Saturday, 24 December 2011

கடவுள் தூதர் கிறிஸ்மஸ் தாத்தா

காண நீரும் வாருங்கள்
கிறிஸ்மஸ் வந்தால் பாடுங்கள்
கீதம் பாடி ஆடுங்கள்

குழந்தையாய் துள்ளி விளையாடுங்கள்
கூடி மகிழ்ந்து நேசியுங்கள்
கெட்டவைகளை மறந்திடுங்கள்
கேட்டால் கொடுப்பார் தேறிடுங்கள்

கைப்பை நிறைய பரிசு பெற்றிடுங்கள்
கொடுக்கும் இறைவனை வணங்கிடுங்கள்
கோடி நன்மைகள் அடைந்திடுங்கள்
கௌரவித்து யேசு கிறிஸ்துவை நேசியுங்கள்!

வணக்கம் சுட்டிகள், இன்னும் ஓரிரு தினங்களில் கிறிஸ்மஸ் வரப்போகிறது. இனி வீட்டில் உற்சாகம், குதூகலம்தான். சுட்டிகளுக்கு மிகவும் பிடித்தமானவர் நத்தார் தாத்தா. அவர் நமக்கேல்லாம் விருப்பமான பரிசுகளை அள்ளித் தருபவர். இந்நாட்களில் கிறிஸ்மஸ் தாத்தாவை போல் வேடமிட்டு பலர் சுட்டிகளை மகிழ்விப்பது வழக்கமானதொன்று.

அவர் எப்படிபட்டவர் எப்படி வந்தார் என்று உங்களுக்கு தெரியுமா? எனக்கும் அவ்வளவாக தெரியாது ஆனால் நான் தேடி அறிந்ததை உங்களுக்கும் சொல்கிறேன். நத்தார் தாத்தாவை கிறிஸ்தவ தந்தை என்றும் சண்டா குலோஸ் என்றும் பலவாறு கூறுவார்கள்.

கிட்டத்தட்ட 4வது நூற்றாண்டில் துருக்கியில் மிரா நகரில் வசித்தவர் புனித நிக்கலஸ் என்பவர். இவர் தனது வாழ்நாளில் பரிசுகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கும் பழக்கத்தை வைத்திருந்தாராம். இவர் பல பெயர்களால் அழைக்கப்பட்டு போற்றப்பட்டவராம்.

இச் சரித்திரத்தின் வழி யேர்மனி,நெதர்லாந்து மற்றும் மேற்கத்திய நாடுகளில் கற்பனை பாத்திரமாக சண்க்ட் நிகொலவுஸ், சிண்ட்ரெர்கிலாஸ் என உருவானதாம். இப்படிதான் சண்டா குலோஸ் பாத்திரம் மருவி வந்ததாம். பல முக்கிய நாடுகளில் புனித நிக்கலஸ் சரித்திர மனிதராக நினைவுகூர்ந்து வழிபடுகிறார்களாம்
கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல்நாள் இரவுதான் நத்தார் தாத்தா தனது பரிசு பொதிகளை சுமந்தபடி ஆகாயத்தில் பறந்து வருவார். அவர் குழந்தைகளுக்கு பரிசுகளையும் இனிப்பு பண்டங்களையும் வீடுகளில் வைத்து விட்டு சென்று விடுவார் என்று பல கற்பனை கதைகள் கேட்டிருப்பீர்கள்.

இன்னுமொரு கதையும் உண்டு. நத்தார் தாத்தா உலகத்தில் உள்ள அத்தனை சுட்டிகளின் பெயர்,விபரம் அடங்கிய பட்டியல் வைத்திருப்பாரம்.

அதில் யார்யார் சமத்தான சுட்டிகள் யார்யார் குறும்புத்தனமான சுட்டிகள் என தரம் பிரித்து அதன்படி விளையாட்டு பொம்மைகள்,இனிப்பு வகைகள் கொண்ட பரிசுகளை சமத்தான சுட்டிகளுக்கும் சிலநேரம் நிலக்கரி அல்லது வேறுவகையான பரிசுகளை குறும்புச்சுட்டிகளுக்கு கொடுத்து விடுவாராம். ஆக சமத்தா இருந்தால் நல்ல பரிசுகள் கிடைக்கும்!

அதோடு கிறிஸ்மஸ் தாத்தாவை வைத்து  எடுத்த  பல திரைப்படங்கள், காட்டூன்கள் என நிறையவே பார்த்திருப்போம். அதில் சிலநேரம் உண்மையாகவே சுட்டிகளுக்கு நத்தார் தாத்தா வந்து பரிசுகள் வழங்குவது போன்று காட்சிகள் இடம்பெற்றிருக்கும். 

அதை பார்த்துக்கொண்டிருக்கும் எங்களுக்கும் சிலநேரம் கிறிஸ்மஸ் தாத்தா உண்மையில் எங்களிடமும் வருவது போல் தோற்றும் இல்லையா? அப்படி நடந்தால் எப்படி இருக்கும்! 

