு மில்லியன் தகவல்களும் அதற்கான புகைப்படங்களையும்  கொடுத்துள்ளார்கள். புகைப்படங்களுடன் அதற்கான விளக்கங்களும் கொடுத்துள்ளதால் குழந்தைகளின் ப்ராஜெக்ட்டுக்கு பிரிண்ட் எடுத்து கொடுக்கலாம்.. 125 எம்.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய  இங்கு கிளிக்செய்யவும். இதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட பக்கம் ஓப்பன்ஆகும்.

டைனசர் பற்றி விளக்கங்கள்கொடுத்துள்ளார்கள்.
விதவிதமான பறவைகளின் முட்டைகளும் அதற்கான பெயர் மற்றும் புகைப்படங்களை கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள புகைப்படத்தினை பாருங்கள். 
குழந்தைகளின் கரு வளர்ச்சிபற்றி விளக்கம் கொடுத்துள்ளார்கள்.
 கணிணி சார்ந்த பொருட்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்கள்.
 மின்சாரம் பற்றி விளக்கம் கொடுத்துள்ளார்கள்.
இதில் Nature.Human Body.Science and Technology.Space.Earth.People and Places.History.Art and Culture.என எட்டுவிதமான தலைப்புகளில் 300 பக்கங்களுக்கு படங்களுடன் விளக்கங்கள் கொடுத்துள்ளார்கள். பதிவின் நீளம் கருதி சிறிதளவே விளக்கம் கொடுத்துள்ளேன்.முழுவதும் அறிந்துகொள்ள இதனை பதிவிறக்கி அறிந்துகொள்ளுங்கள். உங்கள் குழந்தைகள் மற்றும் நண்பர்களுக்கு கொடுங்கள். 

Tuesday, 24 December 2013

Google Doodle (Interactive) சிறப்பித்த Crossword Puzzle இன் நூற்றாண்டு விழா



இதை உருவாக்கியவர்  Merl Reagle. இவர் உலகின் சிறந்த Puzzle வடிவமைப்பாளர்களின் ஒருவர். ஆனால் இந்த Puzzle மிகவும் இலகுவானது. HTML5 இல் அட்டகாசமாக Google Engineer Tom Tabanao வடிவமைத்துள்ளார்.


இதை கீழே அல்லது இங்கே சென்று நிரப்பி விளையாடுங்கள். விளையாடி முடிந்ததும் உங்கள் புள்ளிகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


சொந்தமான வலைப்பூ வாங்கப்போகிறீர்களா?

பலர் புதிய Domain வாங்குவது காண கூடியதாக உள்ளது. உலகில் பல மில்லியன் Domains உள்ளது. நீங்கள் Google இல் தேடினால் வரும் 10 க்குள் ஒன்றாக உங்கள் Domain அமைவது சாத்தியமே இல்லை.

இப்போது பிரபல தளங்களை example.blogspot.com இல் நடத்திகொண்டு புதிதாக  Domain வாங்க இருப்பவர்களுக்கே இப்பதிவு.

Domain வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

  • .com இல் வாங்குவதே சிறப்பானது. தேவை என்றால் அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளால்  .org , .net இல் வாங்கலாம்
  • .in .lk என வாங்குவது சட்ட ரீதியிலும் SEO விலும் ஆபத்தானது.
  • பொதுவா Private Registration தேவை இல்லை
  • பொதுவாக அனுபவம் உள்ள ஒருவரால் ஒரு Domain 1$ - 3$ க்குள் வாங்க முடியும். (ஆச்சரியம், ஆனால் உண்மை)
  • வருடாந்தம் Renew செய்வது பொதுவாக 10$ - 15 $  வரை தான் செலவாகும்.
  • USA இல் உள்ள DNS கொண்டவர்களிடையே வாங்குவது தான் சிறப்பானது, பாதுகாப்பானது.
  • Domain Name வாங்க Godaddy தான் சிறந்தது. (அனுபவம்)
  • பல வலைப்பூக்கள் என்றால் Sub Domain பயன்படுத்துவது பல வகையில் நன்மை தரும்.
  • Sub Domain எப்போதும் இலவசமாக பெற கூடியது.
  • எப்போதும் 1 வருடத்துக்கே முதலில் Domain வாங்குங்கள்.
  • Paypal மூலம் வாங்குவதே சிறந்தது. Credit card மூலம் வாங்குவது சில சிக்கல்களை கொண்டது.

சொந்தமாக Domain இருப்பதால் நன்மைகள்:

மற்றவர்களுக்கு பந்தா காட்ட தான் பலர் வாங்கி இருக்கிறார்கள். 
  1. Adsense பெறுவதில் கூடுதல் முன்னுரிமை.
  2. உங்களுக்கென்று தனித்துவமான அடையாளம்
  3. Search Engines இல் ஓரளவு முன்னுரிமை

சொந்தமாக Domain இருப்பதால் தீமைகள்:

  • வருடாந்த / குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தடவை பண செலவு.
  • Domain வாங்கிய பிறகு அதை பராமரிக்க தேவை இல்லை. என்றாலும் பாதுகாக்க வேண்டும்

உங்களுக்கு Domain Name தேவை தானா?