ஆகவே நீங்களும் உங்கள் வீடுகளில் கிறிஸ்மஸ் மரம், அலங்காரங்கள் இப்படி ஏதும் செய்து வையுங்கள். கிறிஸ்மஸ் அன்று நீங்கள் காலையில் எழும்பி பார்க்கையில் உங்கள் வீடுகளிலும் பரிசுகள் நிறைந்திருக்கலாம், யாருக்கு தெரியும் அது நத்தார் தாத்தா வைத்து சென்ற பரிசாகக் கூட இருக்கலாம்.

அனைவருக்கும் எனது நத்தார் தின வாழ்த்துக்கள்!



thanks 4.t.media


Wednesday, 21 December 2011

நோக்கியா பிசி சூட் மென்பொருள் புதிய பதிப்பு 7.1.180.46

நோக்கியா பிசி சூட் மென்பொருளானது முக்கியமாக நோக்கியா போன்களில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. விண்டோஸின் அடிப்படையிலான PC பயன்பாடுகளின் தொகுப்பாக உள்ளது. உங்கள் தொலைபேசி மாடல் பொறுத்து அதனை ஒருங்கிணைக்கலாம், உங்கள் தொலைபேசி கோப்புகளை கம்பியில்லா அல்லது கேபிள் இணைப்பு மூலம் இணக்கமாக கணினியில் இணைக்க முடியும்.
அம்சங்கள்:

  • தொலைபேசி கோப்புகளை மீட்க உதவுகிறது
  • தொலைபேசியிலிருந்து படங்கள், மற்றும் இசைகளை கணிணிக்கு  தகவல்கள் பரிமாற்றம் செய்யலாம்,
  • உங்கள் தொலைபேசி மற்றும் PC நாள்காட்டி ஒருங்கிணைக்கலாம்
  • உங்கள் தொலைபேசியில் ஜாவா அடிப்படையிலான பயன்பாடுகளை நிறுவலாம்
  • மல்டிமீடியா செய்திகள் மற்றும் வீடியோக்கள் விளையாடலாம்
  • பிசி இருந்து உரை செய்திகளை அனுப்பலாம்.
  •  உங்கள் தொலைபேசியை மோடமாக பயன்படுத்தலாம்.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:38.69MB

Wednesday, 14 December 2011

வீடியோவில் இருந்து பாடல்களை பிரித்துஎடுக்க இந்த சின்ன சாப்ட்வேர்

சில சமயங்களில் நமக்கு வீடியோபாடல்களில் இருந்து பாடல்கள் மட்டும் தேவைப்படும். அந்த சமயங்களில் நமது வீடியோவில் இருந்து பாடல்களை பிரித்துஎடுக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்..உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில நீங்கள் எந்த வீடியோவின் பாடலை பிரிக்க விருமபுகின்றீர்களோ அந்த வீடியோவினை இங்கு இழுத்துவந்து போடவும்.அல்லது வீடியோவின் லிங்கை இதில் கொடுக்கவும். தேவையான ஆடியோ பார்மெட்டை தேர்வு செய்யவும்.
 சில நிமிடங்களில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் பயன்படுத்தக்கூடிய பார்மெட்டுக்கள் கீழே கொடுத்துள்ளேன்.
எளிய விளக்கத்திற்கு உங்களுக்கு அதற்கான வீடியோ தொகுப்பு கீழே:-



இதே நிறுவனத்தினர் வீடியோ டவுண்லோடர் மற்றும் வீடியோ கன்வர்ட்டர் போன்ற சாப்ட்வேர்களை வெளியிட்டுள்ளார்கள்..அதனைபற்றிய எனது முந்தைய பதிவுகள்.

Tuesday, 13 December 2011

உங்கள் வருங்கால குழந்தையின் முகத்தை பார்க்க வேண்டுமா?


ஒருவருக்கு ஒருவர் சிற்றின்ப ஆசையின் முலமாக உருவாவது தான் குழந்தை. உங்கள் குழந்தையின் முகத்தை பார்க்க எவ்வளவு ஆவலாக இருப்பிர்கள் அல்லவா? இதற்க்காக ஒன்பது மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இனி காத்திறுத்தல் தேவையில்லை பேபி மேக்கர் மென்பொருளின் உதவியுடன் தோராயமாக உங்கள் குழந்தையின் படத்தை உருவாக்குகிறது. எதிர்கால கண்ணோட்டத்தின் முலம் திருப்தியடைந்து கொள்ளலாம் அல்லவா!

இதற்கு உங்களுக்கு இரண்டு புகைப்படங்கள் தேவைப்படுகிறது. 1.ஆண், 2.பெண் இந்த இரண்டு புகைப்படம் மூலம் குழந்தையின் தோராயமான முகத்தை பெறலாம். ஒரு சுட்டியை கிளிக் செய்து ஒரு நிமிடத்தில் உங்கள் குழந்தையின் முகத்தை பார்கலாம். இதன் முடிவுகள் மூலம் நம்பிக்கை அடைந்து உங்கள் மனைவி மீது சந்தேகம் அடைந்து விட வேண்டாம்? இது கணினியின் உதவியுடன் மென்பொருளை பயன்படுத்தி கிடைக்கும் தோராயமான படம் என்பதை மறந்து விட வேண்டாம்.
உங்கள் அனுபவத்தை கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளவும்!
Size:18.28Mb


thanks murugananda

Sunday, 4 December 2011

எளிய முகவரி புத்தக மென்பொருள்


இந்த மென்பொருளானது கையடக்கமான சிறிய மற்றும் சக்தி வாய்ந்த அம்சங்களுடன் கூடிய எளிய முகவரி புத்தகத்தை கொண்டுள்ளது


இயங்குதளம்: விண்டோஸ் 98/2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7.



Size:488KB

போல்டர்களை மறைக்க

போல்டர்களை மறைக்க விதவிதமான சாப்ட்வேர்கள் இருந்தாலும் உபயோகிக்க சுலபமானதாக இந்த சாப்ட்வர் உள்ளது, 2 எம்பிகொள்ளளவை கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும:,இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களிடம் பாஸ்வேர்ட் புதியதாக கேட்கும்.
பின்னர் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
இதில் நீங்கள் மறைக்கவேண்டிய (Hide Folder -Hide Files )பைல் - போல்டர் எதுவாக இருந்தாலும் தேர்வு செய்யவும். பின்னர் வெளியேறவும்.
இப்போழுது நீங்கள் தேர்வு செய்த டிரைவில் சென்று நீங்கள் தேர்வு செய்த போல்டர் - பைலை பார்த்தால் அது அங்கு இருக்காது.மீண்டும் நீங்கள் இந்த அப்ளிகேஷனை திறக்க உங்களுக்கு சிறிய விண்டோ ஒன்று தோன்றும;. அதில் இந்த சாப்ட்வேர் உபயோகிக்க நீங்கள் கொடுத்த பாஸ்வேர் உள்ளீடு செய்யவேண்டும்.
உங்கள் பாஸ்வேரட் தவறானதாக இருந்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
சரியாக இருந்தால் நீங்கள் இந்த சாப்ட்வேருக்குள் செல்லமுடியும். இதன் மூலம் நீங்கள் சுலபமாக போல்டர்களை -பைல்களை மறைக்க -மீண்டும் கொண்டுவர முடியும். பயன்படுத்திப்பாருங்கள

கூகிள் கிளவுட் பிரிண்டர் ( Google Cloud Printer)


நமக்கு வேண்டிய தகவல்களை அச்சிட்டுப் பயன்படுத்த கணிணியில் இணைத்திருக்கும் பிரிண்டரின் (Printer) மூலம் செய்துகொள்கிறோம். வெளியில் வேறு இடங்களில் இணைய மையங்களில் இணையத்தில் உலவும் போது எதாவது ஒரு முக்கியமான தகவலைப் பார்க்கும் போது அதனை அச்சிட்டு வைத்துக் கொள்ள நினைப்பீர்கள் . அந்த இடத்தில் பிரிண்டர் இருந்தால் எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இல்லையெனில் இந்த விசயத்தை அப்படியே மறந்து விடுவீர்கள். 

கூகிள் நிறுவனத்தின் சேவையான Google Cloud Print இதற்கு உதவக்கூடும். முதலில் கிளவுட் அல்லது மேகக்கணிணி என்பது எந்தவொரு கணிணிப் பயன்பாட்டையும் இணையத்திலும் செய்வதாகும்.உதாரணமாக நமது கோப்புகளை இணையத்தில் சேமித்துப் பயன்படுத்துவது ஒரு கிளவுட் பயன்பாடாகும்.

இந்த சேவையில் உங்களிடம் இருக்கும் பிரிண்டரை ஒருமுறை இணையத்தில் இணைத்து விட வேண்டும். பின்னர் உலகில் நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் பிரிண்டருக்கு தகவலை அச்சிடச் சொல்லி கட்டளையிடலாம். உடனடியாக உங்கள் வீட்டு பிரிண்டரில் அச்சிடப்படும். மின்சாரம் இல்லையெனில் மறுபடி மின்சாரம் வந்த பின்னர் தகவல்கள் அச்சிடப்படும். ஆண்ட்ராய்டு ஒஎஸ்க்கு தயாரிக்கப்பட்ட இந்த பயன்பாடு தற்போது கூகிள் நீட்சியின் மூலம் விரிவாக்கப்பட்டுள்ளது. மேலும் கைப்பேசியிலிருந்தும் அச்சிட தகவலை அனுப்பலாம். இதில் doc, pdf, txt போன்ற வகைகளில் முடியும் இணைய முகவரியில் இருக்கும் கோப்புகளை அச்சிடலாம்.
உங்கள் பிரிண்டரை எப்படி Google Cloud Print இல் இணைக்க:

1. கூகிள் கணக்கில் நுழைந்த பின்னர் குரோம் உலவியின் மூலம் கீழே உள்ள சுட்டியில் சென்று உங்களிடம் இருக்கும் பிரிண்டரைத் தேர்வு செய்து இணைக்கவும்.http://www.google.com/landing/cloudprint/win-enable.html