இதை வைத்து முடிவெடுங்கள்.

நீங்கள் வலைப்பூ 'தமிழில்'  சொந்தமாக எழுதுகிறீரா? ஒரு வாரத்தில் குறைந்தது 2 பதிவு இட்டு வலைப்பூ  தினமும் 1000 க்கும் அதிகமான பக்க பார்வைகளை கொடுக்கிறதா? உங்களுக்கு என ஒரு வாசகர் கூட்டம் இருக்கிறதா? Google Search மூலம் தினமும் குறைந்தது 20 பேராவது வருகிறார்களா? முதற்கட்டமாக 5$ ஒதுக்க முடியுமா? அடிப்படை தொழில்நுட்ப அறிவு உள்ளதா? இல்லாவிட்டால் நம்பிக்கையான தொழிநுட்பம் தெரிந்த நண்பர்கள் இருக்கின்றனரா?

மேலே உள்ள ஏதாவது ஒன்றுக்கு இல்லை என்றாலும் உங்களுக்கு ஒரு Domain தேவை இல்லை. (தொழிநுட்ப அறிவு தவிர்ந்த)

நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுகிறீரா? உண்மையிலே பயனுள்ளதை எழுதி அதை ஆக குறைந்தது 200 பேராவது வாசிக்க உங்கள் வலைப்பூவுக்கு வருகிறார்களா? Google Search மூலம் தினமும் குறைந்தது ஒருவராவது வருகிறார்களா? முதற்கட்டமாக 5$ ஒதுக்க முடியுமா? அடிப்படை தொழில்நுட்ப அறிவு உள்ளதா? 

இதில் ஒன்று இல்லாவிட்டலும் உங்களுக்கு Domain தேவை இல்லை.

ஆங்கிலத்தில் சும்மா எழுதி Adsense வாங்கலாம் என்பதெல்லாம் போலியான கதைகள். இப்போது Adsense க்கு என பல அளவு கோல்கள் உண்டு. 

Domain  பெயர் தெரிவு செய்யும் போது கவனிக்க வேண்டியவை

  • எப்போதும் 5 எழுத்துக்குள் தெரிவு செய்யுங்கள். அப்பொழுது தான் இலகுவாக ஞாபகப்படுத்த முடியும் மற்றவர்களால். (neshamaniponnaiyaa.com)
  • Domain Name க்கும் SEO க்கும் பெரிதாக இப்போது சம்பந்தம் இல்லை. குறிப்பாக Adsense இல்.
  • எளிமையான உச்சரிப்பை பயன்படுத்துங்கள். Sha sa, Ya, Ja என தமிழை கொல்வது மற்றொருவர் உச்சரிக்கும் போது தவறாகி விடும். (uyiroovijham.com > uyiroviyam.com)
  • உங்கள் பெயரில் வாங்குவது பொருத்தமில்லை. (soorya.com)

Domain வாங்கிய பிறகு:

சொந்த Domain க்கு மாறுவதால்  உங்களுக்கு வரும் வாசகர்களோ, பார்வைகளோ பாதிக்கப்பட போவதில்லை.

Google தரும் புதிய முறையில் DNS setting செய்து கொள்ளுங்கள். (4 A Records, 1 CNAME record). முன்பு வழங்கிய CNAME மூலம் இயங்கும் தளங்கள் அடிக்கடி காணாமல் போவது இப்போது அடிக்கடி நிகழ்கிறது.

Thursday, 12 December 2013

தற்காலிகமாக Processor ன் பெயரை மாற்றுவதற்கான முறையைப் பார்க்கலாம் வாருங்கள்...

Processor கணணி வேலை செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. Processor ஐ பல நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. உதாரணமாக இன்டெல் , மோட்டோரோலா போன்றவற்றை குறிப்பிடலாம்.

உங்கள் Processor எந்த நிறுவனத்தினது என அறிய My Computer icon ல் Right Click செய்து Properties ல் click செய்தால் உங்கள் RAM , Processor போன்றவற்றைப் பற்றிய செய்திகளைக் காணலாம்.



சரி தற்காலிகமாக Processor ன் பெயரை மாற்றுவதற்கான முறையைப் பார்க்கலாம் வாருங்கள்...

எனது Processor பெயர் "Pentium(R) Dual-Core  CPU      E5700  @ 3.00GHz" இதனை நான் "Parathan Processor" என மாற்றப்போகிறேன்... பாருங்கள்..

Run >  Type   regedit  

அப்படி type செய்த பின்.. கீழுள்ள வாறு windows தோன்றும்..


அதில் 

HKEY_LOCAL_MACHINE > Hardware > Description > System > Central Processor  > Processor Name String ல் Click செய்ய வேண்டும்...

அவ்வாறு click செய்தால்... கீழுள்ள படம் போன்று தோன்றும்..


இனி அதில் வரும் எழுத்தை நான் முன்னர் கூறியவாறு "Parathan Processor
என மாத்திவிடுங்கள்...

இனி  My Computer icon ல் Right Click செய்து Properties ல் click செய்யுங்கள்...