2. கீழுள்ள இணைப்பில் சென்று குரோம் கிளவுட் பிரிண்ட் நீட்சியை Install என்பதைக் கிளிக் செய்து நிறுவிக் கொள்ளவும்.
https://chrome.google.com/extensions/detail/ffaifmgpcdjedlffbhenaloimajbdkfg?hl=en

3. பின்னர் இணையத்தில் நீங்கள் எதாவது ஆவணங்களைப் பார்க்கும் போது குரோம் உலவியின் மேல் வலது புறம் பிரிண்டர் ஐகான் காணப்படும். அதனைக் கிளிக் செய்தால் தகவல்கள் பிரிண்டருக்கு அனுப்பப்படும்.
இந்த சேவையில் எத்தனை பிரிண்டரை வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். பிரிண்டர்களை நிர்வகிக்கவும், அச்சுக்கு அனுப்பியதை கேன்சல் செய்யவும் குரோம் உலவியின் Settings -> Options -> Under the Hood -> Google cloud Print என்பதில் சென்று பார்த்துக் கொள்ளலாம்


thanks ponmalar

Thursday, 1 December 2011

இணையத்தில் உளவு பார்த்தல்


 நாம் தகவல்களைத் தேடி, நண்பர்களைத் தேடி இணையத்தில் உலா வருகையில் நமக்குத் தெரியாமல் பல நிறுவனங்கள் தங்கள் வேவு பார்க்கும் கோப்புகளை நம் கணணியில் பதிக்கின்றன.

நாம் செல்லும் தளங்கள் குறித்து தகவல்களைச் சேகரிக்கின்றன. இவற்றை பின்னர் விற்பனை செய்கின்றன. இந்த தகவல்களைப் பெறும் நிறுவனங்கள் நாம் பார்க்கும் தளங்களின் அடிப்படையில் தங்கள் வர்த்தக ரீதியான விளம்பரங்களை அனுப்புகின்றன.
 
சில நிறுவனங்கள் தாங்கள் இணைய செயல்பாடு குறித்து மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு இந்த தகவல்களைப் பயன்படுத்துகின்றன.
 
நம் கணணியில் நமக்குத் தெரியாமல் நம் செயல்பாடுகள் கண்காணிப்பதற்கு புரோகிராம்களா எனக் கவலைப்படுகிறீர்களா? இவை அவ்வளவு ஒன்றும் நீங்கள் எண்ணும் அளவிற்கு மோசமானவை அல்ல. இத்தகைய குக்கீஸ் புரோகிராம்கள் குறித்து பல மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் உலவி வருகின்றன. அவற்றின் உண்மைத் தன்மை குறித்து இங்கு காணலாம்.
 
1. ஒரு சில நிறுவனங்களே இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் கணணிகளில் அவர்கள் தேடலைப் பற்றி அறிய குக்கீஸ்களை அனுப்புகின்றன. இது உண்மைக்கு மாறான தகவல். 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வேலையில் ஈடுபடுகின்றன. Adfonic, Clicksor, or VigLink என்ற பெயர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை.
 
ஆனால் அவை உங்களைப் பற்றி அறிந்திருப்பார்கள். இவை எல்லாம் இணையச் செயல்பாட்டினைக் கண்காணிக்கும் வகையில்(Web tracking) செயல்படுபவை.
 
2. இந்த கண்காணிக்கும் நிறுவனங்கள் உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து வைத்துள்ளன. இது பொய். இத்தகைய குக்கீஸ் புரோகிராம்கள் உங்களைப் பின் தொடர்ந்து வருவது இல்லை. உங்கள் பிரவுசர்கள் இயங்கு வதைத்தான் கண்காணிக்கின்றன.
 
அந்த பிரவுசரை மற்றவர்கள் உங்கள் கணணியில் பயன்படுத்துகையில் உங்களைப் பற்றி அறிய வாய்ப்பில்லையே. மேலும் நீங்கள் மற்றொரு பிரவுசரைப் பயன்படுத்து கையில் உங்கள் தேடல்கள் என்ன வென்று அறியவும் சந்தர்ப்பம் இல்லை.
 
பொதுவாக இவை ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட விருப்பத் தேடல்களை அறிவதில்லை. ஒவ்வொரு கணணிக்கும் ஒரு தனிப்பட்ட அடையாள எண்ணைப் பதிவு செய்து அந்த எண்ணின் அடிப்படையில் தான் தகவல்களைச் சேகரிக்கின்றன.
 
3. இணையக் கண்காணிப்பு புரோகிராம்கள் உங்கள் தனிநபர் விருப்பங்கள் பற்றி அறிந்து வைத்திருப்பதில்லை. ஏனென்றால் அவற்றை அனுப்பிய நிறுவனங்களுக்கு நீங்கள் யார் என்பது தெரியாது. இதில் பாதி உண்மை, பாதி உண்மை அற்றது.
 
நீங்கள் இணையத்தில் கிளிக் செய்திடும் தளங்களுக்கான லிங்க்ஸ் பற்றி தகவல்கள் சேர்க்கப்படுகையில், உங்களின் தனி நபர் விருப்பங்கள் பட்டியலிடப்பட்டு தொகுக்கப்படுகின்றன. உங்களை அடையாளம் காட்டும் மின்னஞ்சல் முகவரிகள் போன்றவையும் அவற்றின் வசம் கிடைக்கின்றன. எனவே ஓரளவிற்கு உங்கள் விருப்பங்களும் இந்த குக்கீஸ் மூலம் அவற்றை அனுப்பிய நிறுவனங்களுக்குச் செல்கின்றன.
 
ஆனால் இந்த நிறுவனங்கள் தனிநபர் விருப்பங்களைப் பயன்படுத்துவதில்லை. எத்தகைய தகவல்கள் மற்றும் விளம்பரங்களை நீங்கள் பார்க்கிறீர்கள் என்பதை மட்டும் கணித்து அவற்றை வேண்டுவோருக்கு அளிக்கின்றன.
 
4. இவற்றைத் தடை செய்திட சட்டத்தில் இடம் உள்ளது. இது உண்மை அல்ல. இணையத்தில் இத்தகைய செயல்பாடு களைத் தடை செய்திடும் சட்டம் இல்லை. அப்படியே வேறு சட்டப் பிரிவுகளுக்குள் இந்த செயல்பாட்டினைக் கொண்டு வந்தாலும் இதனை நிரூபிப்பது கடினம்.
 
5. கைபேசியில் இருப்பது போல எனக்கு விளம்பரங்கள் வேண்டாம் எனத் தடை செய்திட முடியுமா? அந்த வசதி இல்லை. இணையக் கண்காணிப்பில் இருந்து உங்களைப் பிரித்துக் கொள்ளும் வசதி இல்லை.
 
ஆனால் இத்தகைய குக்கீஸ்களை அடையாளம் கண்டு கொண்டு, அவற்றை உங்கள் அனுமதியுடன் நீக்கும் புரோகிராம்களைக் கணணயில் நிறுவச் செய்து அவ்வப் போது இயக்கினால் நாம் இதிலிருந்து மீளலாம்.
 
6. இந்த கண்காணிக்கும் புரோகிராம்களைத் தடை செய்தால் இணையத்தில் விளம்பரங்கள் மறையும். வருமானம் குறைவதால் ஒவ்வொரு இணைய தளத்தினையும் பணம் செலுத்தித்தான் பார்க்க வேண்டும். இதுவும் தவறான ஒரு கருத்தாகும். இது விளம்பரங்களை அனுப்பிப் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் இட்டுக் கட்டிய கதை.
 
விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கும் நிறுவனங்களுக்கும் இணையம் தொடர்ந்து இயங்குவதற்கும் அப்படிப்பட்ட ஓர் அடிப்படையான அமைப்பு இல்லை.

Thursday, 10 November 2011

தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது ?

நாம் பயன்படுத்தும் அல்லது வாங்கும் நோக்கியா மொபைல் தரமானதா என்றுஎப்படி தெரிஞ்சுகொள்வது கடைகாரர் எல்லா போன்களும்

தரமானதுதான்னு சொல்லுவார் உங்கள் நோக்கியா போனின் தரத்தை
எளிதாக கண்டுபிடிக்கலாம் .கடைகாரரிடம் போனை வாங்கி *#06# டயல் செய்ங்க. சில எண்கள் வரும்

இதை "IMEI" நம்பர் என்று சொல்லுவாங்க. (International Mobile Equipment Identity) (கேள்விபட்டுருபீங்க).பிறகு அந்த எண்களில் ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கங்களை பாருங்கள்.
Phone serial no. x x x x x x ? ? z z z z z z z
(XXXXXX - Approval code, ZZZZZZZ - Serial number)

ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கம்

0 2 அல்லது 2 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு EMIRATES ,தரம் : மோசம்

0 8 அல்லது 8 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு GERMANY , தரம் : சுமார்

0 1 அல்லது 1 0 என்றால் அந்த போன் தயாரான நாடு FINLAND ,தரம் : நல்ல தரம்

0 4 என்றால் அந்த போன் தயாரான நாடு CHINA . தரம் : நல்ல தரம்
( CHINA என்றதும் பயப்பட வேண்டாம்.அதனுடைய software வேறு நாட்டில் தாயரிக்கபட்டது.)


0 3 என்றால் அந்த போன் தயாரான நாடு KOREA . தரம் : நல்ல தரம்

0 5 என்றால் அந்த போன் தயாரான நாடு BRAZIL . தரம் : சுமார்


0 0 என்றால் அந்த போன் ஒரிஜினல் நோக்கியா தொழிற்சாலையில் தயாரானது. தரம் : மிக மிக நல்ல தரம், மற்றும் உடலுக்கு எந்த தீங்கும் இழைக்காதது.
1 3 என்றால் அந்த போன் தயாரான நாடு AZERBAIJAN ,தரம் : மிக மோசமான தரம்.எளிதில் பழுதடையும் . மேலும் உங்கள் உடலுக்கு தீங்கானது.

இனிமேல் NOKIA MOBILE வாங்க சென்றால் இந்த எண்களை மறக்காமல் எழுதிக்கொண்டு போங்க. பதிவு பயனுள்ளதாக இருந்துருக்கும் என நம்புகிறேன்-----

Wednesday, 9 November 2011

கூகுள் + இன் மற்றுமொரு புதுவசதி .

கூகுளின் சமூக வலையமைப்பான கூகுள் +, பேஸ்புக்கிற்கு போட்டியாக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றது.இந்நிலையில் வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் அமைப்புக்கள் தங்களுக்கென கூகுள் + இல் ஒரு பக்கத்தினை உருவாக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலவசமாகவே இவ்வசதியினை வழங்குவதாகவும், இதற்கான பக்கத்தில் விளம்பரங்களைக் காட்சிப்படுத்தப் போவதில்லையெனவும் கூகுள் அறிவித்துள்ளது.

இதே போன்ற வசதியினை பேஸ்புக் ஏற்கனவே வழங்கி வருகின்றது.

கூகுள் + அதிவேகமாக வளர்ந்துவரும் ஒரு சமூக வலையமைப்பு. தற்போது இதன் பாவனையாளர்களின் எண்ணிக்கை 40 மில்லியனாகும்.

எனினும் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை இதனை விட பலமடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது.

கூடிய விரைவில் இது பேஸ்புக்கிற்கு பலத்த சவாலளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

thanks blogs

இலவச பூதக்கண்ணாடி.

அந்தகாலங்களில் 40 வயதுக்கு மேல்தான் கண்ணாடி அணிவார்கள். இன்று சிறுவயதிலேயே கண்ணாடி அணிந்துகொள்கின்றனர்.சமயங்களில் நாம் கம்யூட்டரில் பணிபுரியும் சமயம் கண்ணாடி இல்லாமல் -கண்ணாடியை மறந்து விட்டிதருந்தால்-இந்த சின்ன சாப்ட்வேர் உங்களுக்கு உதவிபுரியும். 1 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓபபன் ஆகும்.இதில் நாம் பார்க்கும் லென்ஸின் அளவினை வேண்டிய அளவிற்கு நாம் அதிகரித்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மிக பெரியான அளவிற்கு உயரம் அகலத்தை அமைத்துக்கொள்ளலாம்.
சிறிய அளவிலும் நாம் அமைத்துக்கொள்ளலாம்.கர்சரை நகர்தத நமக்கு வியுவில் தெளிவாக தெரியும்.
இதிலேயே இன்வர்ட் கலரும் உள்ளது.சாதாரண மெக்னிபையிங் கிளாஸ்ஸில் உருவத்தை பெரியதாக்கிதான் காண்பிக்கும். இதில் நமக்கு தேவையான பிக்ஸல் அளவினை வைத்து-உருவங்கள் பெரிய அளவிளான பிக்ஸல்அமைத்தால் எவ்வாறு தெரியும் என இதில் எளிதில் அறிந்துகொள்வது இதில கூடுதல் வசதியாகும். பயன்படுத்திப்பாருங்கள்.

thanks net

இணைய வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா?

நுட்பம் அதிவேகத்தில் வளர்ந்து வரும் இன்றைய உலகில் அனைத்துத் துறைகளும் கணினிமயம் ஆவதுடன், உலகில் எந்த மூலையில் இருந்தும் சேவைகளைப் பெறுமாறு இணையத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. வங்கியியலும் இதிலிருந்து விதிவிலக்காக முடியுமா என்ன? இன்று அனைத்துப் பிரபலமான வங்கிகளும் தமது வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய சேவைகளான மின்சாரப் பயனீட்டுக்கட்டணம், ரயில் பயணச்சீட்டு, விமானப்பயணச்சீட்டு எனப் பல சேவைகளுக்கான கட்டணத்தை இணையத்தின் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் பயன்பெறுமாறு தமது வங்கிக்கணக்கு வசதிகளை அமைத்துள்ளன.

இதற்காக தனது வங்கிக்கணக்குகளை இணையம் மூலமாகவே கையாளும் முறையையும் வங்கிகள் அறிமுகப்படுத்தி உள்ளன. பணத்தைக் கையால் தொடாமலே இன்றைய உலகில் சம்பாதிப்பதும் அதனைச் செலவு செய்வதும் பரவலாக நடந்து வருகிறது. இதில் இவ்வளவு வசதிகள் இருந்தாலும், இதில் சிக்கல்களும் இல்லாமல் இல்லை. நுட்பத்தினால் வசதிகள் வளரும்போது அதனைத் தவறாகப் பயன்படுத்தி பணத்தைக் கையாடல் செய்யும் தீயவர்களின் உத்தியும் அதனுடனேயே வளர்கிறது. எனவே வங்கிக் கணக்குகளுக்கான கடவுச் சொற்களையும் (Passwords) கடன் அட்டை (Credit card) எண்களையும் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும். அவை தீயவர்களின் கையில் சிக்கினால் அவற்றின் மூலம் பணக்கையாடல் செய்து திருட்டுகள் செய்யவும் வழிகோலுகிறது.

வங்கிகள் பலவும் தங்கள் வாடிக்கையாளர்கள் இந்த முறையில் பணபரிமாற்றம் செய்வதையும், வங்கி கணக்குகளை கையாள்வதையும் பெரிதும் ஊக்கப்படுத்தி வருகின்றன. இந்த இணைய வழி பரிமாற்றம் முதலீட்டு சந்தை வர்த்தகத்திலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த முறை மிக வசதியாய் இருப்பதால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் வங்கிகளில் நடைபெற்ற அடையாளத் திருட்டு (Identity Theft) மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வங்கிக் கணக்கு விபரங்களை (Account Details) மின்னஞ்சலில் கேட்டு வங்கி முகவரியிலிருந்து வருவது போல் பாவனை செய்து வரும் கடிதங்களுக்கு பதில் அனுப்பும் போதே இது போன்ற திருட்டுக்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற கடிதங்கள் வரும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

எந்த ஒரு பொறுப்புள்ள வங்கியும் தனது வாடிக்கையாளரின் கடவுச் சொல்லைக் கேட்டு மின்மடல் அனுப்பவோ அல்லது தொலைபேசி மூலம் அழைப்போ செய்யாது. அவ்வாறு கடவுச் சொல் போன்ற தனிப்பட்ட தகவல்கள் (Private credentials) கோரப்பட்டால் நிச்சயம் அது திருட்டு முயற்சியாகத் தான் இருக்கும். எனவே இது போன்ற மின்மடல்கள், தொலைபேசி அழைப்புகள் வந்தால் கவனமாக இருக்கவேண்டும். இந்த வகை தகவல் திருட்டுக்களால் நாட்டின் முன்னேற்றம் பெரியளவில் பாதிக்கப்படுகிறது. இணைய வழி அரசு நிர்வாகம் மற்றும் இணைய வழி பணப்பரிமாற்றம் ஆகியவற்றின் நம்பகத்தன்மை முழுவதுமாகவே சந்தேகத்திற்கு உள்ளாகி விடுகிறது.

மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் பகிர்ந்து கொள்ளக் கூடாத தகவல்களான இவற்றை சிலர் இவை மறக்காமல் இருக்க காகிதங்களில் எழுதி வைத்துள்ளதையும் காணலாம். இதுவும் தவறான வழிமுறையாகும். இது தீயவர் எவரது கையில் சிக்கினால் ஆபத்து தான். கடினமான கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுப்பதுடன் அவற்றை மனனம் செய்து வைத்துக் கொள்ளுதலே சிறந்தது. இணைய உலாவு மையங்களில் (Browsing centers) இதுபோன்ற வங்கி தொடர்பான பரிமாற்றங்களைச் செய்யாமல் இருப்பதே சிறந்தது.

சில வங்கிகள் இது போன்ற கையாடல்களைத் தடுக்க பண அளவுக்கான உச்சவரம்பு விதித்துள்ளன. ஒவ்வொரு பரிமாற்றத்தையும் குறுஞ்செய்தி (SMS) மூலம் தெரிவிக்கும் வசதியையும் பெரும்பாலான வங்கிகள் அளிக்கின்றன. இதனையும் பயன்படுத்தி விழிப்புடன் இருக்க இயலும்.

இவை தவிர தொழில்நுட்ப வழியில் செய்யப்படும் கயமைத் தனங்களை (fraud) புகார் செய்ய காவல் துறையின் இணையக்குற்றப் புலனாய்வுப் (Cybercrime) பிரிவும், வங்கியின் தகவல் தொழில்நுட்பத் துறையும் இணைந்து செயலாற்ற வேண்டும்.

வங்கிகளும் அதிகப் பாதுகாப்பு நிறைந்த 128 படி சங்கேதக்குறியேற்றம் (128 bit encryption) கொண்ட மென்பொருள்களைப் பயன்படுத்துவதோடு வெரிசைன் (Verisign) தாவ்டே (thawte) போன்ற பிரபல இணைய எண்குறியேற்ற சான்றிதழ்களையும் (Digital certificates) பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் மன நிம்மதியுடன் வங்கிகளை இணையத்தில் பயன்படுத்த ஆவன செய்யவேண்டும்.

அதோடு நாம் வங்கியின் பாதுகாக்கப்பட்ட இணையப்பக்கத்தில் (secure webpage) தான் இருக்கிறோமா என்று பயனர்களும் கவனிக்க வேண்டும். (இதனை வங்கிகள் https:// என்று தொடங்கும் பக்கமாக வைத்திருக்கின்றன. இதனையும் கவனித்தல் அவசியம்) நமது கடவுச்சொல்லை அடிக்கடி மாற்றிவர வேண்டும். நமது பணி முடிந்தவுடன் அனைத்து திரைகளையும் முடிவிட வேண்டும். மேலும் உலாவியின் (browser) தற்காலிக சேமிப்புப் பக்கங்களையும் (cache) அழித்துவிடவேண்டும்.

இதுபோன்ற சில குறிப்புகளை பின்பற்றுவதால் பாதுகாப்பான முறையில் இணைய வழி வங்கிக்கணக்கை பராமரிக்கவும், பாதுகாக்கவும், பயனீட்டவும் முடியும். பல இணைய வழி பணபரிமாற்றத்தை நம்பிக்கையுடன் கையாளவும் முடியும்.

Sunday, 6 November 2011

பேஸ்புக்கிலிருந்து வரும் தேவை இல்லாத இமெயில்களை தடுப்பது எப்படி?

இன்றைய இணைய யுகத்தில் பேஸ்புக் பயன்படுத்ததாவர் எவருமே இருக்க மாட்டார். அதனால் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளது. முக்கியமானது தேவை இல்லாமல் மின்னஞ்சல்கள் வருவது.அதை எப்படி தவிர்ப்பது என்று சொல்வதேஇந்தப் பதிவு. 


பேஸ்புக் மூலம் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது நம்  நண்பர்கள் நம் ஸ்டேட்டஸ் மீது ஒரு கிளிக் செய்தாலே நமக்கு மின்னஞ்சல் வருவது. இதை எப்படி தடுப்பது என்றுதான் இன்றைய பதிவு.முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழையவும்.


மேலே உள்ளது போல பக்கத்தின் வலது பக்கம் Home என்பதற்கு அருகில் சொடுக்கவும் செய்து Account Settings  செல்லவும். இதில் இடது புறம் Notifications என்பதை  சொடுக்கவும்



இப்பொழுது, இதில் மேலே படத்தில் உள்ளதை போல Email Frequencyஎன்பதை சொடுக்கவும். இதன் மூலம் உங்களுக்கு ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல் வராது, மாறாக Photo Tag, Payment Confirmation, Security, and Privacy Notifications மற்றும் சில முக்கியமான செய்திகள் (இது நீங்கள் ரொம்ப நாளாக பேஸ்புக் பக்கம் வராவிட்டால் பிரபல செய்திகள், உங்கள் சுவற்றில்(Wall) நண்பர்கள் எழுதியது போன்றவை ஒரே மின்னஞ்சலில் வரும் )

எந்த மின்னஞ்சலும் வேண்டாம் என்பவர்களும் இதையே தெரிவு செய்து கொள்ளலாம். 

இல்லை எனக்கு சில விஷயங்கள் மின்னஞ்சலில் வர  வேண்டும் என்று கேட்பவர்கள் இதனைசொடுக்கமல் விட்டு கீழே All Notifications என்ற பகுதியில் உங்களுக்கு தேவையான ஒன்றின் மீது (Photos, Pages இது போன்று ) கிளிக் செய்து தேவையான Notification தெரிவு செய்து Save செய்து விடுங்கள். இதன் மூலம் உங்கள் விருப்பமானவற்றை மட்டும் மின்னஞ்சலில் பெறலாம். 

சைட் டிஷ்: 

மிக முக்கிய காரியம் முடிந்து விட்டது இனி குட்டி தகவல்கள். 

Facebook அக்கவுண்ட் Email முகவரியை மாற்றுவது எப்படி? 

Facebook => Account Settings => Email இதில் உங்கள் Primary இமெயில் ஆக ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே இருந்தால் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்கள், இல்லை புதியதாக ஒன்றை கொடுத்து (Add Another Email) Primary ஆக மாற்றிக் கொள்ளலாம். 

நமது பேஸ்புக் கணக்கை வேறு யாரேனும் பயன்படுத்துகிறாரா என்று அறிவது எப்படி?

Facebook => Account Settings => Security => Login Notifications இதை enable செய்யவும். இதன் மூலம் உங்கள் கணக்கில் நீங்கள் இதுவரை பயன்படுத்தாத கணினியில் இருந்து Log-in செய்தால் உங்களுக்கு மின்னஞ்சல் வந்துவிடும். (கவனிக்க. வேறு கணினி, உங்கள் கணினி அல்ல)

இதை Enable செய்த உடன் ஒருமுறை Log-அவுட் செய்து பின்னர் நுழையவும், அப்போது உங்கள் கணினிக்கு ஒரு பெயர் கேட்கும் கொடுத்து விடுங்கள். 

கடந்த நுழைவுகளை பார்ப்பது எப்படி? 

Facebook => Account Settings => Security => Active Sessions இதில் நீங்கள் உங்கள் கணக்கில் நுழைந்த வேறு வேறு இடம்/கணினி மூலம் நுழைந்து இருந்தால் அவற்றை காட்டும், எது வேண்டாமோ அல்லது சந்தேகமோ அதை End Activity கொடுத்து விடலாம். 

பேஸ்புக் App's களுக்கு கடவுச்சொல் வைப்பது எப்படி? 

சில பேஸ்புக் பயன்பாடுகள் (Applications) Secure ஆனது அல்ல. எனவே அவற்றுக்கு கடவுச்சொல் கொடுத்தால் நல்லது தானே.  Facebook => Account Settings => Security => App Passwords இதில் பயன்பாட்டின் பெயரைக் கொடுத்து விட்டால் போதும்.